மேல் எகிப்து

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மேல் எகிப்து (Upper Egypt) (அரபி: صعيد مصر என்பது பண்டைய எகிப்திற்கு தெற்கே உள்ள நூபியாவிற்கும், வடக்கே உள்ள கீழ் எகிப்திற்கும் இடையே பாயும் நைல் ஆற்றின் இருகரைப் பகுதிகளையும் குறிக்கும். மேல் எகிப்தின் முக்கிய நகரங்கள் தினீஸ், நெக்கென், தீபை மற்றும் நக்காடா ஆகும். கிமு 3150-இல் மேல் எகிப்தில் வரலாற்றுக்கு முற்பட்ட அரசமரபுகள் அழிந்து, எகிப்தின் துவக்க கால அரச மரபுகளின் ஆட்சி துவங்கியது. இவ்வாட்சி கிமு 2686-இல் முடிவுற்றது. பின்னர் கிமு 2686 முதல் 2181 முடிய பழைய எகிப்து இராச்சியம் நிலவியது.

விரைவான உண்மைகள் மேல் எகிப்து, தலைநகரம் ...

கீழ் எகிப்தின் காவல் தெய்வமான கடவுள் வத்செட்டும், மேல் எகிப்தின் கடவுளான நெக்பெட்டும் இரட்டைப் பெண்கள் என பண்டைய எகிப்தியர்கள் அழைத்தனர்.

Remove ads

புவியியல்

தற்கால எகிப்தின் தெற்கு அஸ்வான் பகுதி முதல் கீழ் எகிப்தின் தேசியத் தலைநகரம் கெய்ரோ வரை உள்ள பகுதியே மேல் எகிப்து ஆகும். அரபு மொழியில் மேல் எகிப்தில் வாழும் மக்களை சையத் அல்லது செய்யது அரபு மக்கள் என்று என்பர்.

அரசியல்

மேல் எகிப்து நிர்வாக வசதிக்காக 22 நோம் எனும் ஆட்சிப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[1]

வரலாறு

Thumb
ஹெட்ஜெட், எகிப்தின் வெள்ளை மகுடம்

துவக்க வம்ச காலத்திற்கு முன்னர்

வரலாற்று காலத்திற்கு முன்னர் மேல் எகிப்தின் முக்கிய நகரம் நெக்கேன் ஆகும்.[2] இந்நகரத்தின் காவல் தெய்வம் நெக்பேத் எனும் பருந்து தேவதை ஆகும்.[3]

புதிய கற்காலத்தின் போது கிமு 3600-இல் நைல் ஆற்றின் கரை ஓரங்களில் மக்கள் வேளாண்மை செய்தும் மற்றும் காட்டு விலங்குகளை, வீட்டு விலங்குகளாகப் பழக்கியும், மக்கள் புதிய பண்பாட்டைத் தோற்றுவித்தனர்.

மெசொப்பொத்தேமியாவைப் போன்று, மேல் எகிப்திலும் புதிய களிமண் மட்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டது. பொருள் உற்பத்தியில் செப்பு உலோகத்தின் பயன்பாடு அதிக அளவில் இருந்தது. [4] மெசொப்பொத்தேமியாவைப் போன்றே செங்கற்களை சூரிய வெளிச்சத்தில் காயவைத்து தயாரித்தனர். மேலும் மெசொப்பொத்தேமியாவைப் போன்றே கட்டிடக் கலை அமைப்புகள் மேல் எகிப்தியர்கள் பின்பற்றி கட்டினர். [4]

மேல் எகிப்தியர்களுக்கும், கீழ் எகிப்தியர்களுக்கும் அடிக்கடி போர் மூண்டது. போரில் மேல் எகிப்திய மன்னர் நார்மெர் என்பவர் கீழ் எகிப்தின் நைல் ஆற்றின் வடிநிலப்பகுதிகளைக் கைப்பற்றி ஒரே குடையின் கீழ் ஆண்டார். [5]

வரலாற்று காலத்திற்கு முந்தைய மேல் எகிப்தின் ஆட்சியாளர்கள்

மேல் எகிப்தின் ஆட்சியாளர்களின் குறிப்புகள் முழுவதும் உறுதிச் செய்யப்படாத ஒன்றாகும்.

மேலதிகத் தகவல்கள் பெயர், உருவம் ...
Remove ads

மேல் எகிப்தின் ஆட்சிப் பிரிவுகள்

Thumb
பண்டைமேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தின் ஆட்சிப் பிரிவுகள்
மேலதிகத் தகவல்கள் ! எண், பண்டைய பெயர் ...

எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் கிமு 3150 - 2690

மேல் எகிப்தின் பார்வோன்களின் ஆட்சி மையமாக தீபை நகரம் விளங்கியது. சுமேரியாவின் அசிரியர்கள் போரில் தீபை நகரத்தை அழித்தனர். மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தை ஒருங்கிணைந்த பின்னர் கிமு 3150 முதல் கிமு 2690 முடிய 460 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட முதல் வம்சம் மற்றும் இரண்டாம் வம்ச ஆட்சிக் காலத்தை எகிப்தின் துவக்க அரசமரபுகள் ஆகும். ஒருங்கிணைந்த எகிப்தின் முதல் அரச மரபின் ஆட்சிக் காலத்தில் தலைநகரம் தீனிஸ் நகரத்திலிருந்து மெம்பிசுக்கு மாற்றப்பட்டது. எகிப்தின் முதல் அரச வம்சத்தினர் எகிப்தை கிமு 3150 முதல் கிமு 2890 வரையும்; இரண்டாம் அரச வம்சத்தினர் கிமு 2890 முதல் 2686 முடியவும் ஆண்டனர். [10][11]கிமு 2686ல் பழைய எகிப்து இராச்சியம் தோன்றிய பின் இத்துவக்க கால எகிப்திய அரச மரபுகள் முற்றிலும் மறைந்து போனது.[12] பண்டைய எகிப்திய துவக்க கால அரச மரபு மன்னர்கள் மைய அரசமைப்பை நிறுவி, மாகாணங்களில் அரச குடும்பத்தினரை ஆளுநர்களாக நியமித்தனர்.

பழைய எகிப்து இராச்சியம்கிமு 2686– கிமு 2181

எகிப்தின் பழைய இராச்சியத்தின் வரலாறு, கிமு 2686-இல் துவங்கி, கிமு 2181-இல் முடிவுற்றது. இந்த இராச்சியத்தின் ஆட்சியாளர்களான பார்வோன்கள் இறந்ததற்கு பின்னர் உடல்களை அடக்கம் செய்வதற்கு பிரமிடுகளை கட்டியதால், பழைய எகிப்திய இராச்சியத்தை பிரமிடுகளின் காலம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். இவ்வம்சத்தின் பார்வோன்கள் புகழ்பெற்ற கிசா பிரடுமிகளைக் கட்டினர்.[13]

எகிப்தின் மத்தியகால இராச்சியம்

எகிப்தின் மத்தியகால இராச்சியம் கிமு 2050 முதல் 1710 முடிய பண்டைய எகிப்தை ஆண்டது. எகிப்தின் பதினோறாவது வம்ச பார்வோன் இரண்டாம் மெண்டுகோதேப், மேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் ஒருங்கிணைத்து, மத்தியகால எகிப்திய இராச்சியத்தை நிறுவினார்.[14]மத்தியகால எகிப்திய இராச்சியத்தில் ஒசைரிஸ் கடவுள் மக்களிடையே புகழ்பெற்றது.[15] [16]11வது வம்சத்தினர் தீபை நகரத்தை தலைநகரமாகக் கொண்டு எகிப்தை ஆண்டனர். 12-வது வம்சத்தினர் லிஸ்டு நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்.

புது எகிப்து இராச்சியம்

எகிப்தின் பதினெட்டாம் வம்சம் முதல் இருபதாம் வம்சத்தினர் வரை புது எகிப்து இராச்சியத்தை கிமு 16-ஆம் நூற்றாண்டு முதல் கிமு 11-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். எகிப்தின் 19-வது வம்சத்தை நிறுவிய பார்வோன் ராமேசசை முன்னிட்டு, ராமேசேசியர்களின் காலம் என அழைப்பர்.

Remove ads

இதனையும் காண்க

மேலும் படிக்க


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads