எகிப்தின் முதல் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எகிப்தின் முதல் வம்சம் (First Dynasty of Egypt அல்லது Dynasty I) பண்டைய எகிப்தை கிமு 3100 முதல் கிமு 2900 முடிய 200 ஆண்டுகள் ஆண்டது.[2] இம்முதல் வம்ச மன்னர் நார்மெர் ஆட்சியில் மேல் எகிப்தின் நிலப்பரப்புகளையும், கீழ் எகிப்தின் நிலப்பரப்புகளையும் ஒன்றிணைத்து பண்டைய எகிப்து இராச்சியம் நிறுவப்பட்டது. இவ்வம்சத்தினர் ஆட்சியின் போது பாபிரஸ் எனும் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் வம்ச மன்னர்களின் ஆட்சியில் பண்டைய எகிப்தின் தலைநகராக தினீஸ் நகரம் விளங்கியது. 2013-இல் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்ககரிமக் காலக்கணிப்பின் படி, எகிப்தின் முதல் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஹோர்-அகா-வின்[3] ஆட்சிக் காலம் (கிமு 3218–3035) முதல் துவங்குவதாக கணிக்கப்பட்டுள்ளது.[4]
Remove ads
எகிப்தின் முதல் வம்ச ஆட்சியாளர்கள்
பண்டைய எகிப்தின் வரலாற்றின் படி, எகிப்தின் முதல் வம்சத்தின் ஆட்சியாளர்கள் கீழ் வருமாறு:
எகிப்தின் முதல் வம்சத்தின் பார்வோன்கள் குறித்த செய்திகள் சில தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் மூலமே அறிய முடிகிறது.[8][9][10] அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பலெர்மோ கல்லின்[11] குறிப்புகள் மூலமே எகிப்தின் முதல் வம்சத்தின் நான்கு ஆட்சியாளர்களின் வரலாற்றுக் குறிப்புகள் மட்டுமே அறியமுடிகிறது. [12]
Remove ads
படக்காட்சிகள்
- சுண்ணாம்புக் கல் தட்டு, பார்வோன் கல்லறை, செமெர்கேத்
- பல்வேறு வண்ண மணிகளுடன் கூடிய கழத்தணி
- மட்பாண்ட குடுவை
மனித பலி
முதல் வம்சத்தின் பார்வோன்கள் இறப்பின் ஈமச்சடங்கின் போது நரபலி இடுவது வழக்கமாக இருந்தது. [13] இறந்த மன்னர்களின் சவத்தை பெரும் கல்லறை கட்டி அடக்கம் செய்யும் போது, கழுதை போன்ற சில விலங்கினங்களையும் பலி கொடுத்தனர்.
மறு உலக வாழ்க்கையின் பொருட்டு பார்வோன் டிஜெர் கல்லறையில் 338 மனிதர்கள் மற்றும் விலங்குகள் பலி கொடுத்திருப்பது தொல்லியல் ஆய்வுகள் வெளிப்பட்டுள்ளது. [13] என்ன காரணத்தினாலோ இம்முதல் வம்ச மன்னர்களின் காலத்திற்குப் பின்னர் பார்வோன்களின் கல்லறையில் நரபலி மற்றும் விலங்களை பலி கொடுப்பதை நிறுத்தப்பட்டது.
இதனையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads