ஊராட்சிக்கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊராட்சிக்கோட்டை (ஆங்கிலம்: Ooratchikottai) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 217 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஊராட்சிக்கோட்டை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11.4551°N 77.6864°E ஆகும். ஈரோடு, பவானி, காளிங்கராயன்பாளையம், எலவமலை, கருந்தேவன்பாளையம், கரை எல்லப்பாளையம், இலட்சுமி நகர், நசியனூர் மற்றும் சித்தோடு ஆகியவை ஊராட்சிக்கோட்டை பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.484.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.[3]
இப்பகுதியில் அமைந்துள்ள சொக்கநாச்சியம்மன் கோயில்,[4] வேதநாராயணப் பெருமாள். கோயில் [5] மற்றும் நிலப்பெருமாள் கோயில்[6] ஆகியவை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads