மஞ்சள் பாறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மஞ்சள் பாறு (Egyptian vulture (Neophron percnopterus) அல்லது மஞ்சள்முகப் பாறு கிராமப்புற மக்களால் பாப்பாத்திக் கழுகு[2] என்று அழைக்கப்படுகிறது. எகிப்திய பிணந்தின்னிக் கழுகு, திருக்கழுக்குன்றக் கழுகு, வெள்ளைக்கழுகு, மஞ்சள் திருடிப் பாறு[3] எனப் பலவாறு அழைக்கப்படும் இப்பறவை ஒரு பிணந்தின்னிக் கழுகாகும்.

Remove ads
பரவல்
மஞ்சள்முகப் பாறுகளின் வாழிடம் ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கப் பகுதிகள், தெற்கு ஐரோப்பியப் பகுதிகள் ஆகும். இவை வலசை போகும் பறவைகள் அல்ல; இருப்பினும், மற்ற பாறுகளை விடவும் இனப்பெருக்கப் பகுதிகளிலிருந்து பிற வாழ்விடங்களுக்கு இவை செல்லும் இயல்புடையவை. இனப்பெருக்க சோடிகள் மீண்டும் மீண்டும் ஒரே மரத்தைத் தெரிவு செய்யும் பழக்கமும் இவற்றுக்கு உண்டு. [4]
வாழ்விடம்
பொதுவில் இவை பாறை விளிம்புகளில் கூடமைக்கின்றன; சரியான இடம் கிடைக்கவில்லையெனில் மரங்களிலும் இவை கூடமைக்கின்றன. பறக்கத் துவங்கும்போது இறக்கைகளை அடிப்பதில் சிரமம் ஏற்படுவதால் இவை உயரமான இடங்களையே கூடமைக்கத் தெரிவு செய்கின்றன; இதன் மூலம் வெப்பக்காற்று ஓட்டதையும் இவற்றால் பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது. மனித வாழ்விடங்களுக்கு அருகிலும் இவை தென்படுகின்றன. [4]
திருக்கழுக்குன்றில் மஞ்சள்முகப் பாறுகள்
முன்காலத்தில் திருக்கழுக்குன்றத்தில் தினமும் கோயில் படையலை குறிப்பிட்ட நேரத்தில் இரு மஞ்சள்முகப் பாறுகள் வந்து உண்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது; இதன் காரணமாகவே இவை திருக்கழுகுன்றக் கழுகு என பெயர் பெற்றன.[5] ஆனால் 1994ஆம் ஆண்டிற்குப் பிறகு இவை படையலை உண்பதற்கு வருவதில்லை.[6]
Remove ads
உருவமைப்பு
இப்பறவை மங்கலான வெள்ளை நிறக் கழுகு தோற்றத்தில் பெரிய பருந்து போல தோன்றும். இறக்கையின் பெரிய இறகுகள் கறுப்பாகவும், தலையும், மூக்கும் முடியின்றி மஞ்சள் நிறமாகக் காணப்படும். இதன் குஞ்சுகள் கரும்பருந்து போல் தோன்றும்; ஆனால் பறக்கும்போது இதன் வால் கரும்பருந்து போல் பிளவுபட்டுத் தோன்றாது -- ஆப்புபோல் தோன்றும்.
உணவு
அழுகும் சடலங்களே இவற்றின் முக்கிய உணவாக இருப்பினும் பூச்சிகள், சிறு ஊர்வன, பாலூட்டிகள், ஓட்டுடலிகள், நத்தை, பிற பறவைகளின் முட்டை, பெரிய விலங்குகளின் சாணம் உள்ளிட்டவற்றை இவை உண்ணும் . ஊர்புறங்களில் குப்பைகளில் உள்ள கழிவுகள் உள்ள பகுதிகளில் இவற்றைக் காண இயலும்.
சிறப்பு இயல்பு
இதர கழுகு இனங்கள் அனைத்தும் தங்களது இரையை உண்பதற்கு, அவற்றினுடைய அலகு, கால்களைப் பயன்படுத்தும். ஆனால், இந்தக் கழுகு மட்டும், கூழாங்கல், குச்சி போன்ற சிறுசிறு கருவிகளைப் பயன்படுத்துகிறது.
வளங்காப்பு நிலை
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads