பாதரசம்

வேதித்தனிமம் From Wikipedia, the free encyclopedia

பாதரசம்
Remove ads

பாதரசம் (Mercury) என்பது Hg என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதித் தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 80 ஆகும். முற்காலத்தில் இதை ஐதராகிரம் என்று அழைத்தார்கள்.[1] பாதரசம் ஒரு கனமான உலோகமாகும். வெள்ளியைப் போன்ற நிறம் கொண்ட டி- தொகுதியைச் சேர்ந்த தனிமமும் ஆகும். சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திரவ நிலையில் உள்ள ஒரே உலோகம் பாதரசம் என்பது இதன் சிறப்பாகும். இதே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திரவ நிலையில் உள்ள அலோகம் புரோமின் ஆகும். அறை வெப்பநிலையைக் காட்டிலும் சற்று உயர்ந்த வெப்பநிலையில் சீசியம், காலியம், ருபீடியம் உள்ளிட்ட உலோகங்கள் உருகத் தொடங்கி விடும்.

விரைவான உண்மைகள் பாதரசம், தோற்றம் ...

பாதரசம் உலகம் முழுவதும் சின்னபார் என்ற சல்பைடு தாதுவின் வைப்பிலிருந்துதான் பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது. இயற்கையாகக் கிடைக்கும் சின்னபார் தாதுவை அல்லது செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பாதச சல்பைடை அரைத்து வெர்மிலியான் என்ற சிவப்பு நிறமி தயாரிக்கப்படுகிறது.

வெப்பமானிகள், அழுத்தமானிகள், காற்றழுத்தமானிகள், நாடியழுத்தமானிகள், மிதவை அடைப்பான்கள், பாதரச மின்விசைக் குமிழ்கள், பாதரச சுற்றுகள், ஒளிரும் விளக்குகள் போன்றவற்றில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் பாதரசத்தின் நச்சுத்தன்மை பற்றிய கவலைகளால் பெரும்பாலும் மருத்துவ சூழல்களில் பயன்படுத்தப்படும் பாதரச வெப்பமானிகள் மற்றும் நாடித்துடிப்புமானிகளில் ஆல்ககால்கள் அல்லது திரவக் கலப்புலோகமான கேலின்சுடன் நிறப்பப்பட்ட கண்ணாடி வெப்பமானிகள் மற்றும் தெர்மிசுடார் அல்லது அகச்சிவப்பு சார்ந்த மின்னணு கருவிகள் படிப்படியாக பாதரசத்துக்கு மாற்றாக பயன்படத் தொடங்கியுள்ளன. இதேபோல் இயந்திர அழுத்த அளவிகள் மற்றும் மின்னணு திரிபு அளவி உணரிகள் உள்ளிட்ட கருவிகள் பாதரச நாடியழுத்தமானிகளை இடப்பெயர்ச்சி செய்து விட்டன. அறிவியல் ஆய்வு பயன்பாடுகளிலும் பல் மருத்துவத்திலும் மட்டும் பாதரசம் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒளிரும் விளக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஓர் ஒளிரும் விளக்கில் உள்ள பாதரச ஆவி வழியாக மின்சாரம் பாயும்போது குறுகிய-அலை நீளமுள்ள புறஊதா ஒளி உருவாகிறது, இவ்வொளி குழாயிலுள்ள பாசுபர் ஒளிர்ந்து வெளிச்சம் உண்டாகிறது.

பாதரச குளோரைடு அல்லது மெத்தில் மெர்க்குரி போன்ற நீரில் கரையும் பாதரச உப்புகள் வெளிப்படுவதாலும், பாதரச ஆவியை சுவாசிக்க நேர்வதாலும், ஏதாவது ஒரு வடிவத்தில் பாதரசம் உட்செலுத்தப்பட்டாலும் பாதரச நச்சுத்தன்மை நமக்குத் தோன்றுகிறது.

Thumb
பரப்பு இழுவிசை மற்றும் மிதக்கும் விசை போன்ற காரணங்களால் நாணயம் ஒன்று பாதரசத்தில் மிதக்கிறது.
Remove ads

பண்புகள்

இயற்பியல் இயல்புகள்

பாதரசம் ஒரு கனமான வெள்ளியைப் போன்ற – வெண்மை நிறம் கொண்ட திரவ உலோகமாகும். மற்ற உலோகங்கள் ஒப்பிடும்போது இது வெப்பத்தை சரியாகக் கடத்துவதில்லை. ஆனால் மின்சாரத்தை சுமாராகக் கடத்துகிறது. பாதரசத்தின் உறைநிலை −38.83° செல்சியசு வெப்பநிலையாகும். மற்றும் இதன் கொதிநிலை 356.73° செல்சியசு வெப்பநிலையாகும்.[2][3][4] வேறு எந்த நிலையான உலோகத்தின் உறைநிலை மற்றும் கொதிநிலையைக் காட்டிலும் இது குறைவனதாகும். கோப்பர்நீசியம் மற்றும் பிளரோவியம் போன்ற தனிமங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. கோப்பர்நீசியத்தின் கொதிநிலை பாதரசத்தை விடக் குறைவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தனிம வரிசை அட்டவணையின் ஆவர்த்தனப் போக்குகள் இதையே காட்டுகின்றன.[5] உறையும் போது பாதரசத்தின் கன அளவு 3.59% அளவுக்குக் குறைகிறது. அடர்த்தியிலும் மாற்றம் ஏற்படுகிறது. நீர்ம நிலையில் இருக்கும் போது 13.69 கி/செ.மீ^3 ஆக இருக்கும் பாதசத்தின் அடர்த்தி திண்ம நிலைக்கு மாறும் போது 14.184 கி/செ.மீ^3 ஆக மாறுகிறது. வெப்பநிலை விரிவு குணகம் 0° செல்சியசு வெப்பநிலையில் 181.59 × 10−6 ஆகவும், 20° செல்சியசு வெப்பநிலையில் 181.71 × 10−6 ஆகவும், 100° செல்சியசு வெப்பநிலையில் 182.50 × 10−6 ஆகவும் உள்ளது. திண்ம பாதரசத்தை கம்பியாக நீட்டலாம். தகடாக அடிக்கலாம். கத்தியால் வெட்டலாம்.[6]

பாதரசத்தின் அதிவேக விரிவடைவு செயல்திறன் பற்றிய ஒரு முழுமையான விளக்கம் குவாண்டம் இயற்பியலின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் அதை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: பாதரசம் ஒரு தனித்த எலக்ட்ரான் ஒழுங்கமைப்பைக் கொண்டிருக்கிறது, இதில் எலக்ட்ரான்கள் கிடைக்கக்கூடிய அனைத்து 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s , 4p, 4d, 4f, 5s, 5p, 5d மற்றும் 6s துணைக்கூடுகளிலும் நிரம்பியுள்ளன. இந்த கட்டமைப்பு ஓர் எலக்ட்ரான் அகற்றப்படுவதை கடுமையாக எதிர்க்கிறது. பாதரசம் மந்தவாயுக்கள் போலவே செயல்படுகிறது, அதனால் பலவீனமான பிணைப்பை உருவாக்குகிறது, குறைந்த வெப்பநிலையில் உருகுகிறது.

வேதியியல் இயல்புகள்

பாதரசம் மிகவும் குறைந்த உருகுநிலை யைக் கொண்டது. இதன் உருகுநிலையில் (−38.86 °C) பாதரசத்தின் அடர்த்தி 13.534 g/cm3 ஆக இருக்கும்.[7]

Remove ads

பாதரசத்தின் பயன்பாடுகள்

  • பாதரச ஆவி விளக்கில் பயன்படுகிறது.
  • பல் மருத்துவத்தில் பயன்படுகிறது.
  • மெர்க்குரிக் அயோடைடு, தோல் நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
  • மெர்க்குரிக் ஆக்சைடு கண் அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.

நச்சுத்தன்மை

உலகிலேயே மிக மோசமான ஆறு நஞ்சுகளில் ஒன்று என ஐ.நா சபையால் பட்டியல் இடப்பட்டுள்ளது.[8]

பாதரசம் கலந்த தண்ணீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது. மேலும் சுவாச மண்டலமும் சிறுநீரக மண்டலமும் மெல்ல செயல் இழக்கும் அபாயமும் உள்ளன. இந்த பாதிப்புகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கின்றன.

இரசவாதம்

இதள்மாற்றியம் என்ற தனித்தமிழ் சொல் இரசவாதம் என்று வடமொழியில் குறிக்கப்படும். சித்தர் இதளினால் (பாதரசம்) தாழ்ந்த மாழைகளை பொன்னாக மாற்றினர் என்று கூறப்படும். இப் பொன்னாக்கம் ஆங்கிலத்தில் "Alchemy" எனப்படும். இதனை அடியாகக் கொண்டே வேதியியலை குறிக்கும் "Chemistry" எனும் சொல் பிறந்தது.[9]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads