எட்டப்ப நாயக்கர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுரையில் நாயக்கர்கள் ஆட்சியின் போது குறிப்பாக எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி , போடிநாயக்கனூர், சேந்தமங்கலம் , சாப்டூர் போன்ற பாளையங்களில் எட்டையபுரம் என்னும் பகுதியல் எட்டப்பர் வம்சத்தினை சேர்ந்தோர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர் . மிகப்பெரிய பாளையங்களில் ஒன்றாக நாயக்கர்களின் ஆட்சி காலத்திலும் விளங்கியது எட்டையபுரம்.
பூர்விகம்
ஆந்திரம் மாநிலம் சந்திரகிரி என்னும் பகுதியில் கி.பி, 856 இல் பெரியப்பா நாயக்கர் என்னும் சிற்றரசரால் நிறுவப்பட்ட ஆட்சியினர்.[1][2] இவர்கள் ராஜகம்பளம் இனத்தில் உள்ள சில்லவார் பிரிவில் உள்ளவர்கள். இசுலாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து இனத்தின் பெண்ணை கேட்டதாகவும் அதனால் தங்கள் இன பெண்களை காப்பாற்ற தெற்கு நோக்கி வந்ததாகவும் கூறப்படும் தொட்டிய நாயக்கர்களின் கதையினை போலவே இவர்களும் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் இவ்வினத்து மக்கள் மேற்கு பகுதிகளிலும், வளமான பகுதிகளிலும் குடிபெயர்ந்தனர்.
Remove ads
நல்லம்ம நாயக்கர்
எட்டப்பர் வம்சத்தில் ஒருவரான நல்லம்ம நாயக்கர் சாத்தூர் பகுதியில் தங்கள் இனத்தவர்களோடு குடிபெயர்ந்து அங்கு நல்லம்ம நாயக்கர் கோட்டையினை அமைத்து சுயாட்சி செய்து வந்தார். அதற்கு அடுத்ததாக வந்த குமார எட்டப்ப நாயக்கர் இலம்புவனம் என்னும் பகுதியை ஆட்சி செய்து கொண்டு இருந்த அருஞ்சுன தேவன், முதால தேவன் என்பவர்களை வென்று தங்கள் ஆட்சிப் பகுதியை விரிவாக்கம் செய்தார். இதன் காரணமாக இலம்புவனம், சுரைக்காபட்டி, ஈரால் , பாண்டவமங்கலம், வாழம்பட்டி, ராமநூத்தூர், நடுவபட்டி, நம்பியபுரம் போன்ற பகுதிகள் எட்டயபுர மன்னர்களின் வசம் ஆகியது . இவ்வெற்றின் காரணமாக ”ஜெகவீர ராம பாண்டியர்” என்று அழைக்கப்பட்டார் .[3]
Remove ads
ஜெகவீர ராம கெஜல்லு எட்டப்ப நாயக்கர்
இவரது ஆட்சிக்காலத்தில் எட்டையபுரம் எல்லை தெற்கு நோக்கி விரிவாக்கம் கண்டது . சாயமலை , மணியாச்சி , கோவில்பட்டி, திருநெல்வேலி வடக்கு போன்ற பகுதிகளை கைப்பற்றுகிறார் . இளசை என்ற பெயரை கொண்ட சிறு ஊரினை ஜெகவீர ராம எட்டப்ப நாயக்கர் என்னும் 19 வது பட்டத்தரசர் ”எட்டையபுரம்” என்று பெயர் மாற்றம் செய்து அங்கு சிவன் கோவில், அரண்மனை அமைத்து ஆட்சி செய்தார்.
திருநெல்வேலி சீமையிலுள்ள பாளையங்களில் மிகப்பெரிய பாளையம், எட்டயபுரம் இதை ஆண்ட மன்னர்கள் 'எட்டப்பன்' என அழைக்கப் பட்டனர். இம்மன்னர்களில் ஒருவரான வீரராமகுமார எட்டப்ப நாயக்கர், அங்கு எட்டிஸ்வரமூர்த்தி என்ற சிவன் கோயிலை கட்டினார்.இந்த பாளையங்களை ஆண்ட மகாராஜாக்கள், மக்களிடம் நேர்மையாகவும், அன்பானவர்களாகவும், நீதி பரிபாலனை செய்யும் பொழுது பாரபட்சமின்றியும் நடந்துகொண்டனர். எட்டப்ப மன்னர்களின் முன்னோர் 'சந்திரகிரி' என்ற ஊரில் ஆட்சி செய்தனர். அவர்களின் மிக சிறந்தவராக கருதப்படுபவர் குமாரமுத்து நாயக்கர். இவருக்கு இரண்டு மகன்கள். அவர்களின் ஒருவர் நல்லமநாயக்கர்; மற்றொருவர் வடலிங்கமநாயக்கர். மூத்தவர் நல்லமநாயக்கர், அப்போது விஜய நகரத்தை ஆண்ட சாம்பு மகாராஜாவை அக்கால முறைப்படி தரிசிக்க சென்றார். மகாராஜாவின் கோட்டையின் வடக்கு வாசலை சோமன் என்ற யாராலும் தோற்கடிக்க முடியாத மல்யுத்த வீரன், தன் தம்பிகளுடன் காவல் காத்தான். நீளமான தங்க சங்கிலியின் ஒரு முனையை இடது காலிலும், மற்றொரு முனையை வடக்கு வாசல் சுவற்றின் ஒரு பகுதியிலும் கட்டிக் கொண்டு காவல் காத்தான்.
இரண்டில் ஒன்று இதில் முக்கியமானது என்னவென்றால், மகாராஜாவை தரிசிக்க யார் வந்தாலும் ஒன்று அந்த தங்க சங்கிலியின் கீழ் தலை குனிந்து தரிசிக்க செல்ல வேண்டும் அல்லது மல்யுத்த வீரனுடன் போட்டியிட்டு அவனை வென்ற பின் தரிசிக்க வேண்டும் என்ற நடைமுறையை சோமன் வைத்திருந்தான். இது அவனின் பெருமையை நிலைநிறுத்துவதாக இருந்தது. மகாராஜாவை காணவரும் மக்கள், அவரது ஆட்சியின் கீழ் உள்ள குறுநில மன்னர்கள் பெரும்பாலும் சோமனின் சங்கிலியின் கீழ் தலை குனிந்தே சென்று தரிசித்தனர். ஆனால், நல்லமநாயக்கன், சோமனுடன் மல்யுத்தம் செய்து வென்று தரிசிக்க முடிவு செய்து சோமனுடன் மல்யுத்தத்திற்கு தயாரானார். மல்யுத்தம் :இதை கேள்விப்பட்ட வடக்கு வாயிலில் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் பெரும் ஆச்சரியம். இதுவரை யாராலும் வெற்றி பெற முடியாத சோமனை இவர் எப்படி வெல்வார் என்று. இருவருக்கும் கடுமையான சண்டை நடந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் கண் இமைக்காமல் அச்சத்துடன் சண்டை காட்சியை பார்த்தனர். கடைசியில் சோமனின் தலையை துண்டித்து, நல்லமநாயக்கன் வென்றான். ஒரு வல்லயத்தில் (ஈட்டி போன்றது) குத்தி அவன் தலையை ஒரு கையில் வைத்துக்கொண்டும், சோமனின் ரத்தத்தில் நனைந்த அவன் உடையை மறுகையில் வைத்துக்கொண்டும் மகாராஜாவின் தர்பார் மண்டபத்தில் விழுப்புண்களுடன் சென்று நின்றான். சோமனின் தம்பிகள் கண்ணீருடன் நல்லநாயக்கன் பின்னால் சென்றனர். மகாராஜாவிற்கும் தர்பார் மண்டபத்திலிருந்த, திவான், சிரஸ்தார் மற்ற பிரமுகர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். யாராலும் வெல்ல முடியாத சோமனை, தன்னை காணவந்த நல்லமநாயக்கரான இவர் எப்படி வென்றார்? அதுவும் ஒரு கையில் சோமன் தலையையும் மற்றொரு கையில் ரத்தம் தோய்ந்த சோமன் உடைகளையும் ஏந்தி தன் முன் நிற்கும் நல்லமநாயக்கன், ஒரு சிறந்த வீரன் என்று தீர்மானித்தார். அக்கால வழக்கப்படி, நல்லமநாயக்கரின் வீரத்தையும், தீரத்தையும் பாராட்டி அவனுக்கு பல கிராமங்களையும், பரிசு பொருட்களையும் வழங்கி 'யாராலும் வெல்ல முடியாத சோமனை வென்ற நீ மிகச் சிறந்த வீரன்,' என பாராட்டினார். 'எட்டப்பன்' பெயர் காரணம் தர்பார் மண்டபத்தில் நல்லமநாயக்கன் பின்னால் வந்த சோமனின் தம்பிகள், மகாராஜாவின் காலில் விழுந்து, "மகாராஜா... என் அண்ணன் இறந்து விட்டான். நாங்கள் நிற்கதியாகிவிட்டோம்," என கதறி அழுதனர்.இதை கண்ட ராஜா, நல்லமநாயக்கரை பார்த்து, "சோமனை தவிர அவர்களுக்கு யாரும் இல்லை. அவனது தம்பிகளுக்கு தாயாகவும், தகப்பனாகவும் இருந்து கண் போல காத்து, இந்த எட்டு பேரையும் உன் மகன்களாக பாவித்து அவர்களுக்கு அப்பனாக இருக்க வேண்டும்," என்றார். இதன்படி, சோமனின் எட்டு தம்பிகளுக்கும், அப்பனாக நல்லமநாயக்கன் இருக்க சம்மதித்ததால், அதன்பின் வந்த அவரது பரம்பரைக்கு 'எட்டப்பன்' (எட்டு அப்பன்) என பெயர் வந்தது.
Remove ads
எடவங்கை கெஜ்ஜலப்பா நாயக்கர்
வேட்டையாடுவதை குலத்தொழில் என்று கொண்ட இவ்வரசர்கள் ஒரு நாள் வேட்டைக்கு செல்கையில் எதிரியினர் தாக்க முற்பட்டபொழுது தனது இடது கையினால் தாக்க முற்பட்டவனை கொன்றதால் அன்று முதல் எடவங்கை நாயக்கர் என்று அழைக்கபட்டார் . இவருக்கு பல மனைவிகளும், பல குழந்தைகளும் இருந்தனர்.
ஜெகவீர ராம வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர்
இவர் பல கோவில்களை கட்டயுள்ளார் . அன்னதானம் , நிலதானம் போன்ற பல பணிகளை செய்துள்ளார் . இவர் கட்டிய சில கோவில்கள் :
- அய்யன் சுப்ரமணிய சாமி கோவில்
- கழுகுமலை கோவில்
- திருநெல்வேலி காந்திமதி அம்மன் அஷ்ட மண்டபம்
- சுந்திர விலாசம்
- கலியான மகால்
- சுப்ரமணிய விலாசம்
- பல ஏரிகள் , குளங்கள் அமைத்தல்.
இவருக்கு ஐந்து மகன்கள்
- ஜெகவீர ராம குமார எட்டப்ப நாயக்கர்
- வெங்கடேஸ்வரர்
- எட்டு நாயக்கர்
- முத்துசாமி பாண்டியன்
- ராமசாமி பாண்டியன்
இவரது ஆட்சி காலத்தில் எட்டயபுர நாடு பல வளர்சிகளை கண்டது .
Remove ads
தமிழ் வளர்ச்சி
எட்டையபுரம் மன்னர்கள் அனைவரும் தமிழ்பற்று கொண்டவர்கள் . சுப்ரமணிய பாரதிக்கு ”பாரதி” என்ற பட்டம் தந்தவர்கள் எட்டயபுர மன்னர்கள். அதே போல சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர், சீறாப்புராணம் இயற்றிய உமறு புலவர் போன்றவர்களை எட்டயபுர அரசவை ஆதரித்தது. கல்விநிலையங்கள் அமைத்து இலவச உணவுத்திட்டம் கொண்டு கல்வி பரப்பினர். பாண்டியர்களின் ஆட்சி காலத்திலேயே சுயாட்சி அதிகாரம் கொண்ட நாடு, நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் மிக சிறந்த பாளையங்களில் ஒன்றாக திகழ்ந்தது .
Remove ads
ஆங்கிலேயர் பற்றிய நிலைப்பாடு
எல்லை பிரச்சனை காரணமாக வீரபாண்டிய கட்டபொம்மன் முன்னோர்களுக்கும் எட்டயபுர மன்னர்களுக்கும் மனகசப்பு இருந்து வந்தது . இவர்களின் இந்த பிரிவினை பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் எட்டப்பரை தங்கள் வசம் கொண்டு வந்தனர், ஆனால் இன்றும் எட்டயபுர மக்கள் எட்டப்பரை தவறாக சொல்வதை கண்டிகின்றனர். இருவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் எட்டப்பர் துரோகம் செய்ய வில்லை என்று தெரிவிக்கின்றனர்.[4] கட்டபொம்மனுக்கும் எட்டப்பருக்கும் குடும்ப பிரச்சனை இருந்த காரணத்தால் பிரிய நேரிட்டது . ஆனால் எட்டயபுர அரசர்களும் விடுதலை விரும்பிகளாகவே இருந்து வந்துள்ளனர். ஜெகவீரபாண்டிய எட்டப்ப நாயக்கர் என்பவர் ஆங்கிலேயருக்கு வரிதர மறுத்து ராமநாதபுரம் மாவட்டம் பெருநாளி முதலிய ஊர்களுக்கு சென்று மறைந்து வரிதராமல் இருந்துவந்துள்ளனர். அவர் செல்லும்வழியில் அருப்புக்கோட்டை முதலிய ஊர்களுக்கு சென்று தங்கள் நாட்டிலும் இவ்வாறான கோட்டைகள் அமைக்க வேண்டும் என்று எண்ணினார்.[5]
Remove ads
ஜமீன் பகுதி
415429 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய நாடாக திகழ்ந்தது. வண்டல் மண், பருத்தி , கம்பு , சோளம் , மிளகாய் போன்றவை விளையும் பகுதி.
படை பலம்
வலிமையான படைபலம் கொண்டு இருந்தனர். அழகு முத்துக்கோன் என்ற சேர்வை படைத்தளபதியாக கொண்டு இருந்தனர் .[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads