எக்கத்தரீன்பூர்க்

From Wikipedia, the free encyclopedia

எக்கத்தரீன்பூர்க்map
Remove ads

எக்கத்தரீன்பூர்க் (Yekaterinburg, உருசியம்: Екатеринбу́рг), என்பது உருசிய நகரமும், சிவெர்த்லோவ்சுக் மாகாணத்தின் நிருவாக மையமும் ஆகும். இது யூரேசியக் கண்டத்தின் மத்தியில், ஆசியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில், உரால் மலைகளின் கிழக்கே இசெட் ஆற்றில் அமைந்துள்ளது.[11][12] இந்நகரம் சிவெர்த்லோவ்ஸ்க் மாகாணத்தில் முக்கிய கலாசார, மற்றும் தொழிற்துறை மையமும் ஆகும். 2010 கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள் தொகை 1,349,772 ஆகும்.[5] எக்கத்தரீன்பூர்கின் நகர்ப்புறம் உருசியாவின் நான்காவது பெரியதும், நாட்டில் தொழிற்துறையில் முன்னணியில் இருக்கும் மூன்று நகரங்களில் ஒன்றும் ஆகும்.

விரைவான உண்மைகள் எக்கத்தரீன்பூர்க் Екатеринбург, நாடு ...

எக்கத்தரீன்பூர்க் நகரம் 1723 நவம்பர் 18 இல் உருசியப் பேரரசர் முதலாம் பேதுருவின் மனைவி எக்கத்தரீனின் (உருசியாவின் முதலாம் கேத்தரீன்) நினைவாக உருவாக்கப்பட்டது. இது உருசியப் பேரரசின் சுரங்கத் தொழிலுக்கான தலைநகராக விளங்கியது. 1781 இல் பேரரசி இரண்டாம் கேத்தரீன் இந்நகருக்கு பேர்ம் மாகாணத்தின் மாவட்ட நகர நிலையைக் கொடுத்து, பேரரசின் முக்கிய சாலையை (சைபீரிய சாலை) இந்நகரூடாக அமைத்தார். எக்கத்தரீன்பூர்க் சைபீரியாவுக்கான முக்கிய நகராக விளங்கி, ஆசியாவுக்கான சாளரம் என அழைக்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டில், எக்கத்தரீன்பூர்க் உரால் பகுதியின் முக்கிய புரட்சியாளர்களின் மையமாக விளங்கியது. 1924 இல், உருசியா சோசலிசக் குடியரசான பிற்பாடு, இந்நகரம் போல்செவிக் புரட்சியாளர் யாக்கோவ் சிவெர்த்லோ என்பவரின் நினைவாக சிவெர்த்லோவ்ஸ்க் (Sverdlovsk, உருசியம்: Свердло́вск) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சோவியத் ஆட்சிக் காலத்தில், இந்நகரம் தொற்துறை, மற்றும் நிருவாக ரீதியில், சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகித்தது. 1991 இல், சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்நகரின் பெயர் மீண்டும் எக்கத்தரீன்பூர்க் என மாற்ரப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads