எசுன்னா

From Wikipedia, the free encyclopedia

எசுன்னாmap
Remove ads

33°29′3″N 44°43′42″E

விரைவான உண்மைகள் எசுன்னா இராச்சியம், தலைநகரம் ...

எசுன்னா (Eshnunna) பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் வடக்கில் அமைந்த சுமேரிய நகர இராச்சியங்களில் ஒன்றாகும். எசுன்னா இராச்சியம் கிமு 3000 முதல் கிமு 1763 முடிய புகழுடன் விளங்கியது.[1]

தற்போது எசுன்னா இராச்சியத்தின் தொல்லியல் களம், ஈராக் நாட்டின் தியாலா ஆளுநரகத்தில், டைகிரிஸ் ஆற்றுக்கும், சக்ரோசு மலைத்தொடருக்கு இடையே, டெல் அஸ்மர் எனும் பெயரில் சிறு ஊராக உள்ளது. மேலும் எசுன்னா எனும் டெல் அஸ்மர் எனும் தொல்லியல் நகரம், பாக்தாத் நகரத்திற்கு வடகிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2]

Remove ads

எல்லைகள்

எசுன்னா இராச்சியத்தின் வடக்கில் பண்டைய அசிரியா, கிழக்கில் ஈலாம், தெற்கில் பாபிலோன், மேற்கில் மாரி இராச்சியங்களும் எல்லைகளாக இருந்தது.

வரலாறு

கிமு 3000-இல் ஜெம்தேத் நசிர் காலத்தில், மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச ஆட்சியின் போது, எசுன்னா நகரம், பண்டைய நகரங்களில் முக்கியப் பெரிய நகரமாக விளங்கியது.

மூன்றாவது ஊர் வம்சம் மற்றும் அக்காடியப் பேரரசுகளின் எழுச்சியின் போது, எசுன்னா நகர இராச்சியம், யாருக்கு ஆதரவு தருவது என்ற ஊசலாட்டம் எழுந்தது. ஏனெனில் எசுன்னா இராச்சியம், மெசொப்பொத்தேமியா மற்றும் ஈலாம் பண்பாட்டுகளின் நுழைவாயிலாக இருந்தது.

கிமு 2000 ஆயிரமாண்டில், எசுன்னா இராச்சியம், மன்னர் சாம்சி-அதாத் ஆட்சியின் போது, தன்னாட்சியுடன் ஆளப்பட்டது. மேலும் ஈலாம் இராச்சியத்தை எசுன்னா இராச்சியத்தினர் கைப்பற்றினர். பின்னர் முதல் பாபிலோனியப் பேரரசர், அம்முராபியின் ஆட்சிக் காலத்தில், கிமு 1763-இல் எசுன்னா இராச்சியத்தைக் கைப்பற்றப்பட்டு, பாபிலோனியாவுடன் இணைக்கப்பட்டது.

Remove ads

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads