ஊசியிலைக் காடுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊசியிலைக் காடுகள்(Coniferous forest), 50 பாகை முதல் 60 பாகை வரையிலான வட அகலாங்கு(அட்ச கோடு)களுக்கு இடையில் அமைந்துள்ள இக்காடுகளே மிகப் பொிய உயிாின வாழிடங்கள் ஆகும். இவை யுரேசியா மற்றும் வட அமெரிக்கா கண்டப் பரப்புகளில் பெருவாாியாக அமைந்துள்ளன. இரண்டில் ஒரு பங்கு தாவரங்கள் சைபீாியாவிலும் மற்றுமொரு பங்கு இசுக்கொட்லாந்து, அலாஸ்கா மற்றும் கனடாவிலும் காணப்படுகின்றன.

Remove ads
காலநிலை
இப்பகுதியில் நிலவும் பருவகாலங்களை ஈரமான மிதமான கோடைக்காலங்களாகவும் நீண்ட வறண்ட குளிா்காலமாகவும் பார்க்கலாம். துாந்திர காடுகளில் தாவரங்களின் வளா்ச்சி காலம் 130 நாட்கள் மட்டுமே. இப்பகுதியில் குளிா்காலத்தில் பனி பொழிகிறது. இக்காடுகளில் மரங்கள் ஊசி போன்ற இலைகளை கொண்டிருக்கின்றன. இக்காடுகளில் ஏறக்குறைய 1700 மர வகைகள் காணப்படுகின்றன. இவை கடுங்குளிரையும் தாங்கும் அமைப்பை பெற்றுள்ளன.
பொருளியல் சிறப்புகள்
இலையுதிர் தாவரங்களின் மென்மரங்கள் பாரிய பொருளியல் மதிப்பு வாய்ந்தன. இவை ஆண்டுக்கு உலகின் 45% வெட்டுமரங்களை நல்குகின்றன.னைம்மரங்களின் பிற பயன்பாடுகளாக, தாள்கள், மரக்கூழில் இருந்து வேதியியலாகப் பதப்படுத்திய நெகிழிகள் ஆகிய தொழிலக விளைபொருட்கள் அமைகின்றன. சில ஊசியிலை மரங்கள் பைன் கொட்டை, யூனிப்பர் கொடிமுந்திரிப் பழங்கள் (பின்னது ஜின்கலுக்கு மணமூட்ட உதவுபவை) ஆகிய உனவுப் பொருட்களையும் தருகின்றன.
மேற்கோள்கள்
நூல்தொகை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads