எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று

From Wikipedia, the free encyclopedia

எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று
Remove ads

எக்ஸ்-மென்: டேய்ஸ் ஒஃப் ஃப்யூச்ச பாஸ்ற் X-men Days of Future Pas) என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற வரைகதை புத்தகத்தில் வெளியான எக்ஸ்-மென் என்ற ஒரு கற்பனை பாத்திரக் குழுவை மையமாக வைத்து மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, பேட் ஹாட் ஹாரி புரொடக்ஷன்ஸ், டி.எஸ்.ஜி என்டர்டெயின்மென்ட் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் எக்ஸ்-மென்: டேய்ஸ் ஒஃப் ஃப்யூச்ச பாஸ்ற், இயக்கம் ...

இது எக்ஸ்-மென் திரைப்படத்தின் ஏழாவது படமாவும் வோல்வரின்-2 (2013) என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் வெளியானது. இந்த திரைப்படத்தை பிறையன் சிங்கர் இயக்குகின்றார். இவர் ஏற்கனவே வெளிவந்த எக்ஸ்-மென் (2000), எக்ஸ்-மென் 2 (2003), எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் (2011) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஹக் ஜேக்மேன், ஜேம்ஸ் மெக்காவே, மைக்கேல் பாஸ்பேண்தே, ஜெனிபர் லாரன்ஸ், ஹாலே பெர்ரி, அண்ணா பகுய்ன், எலியட் பேஜ், பீட்டர் டிங்க்லேஜ், இயன் மெக்கெல்லன், பேட்ரிக் ஸ்டீவர்ட், நிக்கோலசு ஹோல்ட், சான் ஆஷ்மோர், ஓமர் சி, இவான் பீட்டர்ஸ், ஜோஷ் ஹெல்மேன், டேனியல் கிட்மோரே, பேன் பின்க்பிங், ஆடன் கண்டோ மற்றும் பூபூ ஸ்டீவர்ட் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இந்த படம் நியூயார்க் நகரில் மே 10, 2014 அன்று திரையிடப்பட்டது, மேலும் மே 23 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியாகி, 746 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இது 2014 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய ஆறாவது படமாகவும், டெட்பூல் (2016) மற்றும் டெட்பூல் 2 (2018) க்குப் பின்னால் அதிக வசூல் செய்த மூன்றாவது படமாகவும் திகழ்ந்தது. 2017 ஆம் ஆண்டு வெளியான லோகன் என்ற திரைப்படத்தை தொடர்ந்து எக்ஸ்-மென் திரைப்படத் தொடரில் இது இரண்டாவது சிறந்த விமர்சனங்களை பெற்ற படம் ஆகும். இந்த படம் சிறந்த திரை வண்ணத்திற்கான அகாடமி விருதுக்கான பரிந்துரையைப் பெற்றது, மற்றும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் எக்ஸ்-மென் படமாகும். இதை தொடர்ந்து எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் என்ற படம் மே 27, 2016 அன்று வெளியானது.[4]

Remove ads

நடிகர்கள்

Remove ads

நடிகர்களின் நடிப்பு

வால்வரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹக் ஜேக்மேன், முந்தைய எக்ஸ் மென் படங்களில் நடித்திருப்பதுபோல் இதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருடைய கம்பீரமான தோற்றம் மிரட்டலாக இருக்கிறது. மிஸ்டிக் கதாபாத்திரத்தில் வரும் ஜெனிபர் லாரன்ஸ் ஊதா நிறத்திலான தோற்றத்துடன் பயமுறுத்துகிறார். சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். இவரை மையப்படுத்தியே கதை நகர்வதால் இவருக்கு நடிப்பதற்குண்டான வாய்ப்பு அதிகம். அதை அவர் கவனமாகவும், திறமையாகவும் செய்திருக்கிறார்.

50 வருடங்களுக்கு முந்தைய பேராசியரியராக வரும் ஜேம்ஸ் மெக்காவே, வில்லனாக வரும் மைக்கேல் பாஸ்பேண்தே ரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

Remove ads

படப்பிடிப்பு

இந்த திரைப்படம் மொண்ட்ரியால் எடுக்கப்பட்டது.

  • ஒலிம்பிக் ஸ்டேடியம்
  • மாண்ட்ரீல் சிட்டி ஹால்
  • மெக்கில் பல்கலைக்கழகம்

வெளியீடு

இதன் முதன்மை புகைப்படம் மாண்ட்ரீல், கனடாவில் ஏப்ரல் 2013 ல் தொடங்கிய ஆகஸ்ட் 2013 ல் முடிந்தது. இந்த படம் 3D & 2D இல், 2014 மே 23ம் திகதி வெளியானது.

இசை

இந்த திரைப்படத்துக்கு ஜான் ஓட்மேன் இசை அமைகிற்றார், இவர் முன்னதாக எக்ஸ்-மென் 2 திரைப்படத்துக்கு இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியான தொடர் திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads