நார்மெர்

பார்வோன் From Wikipedia, the free encyclopedia

நார்மெர்
Remove ads

நார்மெர் எகிப்தின் துவக்க வம்சத்தின், முதல் வம்சத்தை நிறுவிய மன்னராக[1][2][3] கருதப்படுகிறார். இவர் ஒருவேளை துவக்க அரச மரபுக்கு முந்தைய மன்னர் பார்வோன் கா அல்லது இரண்டாம் இசுகோர்ப்பியோன் என்றும், சிலர் இவரை மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தினை ஒன்றிணைத்தவராகக் கருதுகின்றனர். இவர் தினீஸ் நகரத்தை நிறுவினார். மேலும் இவர் எகிப்தை ஒன்றிணைத்தை நினைவு கூறும் வகையில் நார்மெர் கற்பலகையை நிறுவினார். 5,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கற்பலகையே உலக வரலாற்றை ஆவணப்படுத்தும் முதல் தொல்பொருள் ஆகும். இவரது கல்லறை உம் எல்-காப் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் நார்மெர், எகிப்தின் பாரோ ...
Remove ads

படத்தொகுப்பு

Thumb
கற்பலகையின் முன்பக்க வரைபடம்
Thumb
கற்பலகையின் பின்பக்க வரைபடம்
மன்னர் நார்மெரின் செங்கோல்
Thumb
நார்மெரின் செங்கோல்
Thumb
நார்மெர் செங்கோலின் தலைப்பகுதி வரைபடம்.[4]
மன்னர் நார்மெர் அரசவை விழாக் காட்சியின் வரைபடம். இதில் போரில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்டப் பொருட்களை மன்னன் நர்மருக்கு வழங்கப்படும் ஒரு விழாவை சித்தரிக்கிறது. மன்னர் நார்மெர் நீண்ட அங்கியுடன், தலையில் கீழ் எகிப்தின் சிவப்பு கிரீடத்தை அணிந்து கொண்டு, கையில் ஒரு உழவுக் கருவியை தாங்கியுள்ளார். இடதுபுறத்தில், நார்மெரின் பெயர் அரண்மனை முகப்பில் ஒரு பருந்து மூலம் காட்டப்பட்டுள்ளது. இதன் கீழ் போரில் கொள்ளையடிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்கள பதிவு உள்ளது. [5]
Remove ads

ஆட்சிக்காலம்

நார்மெரின் ஆட்சியின் தொடக்கமாக கிமு 3100 [6][7] ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. வரலாற்று முறை மற்றும் ரேடியோகார்பன் காலக்கணிப்பு இரண்டையும் பயன்படுத்தி பிற முக்கிய மதிப்பீடுகள் கிமு 3273–2987 என வரையறுத்துள்ளனர்.

கல்லறை

மேல் எகிப்தில் அபிடோஸுக்கு அருகிலுள்ள உம் எல்-காஅப்பில் உள்ள நார்மெரின் கல்லறை மண் செங்கல்லால் வரிசையாக இரண்டு இணைக்கப்பட்ட அறைகளைக் (பி 17 மற்றும் பி 18) கொண்டுள்ளது. எமில் அமெலினோ மற்றும் பெட்ரி இருவரும் பி 17 மற்றும் பி 18 கல்லறைகளை அகழ்வாராய்ச்சி செய்திருந்தாலும், 1964 ஆம் ஆண்டில் தான் கைசர் அவற்றை நார்மருடையது என்று அடையாளம் கண்டுள்ளார்.[8] நார்மெரின் கல்லறையானது நார்மருக்கு முன்னபதாக மேல் எகிப்தை ஆட்சி செய்த கா மற்றும் அவரது உடனடி வாரிசாக இருந்த ஹோர்-ஆஹா ஆகியோரின் கல்லறைகளுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. {{efn| Narmer's tomb has much more in common with the tombs of his immediate predecessors, Ka and Iry-Hor, and other late Predynastic tombs in Umm el-Qa'ab than it does with later 1st Dynasty tombs. Narmer's tomb is 31 sq. meters compared to Hor-Aha, whose tomb is more than three times as large, not counting Hor-Aha's 36 subsidiary graves. According to Deyer,[9]

இதனையும் காண்க

குறிப்புகள்

    மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads