சாப்டூர் பாளையக்காரர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுரையில் நாயக்கர்கள் ஆட்சிக் காலம் ஏற்படும் முன்பே இராசகம்பளம் மக்களின் பாளையங்கள் குறிப்பாக எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி , போடிநாயக்கனூர், சேந்தமங்கலம் , சாப்டூர் போன்ற பாளையங்களில் சாப்டூர் என்னும் பகுதியில் வேகிளியார் சில்லவார் வம்சத்தைச் சேர்ந்தோர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இயற்கை வளம் நிறைந்த பகுதியாக இருக்கும் இப்பகுதியில் இராசகம்பளம் மற்றும் பளியர் மக்கள் அதிகம் வாழ்கிறார்கள்.[1]
Remove ads
பூர்விகம்
ஆந்திரம் மாநிலம் சந்திரகிரி என்னும் பகுதியில் இருந்து இங்கு வந்த இவர்கள் கொட்டியம் நாகம்ம நாயக்கர் என்பவரால் தனி இடத்தில இப்பகுதியில் குடிபெயர்ந்தனர் . இசுலாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து இனத்தின் பெண்ணை கேட்டதாகவும் அதனால் தங்கள் இன பெண்களை காப்பாற்ற தெற்கு நோக்கி வந்ததாகவும் கூறப்படும் தொட்டிய நாயக்கர்களின் கதையினை போலவே இவர்களும் தெரிவிக்கின்றனர்.
தமிழ்ப்பற்று
சாப்டூர் சமின் பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் மிகுந்த தமிழ்ப்பற்று கொண்டு வந்துள்ளனர் , அதிலும் நாகைய சாமி காமைய நாயக்கர் என்பவர் தமிழ் புலவர்களை ஆதரித்தும் , தானே தமிழ் மற்றும் இசை ஆகியவற்றில் புலமைக் கொண்டும் வாழ்ந்து வந்துள்ளார் . [2][3]
பெயர்க்காரணம்
சாப்டூர் என்பது சாப டூர் என்னும் தெலுங்கு சொல்லில் இருந்து வந்துள்ளது . சாப என்றால் கம்பிளி என்று தெலுங்கில் பொருள் . ராஜகம்பளம் மக்கள் அக்காலகட்டத்தில் கம்பிளி என்னும் போர்வையினை தங்களின் மீது அணிந்து இருப்பர் . எனவே இவ்வூருக்கு சாப்டூர் என்று பெயர் வந்தது . [4]
ஜமின் எல்லைகள்
சுமார் 7500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவர்களின் சொத்து மதிப்புகள் தற்போது ஜமின் ஒழிப்பு சட்டம் வந்த பிறகு 200 ஏக்கர் மட்டும் கொண்டு உள்ளது , தற்போது ஜமின் வாரிசுதாரராக இருப்பவர் ராம் குமார் நாயக்கர் . இவர் இன்று வாழ்ந்து வந்த அரண்மனை சுமார் 500 வருடம் பழமையானது .[5]
காடுகளைப் பாதுகாத்தல்
இப்பாளையகாரர்கள் காடுகளை கருத்தாக பாதுகாத்துள்ளனர் . அரசரின் ஆணை இல்லாமல் சிறு விரகினை கூட யாரும் எடுக்க முடியாதாம் . இன்றும் இங்குள்ள மக்கள் காமைய நாயக்கர் பாறை என்றே இங்குள்ள சிறு சிறு பாறைகளை அழைத்து வருகின்றனர் . [6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads