உருங்கியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உருங்கியா (தாவரவியல் வகைப்பாடு: Rungia) என்பது முண்மூலிகைக் குடும்பம் என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 207 பேரினங்களில் ஒன்றாகும்.[1] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளரை, Nees என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர்.[2] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரியினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1832 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடம் என்பது, வெப்ப வலயம் உள்ள ஆப்பிரிக்கப் பகுதிகள், தெற்கு அரபு வளைகுடாப் பகுதிகள், வெப்ப வலய, அயன அயல் மண்டலம் உள்ள ஆசியன ஆகும்.
Remove ads
வளர் இயல்புகள்
இது பல்லாண்டு வாழும் இயல்புடையது. இச்செடி 0.8 மீட்டர் உயரம் வரை கொத்துக்களாக வளரக்கூடியதாகும். பளபளப்பான பச்சை, நீள்வட்ட இலைகளைப் பெற்றிருக்கின்றன. இவ்விலைகள், ஒன்றுக்கொன்று செங்குத்தாக அருகில் உள்ள இலைகளுடன், இரட்டையாக (decussate) அமைக்கப்பட்டிருக்கின்றன. இலைகள் காளான் போன்ற சுவை மற்றும் மிருதுவான அமைப்பைக் கொண்டுள்ளன.உணவுக்காகவும் சில இனங்களின் பழங்கள் பயன்படுகின்றன. உருங்கியா ரெபன்சுஎன்ற இதன் இனம் மருத்துவக் குணங்களைப் பெற்றிருக்கிறது.[3]
Remove ads
இனங்கள்
கியூ தாவரவியல் ஆய்வகம், இப்பேரினத்தின் இனங்களாக, 86 இனங்களை, பன்னாட்டு தாவரவியல் அமைப்புகளின் ஒத்துழைப்புகளோடு வெளியிட்டுள்ளது. அவை வருமாறு;—
மேற்கோள்கள்
இதையும் காணவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
