மெர்நெய்த்

From Wikipedia, the free encyclopedia

மெர்நெய்த்
Remove ads

மெர்நெய்த் (Merneith), பண்டைய எகிப்தை ஆண்ட முதல் வம்சத்தின் நான்காம் பார்வோன் ஜெத்தின் பட்டத்து அரசி ஆவார். மன்னர் ஜெத் சிறு குழந்தையான டென்னை விட்டு இறந்த பின்னர், பட்டத்து அரசி மெர்நெய்த், இளவரசர் டென்னின் சார்பில் எகிப்தின் காப்பாட்சியராகவும், இணை ஆட்சியாளராகவும் கிமு 2950 முதல் செயல்பட்டவர். வரலாற்றில் இவரே உலகின் மற்றும் எகிப்தின் அரசி ஆவார். (எகிப்திய பண்பாட்டின்படி, பெண்கள் முடிசூட்டிக் கொண்டு அரசாள முடியாது. ஆனால் சிறு வயது பட்டத்து இளவரசர்கள் மற்றும் உடல் நலமற்ற பார்வோன்களுடன் இணை ஆட்சியாளர்களாக எகிப்தை ஆட்சி செய்ய முடியும்.)

விரைவான உண்மைகள் மெர்நெய்த், பண்டைய எகிப்தின் காப்பாட்சியாளர் ...

அரசி மெர்நெய்த், பார்வோன் ஜெர்ரின் மகளும், பார்வோன் ஜெத்தின் மனைவியும், பார்வோன் டென்னின் தாயும்[2], எகிப்தின் முதல் பார்வோன் நார்மெரின் பேத்தியும் ஆவார்.

Remove ads

அபிதோஸ் கல்லறைகள்

Thumb
முதல் வம்சம் & இரண்டாம் வம்ச அரச குடும்பத்தினர் கல்லறைகள், உம் எல்-காப்
Thumb
அரசி மெர்நெய்த் கல்லறையின் வரைபடம்

பண்டைய அபிதோஸ் நகரத்தில் எகிப்தின் முதல் வம்சம் மற்றும் இரண்டாம் வம்ச மன்னர் குடும்பத்தினர்களின் கல்லறைகளுடன், அரசு மெர்நெய்த்தின் கல்லறையும் உம் எல்-காப் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அரசி மெர்நெய்த் போன்ற இரண்டு கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

1900-ஆம் ஆண்டில் எகிப்தியவியல் அறிஞர் பிளிண்டர்ஸ் பெட்ரி என்பவர் அபிதோஸ் நகரத்தில் அரசி மெர்நெய்த்தின் கல்லறையைக் கண்டுபிடித்தார், அதன் இயல்பு காரணமாக, அது முன்னர் அறியப்படாத பார்வோனுக்கு சொந்தமானது என்று நம்பினார். கல்லறையைத் தோண்டப்பட்ட போது களிமண் செங்கற்களால் வரிசையாக அமைக்கப்பட்ட ஒரு பெரிய நிலத்தடி அறை இருப்பதாகக் காட்டப்பட்டது. அரசி மெர்நெய்த்தின் கல்லறையச் சுற்றிலும் குறைந்தபட்சம் 40 பணியாளரின் துணை கல்லறைகளும் இருந்தது. [3][4]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads