உயிர்வழிப்பெருக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உயிர்வழிப்பெருக்கம் (Biomagnification) என்பது உயிர்களில் பெருக்கமடைதல் அல்லது உயிரினங்களில் மண்டிப் பெருக்கமடைதல் எனலாம். உயிர்வழிப்பெருக்கம் என்பது சிதைக்கமுடியாத, ஆனால் உயிர்களில் ஆற்றல் கொண்ட வேதிச்சேர்மம் இயற்கை/சூழ்நிலைக்காரணிகளுக்கு அப்பாற்பட்டு, சுற்றுப்புறத்தில் உள்ள அளவைக்காட்டிலும் பன்மடங்கு பெருகி அவை உயிர்களுக்குள் மண்டுவதே உயிர்வழிப்பெருக்கமாகும்.
இவைகளால் சமுதாயத்திற்கு, இயற்கைக்கு, உயிரினங்களுக்கு ஊறுகளே அதிகம். இவை பெரும்பாலும் உணவுச் சங்கிலி அல்லது உணவு வலையில் உள்ள அடிப்படை உயிர்களிலிருந்து மென்மேலும் அவ்வலையில் உள்ள மேலுயிர்களில் பெருகுவதேயாகும். இது குறிப்பாக உணவுசார்ந்து நிகழும் ஒரு மாற்றமாகும்.
இதன் தொடர்புள்ள வேறுப் பெயர்கள்:
- உயிரிகளில் திரட்டு - இவ்வுணவுவலையில்/உணவுச்சங்கிலியில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட உயிரினங்களில் பல்கிப்பெருகுவதே ஆகும்.
- உயிரிகளிலடர்த்தி - இது உணவு சார்ந்தல்லாமல், உயிர்களில் நேரடியாக அதன் திசுக்கள், செதில்கள், செவுள்களில் அண்டுவதுமே யாகும்.
- உயிரிகளில்நீர்த்தல் - இது உணவுச்சங்கிலியில் மேலுயிர்களுக்குச் செல்லும்போது வேதிப்பொருளின் அடர்த்தி குறைதலேயாகும்.
Remove ads
காரணம்
இவை பெரும்பாலும் இயற்கையாய் நிகழ்வதில்லை. இது மனிதனின் தலையீட்டால் நிகழக்கூடிய செயல்களுள் ஒன்று. மனிதன் கண்டுபிடிக்கும் பொருட்களில் சில, இயற்கையில் அதன் விளைவறியாமல் பரப்பப்படும் போது நேரடியாக அச்சூழ்நிலையில் மனிதனுக்கு ஊறுகளை விளைவிப்பதில்லை. ஆனால் இவை பரவி பிற உயிர்களை அழிக்கின்றன. அவை மீண்டும் வேறு வழிகளில் மனிதனை திரும்ப வந்தடைகிறது. அவ்வாறு வரும் பொருளானது உயிர்களில் தங்கி பாதிப்புகளை நிகழ்த்துகின்றன. இப்பொருட்கள் பின்வரும் முக்கிய தன்மைகளைக் கொண்டிருப்பதனால், இவ்வாறான நிலை ஏற்படுகின்றது.
- பொருளின் நிலைத்தன்மை
- இயற்கையால் சிதைக்கமுடியா நிலை
- உணவுகளில் கலப்பு
- உயிர்களில் ஆற்றலுள்ளவைகள்
- உயிர்களில் தங்கும் தன்மை
மனிதனின் தரமறியா கண்டுபிடிப்பும், சுயலாபமும் இத்தகைய ஊறு விளைவிக்கும் உயிர்வழிப் பெருக்கத்தில் முக்கிய பெரும் பங்கு வகிக்கின்றன.
Remove ads
பெருகும் பொருட்கள் சில
இவ்வாறு இயற்கையில் சுதந்திரமாய் உலாவவிடும் பொருட்களின் எண்ணிக்கை நாளும் கூடிக்கொண்டே செல்கிறது. அவைகளை பொருட்களின் தன்மையை வைத்து இருவேறாகப் பிரிக்கலாம். கரிம/அங்ககப்பொருள் மற்றும் கனிம/அனங்ககப்பொருள் என வகுக்கின்றனர்.
கரிமப்பொருள்
- இஇசாசே - இருபசிய (குளோரோ) இருபினால் சாணவாயுச்சேர்மம் என்னும் பூச்சிக்கொல்லி (DDT - DichloroDiphenylTrichloroethane)
- ஆபெசே -ஆறுபசிய பென்சீன் சேர்மம் (HCB - Hexachlorobenzene)
- பஇசே - பலபசிய இருபினைல்ச் சேர்மம்(PCB PolyChlorinated Biphenyl)
- டாக்சாபீன் - (Toxaphene) 200க்கும் மேற்பட்ட சேர்மத்தின் பொதுப்பெயராகும்
- சாணவாயுபாதரசச் சேர்மம் - Methylmercury
இவ்வகையான கரிமவேதியியல் சேர்வைகள் இயற்கையில் பல்கிப்பெருகி பல இடங்களில் பல இயற்கைப் பேரழிவுகளை ஏற்படுத்திவருகின்றன.
கனிமப்பொருட்கள்
- பாதரசம் (Mercury)
- ஆர்செனிக் (உள்ளீயம்/ஆரிதார நஞ்சு) - (Arsenic)
- வெண்நீலத்தாது (காட்மியம் - Cadmium)
- செலினியம் (Selenium)
உட்பட பல தனிமங்களும் இவ்வகையான உயிர்வழிப்பெருக்கத்துக்கு உட்படுகின்றன.
Remove ads
உதாரண நிகழ்வுகள்/தீமைகள்
- மினமாட்டா கொள்ளை நோய் - என்னும் நோய் சப்பானில் உள்ள மினமாட்டா என்னும் தீவில் பாதரசேற்றத்தால் ஏற்பட்ட நோயாகும். இவைகளால் பல உயிர்ச்சேதங்களும் இயற்கை உபாதைகளும் இன்றளவும் நிகழ்ந்தவண்ணமுள்ளன. ஆலைக்கழிவில் இருந்து வெளிப்பட்ட பாதரச மாசானது குளங்களில் நிரம்பி அதை உண்ட மக்களும், மீன்களும் இறந்தும்; வாதம் முதலான பல நோய்களைப் தாக்கியும் வருகின்றன.
- டைக்லோஃபீனாக் (Diclofenac) - இருபசியானிலின பீனால்காடிச் சேர்மம் என்னும் அழற்சி நிவாரண வேதிப்பொருள் விலங்குகளில் அதிக பயன்பாட்டால், அவ்வுயிர்களின் திசுக்களில் மண்டியது. இது இறந்தவுடன் இதன் இறைச்சிகளை உண்ணும் பறவைகளில் (குறிப்பாக பிணந்தின்னிக் கழுகு என்னும் இனம் (உயிரியல்)) இந்தப் பொருள் அதிகரித்ததால் அவை பாதிக்கப்பட்டன. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்தியாவில் 99.9% கழுகு இனம் அழிந்துவிட்டது. இது தீமை அறிவதற்குள் நடந்த இயற்கைப் பெருங்கொடூரமாகும். இவ்வினத்தை மிக அருகிய இனமாக அறிவித்துள்ளனர்.
- எண்டோசல்பான் - கந்தகத்தாலான பூச்சிக்கொல்லி ஆகும். இவை விவாசயத்தில் அதிகமாக பயன்படுத்தப் பட்டுவருகிறது. இதன் தீமை பலவாக அறிந்தாலும் இவைகளை தடுக்க அரசாங்கம் முனைப்பு குறைவாகவே காணப்படுகிறது. இது கேரள மாநிலத்தில் தடை செய்யப்பட்ட மருந்தாகும். இது கலந்துள்ள உணவை உட்கொள்வதனால் மலட்டுத்தன்மை, பக்கவாதம், முடக்குவாதம் போன்றன ஏற்படுவதுடன், பிறக்கும் குழந்தை பிறவி ஊனத்துடன் பிறக்கும். இதனால் ஏற்பட்ட பாதிப்பை கேரள மாநிலமான காசர்கோடு பகுதியில் கண்கூடாகக் காணமுடியும்.
- இஇசசே - ஒரு தடவை பயன்படுத்திவிட்டாலோ/உருவாக்கிவிட்டாலோ முழுதாக சிதைவதற்கு நூறாண்டுகளுக்கும் மேல் பிடிக்கும். இது ஒரு பூச்சிக்கொல்லியாகும். நாம் உண்ணும் அன்றாட உணவில் அதிகளவில் இது சேர்ந்துவிட்டது. இதனால் ஏற்படும் தீமை அளவிட முடியாதது.
இதைப்போல், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் பரவலான பொருள் நெகிழியாகும். இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருளில் உண்டாலா, அருந்தினாலோ இதில் உள்ள சேர்மங்கள் உணவின் வழியாக சிறிதுச் சிறிதாக உடலில் கலக்கின்றன. இதில் உள்ள சேர்மம் பெண் இயக்குநீர்களின் உருவப்பண்புகளை ஒத்துள்ளதால் இவை ஆண்களுக்கு மலட்டுத்தன்மையையும், பெண்பண்புகளையும் கூட்டவல்லது.
தடுக்கும் முறை
இயற்கையில் தீப்பொருட்களை கட்டுப்படுத்துதல், இது குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தல், சட்டங்களின் மூலம் இத்தகு பொருட்கள் பரவாமல் தடுத்தல், பொருட்களின் தன்மைகளை நன்காய்ந்த பின்னர் வெளியிடல் ஆகியவை உயிர்வழிப்பெருக்கத்தை தடுக்க சில வழிகள்
மேற்கோள்கள்
- Croteau, M., S. N. Luoma, and A. R Stewart. 2005. Trophic transfer of metals along freshwater food webs: Evidence of cadmium biomagnification in nature. Limnol. Oceanogr. 50 (5): 1511-1519.
- EPA (U.S. Environmental Protection Agency). 1997. Mercury Study Report to Congress. Vol. IV: An Assessment of Exposure to Mercury in the United States . EPA-452/R-97-006. U.S. Environmental Protection Agency, Office of Air Quality Planning and Standards and Office of Research and Development.
- Fisk AT, Hoekstra PF, Borga K,and DCG Muir, 2003. Biomagnification. Mar. Pollut. Bull. 46 (4): 522-524
- Gray, J.S., 2002. Biomagnification in marine systems: the perspective of an ecologist. Mar. Pollut. Bull. 45: 46–52.
- Landrum, PF and SW Fisher, 1999. Influence of lipids on the bioaccumulation and trophic transfer of organic contaminants in aquatic organisms. Chapter 9 in MT Arts and BC Wainman. Lipids in fresh water ecosystems. Springer Verlag, New York.
- Suedel, B.C., Boraczek, J.A., Peddicord, R.K., Clifford, P.A. and Dillon, T.M., 1994. Trophic transfer and biomagnification potential of contaminants in aquatic ecosystems. Reviews of Environmental Contamination and Toxicology 136: 21–89.
Remove ads
மேலும் படிக்க
- http://www.wildlifeextra.com/go/news/news-asianvultures.html#cr
- http://pubs.usgs.gov/fs/1995/fs216-95/
- https://web.archive.org/web/20101201054111/http://bushwarriors.wordpress.com/2010/11/26/%E2%80%98die%E2%80%99-clofenac-human-wonder-drug-hurling-india%E2%80%99s-vultures-toward-extinction/
- http://www.birdlife.org/action/science/species/asia_vulture_crisis/diclofenac.html பரணிடப்பட்டது 2011-05-03 at the வந்தவழி இயந்திரம்
- http://www.solidarityym.org/morenews1.php?nid=127%5Bதொடர்பிழந்த+இணைப்பு%5D
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads