ஆந்திரப் பிரதேசம்

இந்திய மாநிலம் From Wikipedia, the free encyclopedia

ஆந்திரப் பிரதேசம்map
Remove ads

ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின்படி நாட்டின் 8-ஆவது பெரிய மாநிலம் ஆகும். 2011 கணக்கெடுப்பின்படி இது இந்தியாவின் 10-ஆவது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் விசாகப்பட்டினம் ஆகும். இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றான தெலுங்கு இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது.

விரைவான உண்மைகள் ஆந்திரப் பிரதேசம், நாடு ...
Remove ads

2 சூன் 2014 நாளன்று ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வந்த ஐதராபாத் நகரம், தெலங்கானாவின் தலைநகரமாக மாறியது. எனினும் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014-இன்படி ஐதராபாத் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பூர்வ தலைநகராக அதிகபட்சம் பத்தாண்டுகள்வரை நீடிக்கும். அதற்குள் புதிய தலைநகரமாக அமராவதி என்ற நகரம் உருவாக்கப்பட்டபிறகு அது சட்டப்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக மாறும்.

குசராத்தை அடுத்து ஆந்திரப் பிரதேசம், இந்தியாவின் 2-ஆவது மிக நீளமான கடற்கரை எல்லையைக் கொண்டுள்ளது. இது வடமேற்கில் தெலுங்கானா, வடகிழக்கில் சத்தீசுகர் மற்றும் ஒடிசா, மேற்கில் கருநாடகா மற்றும் தெற்கில் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் கிழக்கில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது. மேலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மாவட்டமான யானம் என்ற சிறிய பகுதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி டெல்டாவில் காக்கிநாடா நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

விசயவாடா, திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும்.

Remove ads

புவியமைப்பு

கோதாவரி, கிருட்டிணா ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது.

வரலாறு

Thumb
ஆந்திர மாநிலம்(1953-1956)
Thumb
ஆந்திரப் பிரதேசம்(1956-2014)

1 நவம்பர் 1956 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி தெலுங்கு பேசும் சென்னை மாகாணத்தின் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே ஆகும். தற்போதைய தெலுங்கானா பகுதிகள் ஐதராபாத் அரசாட்சி பகுதியாகவே இருந்தது. இராயலசீமை, கடற்கரை ஆந்திரா சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது. எனவே 2014 சூன் மாதம் தெலுங்காணா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்டது.

Remove ads

மாவட்டங்கள்

  1. அல்லூரி சீதாராம ராசு
  2. அனகாபள்ளி
  3. அனந்தபூர்
  4. அன்னமய்யா
  5. பாபட்லா
  6. சித்தூர்
  7. கொனசீமா
  8. கிழக்கு கோதாவரி
  9. ஏலூரு
  10. குண்டூர்
  11. காக்கிநாடா
  12. கிருட்டிணா
  13. கர்நூல்
  14. நந்தியால்
  15. என் டி ஆர்
  16. பாலநாடு
  17. பார்வதிபுரம் மண்யம்
  18. பிரகாசம்
  19. சிறீகாகுளம்
  20. நெல்லூர்
  21. சிறீசத்ய சாய்
  22. திருப்பதி
  23. விசாகப்பட்டினம்
  24. விசயநகர
  25. மேற்கு கோதாவரி
  26. கடப்பா

வருவாய் பிரிவுகள்

இந்த 13 மாவட்டங்கள் 50 வருவாய் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 7 வருவாய் பிரிவுகளும், விசயநகர மாவட்டத்தில் 2 மட்டுமே உள்ளன.

மண்டலங்கள்

50 வருவாய் பிரிவு 670 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 66 மண்டலங்கள் உள்ளன. விசயநகர மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 34 மண்டலங்கள் உள்ளன.

நகரங்கள்

ஆந்திரப் பிரதேசத்தில் 16 நகராட்சிகள் மற்றும் 14 மாநகராட்சிகள் உட்பட மொத்தம் 31 நகரங்கள் உள்ளன. விசாகப்பட்டினம் மற்றும் விசயவாடா ஆகிய நகரங்கள் இருபது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஆகும்.

பொருளாதாரம்

உழவு ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாக பழக்கத்திலுள்ள தொழிலாகும். அரிசி, புகையிலை, பருத்தி, மிளகாய், கரும்பு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் தனிகவனம் அளிக்கப்பட்டு வருகிறது. கடப்பா மாவட்டத்தில் உள்ள 2664 கனிம சுரங்கங்கள் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் வளம் பெறுகிறது.

காக்கிநாடா துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் மசூலிப்பட்டினம் துறைமுகங்கள் மாநிலத்தின் வருவாய்க்கு வகை செய்கிறது.

Remove ads

நீர் ஆதாரங்கள்

கோதாவரி ஆறு, கிருட்டிணா ஆறு, சிரீசைலம் அணை, எம். பி. ஆர் அணை, மயிலாவரம் அணை, சோமசீலா அணை மற்றும் போலவரம் திட்டம் மாநிலத்தின் நீர் ஆதாரங்களாக உள்ளது.

மக்கள் தொகையியல்

மே 2014-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநில அரசின் புள்ளி விவரப்படி 1,60,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 4,93,86,799 ஆகும். அதில் ஊர்நாட்டு மக்கள் தொகை 3,47,76,389 (70.4); நகரப்புற மக்கள் தொகை 1,46 ,10,410 (29.6%) ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 50.1% ஆகவும்; பெண்கள் 49.9% ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 308 மக்கள் வீதம் வாழ்கின்றனர். பதினெட்டு வயதிற்குட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 9 52,22,384 (10.6%) ஆகும். மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 67.41% ஆக உள்ளது. அதில் ஆண்களின் படிப்பறிவு 80.9%; பெண்களின் படிப்பறிவு 64.6% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் தொகை 84,45,398 (17.1 %) ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 26,31,145 (5.3%) ஆக உள்ளனர். மாநிலத்தில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 2,29,69,906 ஆகும். இவர்களில் முதன்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை 1,92,31,167 ஆகவும்; திறன் குறைந்த பணியாளர்களின் எண்ணிக்கை 37,38,739 ஆகவும் உள்ளது. பயிரிடுவோர்கள் எண்ணிக்கை 30,70,723 ஆகவும்; வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 85,57,567 ஆகவும் உள்ளது. [8][9]

கல்வி

ஆரம்பப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை 37,45,340; நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 21,01,928 ஆக உள்ளது.

மொழிகள்

ஆந்திரப் பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ மொழி தெலுங்கு. சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் தெலுங்கு மொழியை ஒரு பாரம்பரிய மொழியாக அறிவித்துள்ளார்.

மதங்கள்

ஆந்திரத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள், முசுலிம்கள் கணிசமான சிறுபான்மையினர். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலங்களில் இந்துக்கள் (90.87%), முசுலிம்கள் (7.32%) மற்றும் கிரித்துவர் (1.38%) உள்ளனர். புத்த மதத்தினர், சீக்கியர்கள், செயின் மற்றும் அவர்களது மதத்தை நிலைநாட்ட மறுத்துவிட்ட மக்கள் மீதமுள்ள பகுதியை உருவாக்குகின்றனர்.

அரசியல்

இம்மாநிலத்தில் 175 சட்டப் பேரவை தொகுதிகளும் 58 சட்ட மேலவை தொகுதிகளும் உள்ளன. மேலும் 25 மக்களவைத் தொகுதிகளும் 11 மாநிலங்களவை தொகுதிகளும் உள்ளன.[10]

தெலங்கானா மாநில பிரிவினைக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில், செகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று, தற்போதைய முதல்வராக உள்ளார்.

நிர்வாகம்

இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பதின்மூன்று வருவாய் மாவட்டங்களாகவும்; எண்பது வருவாய் கோட்டங்களாகவும், 664 வருவாய் மண்டல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

பெரும் நகரங்கள்

விசாகப்பட்டினம், விசயவாடா, திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் இம்மாநிலத்தின் பெரும் நகரங்கள் ஆகும்.

வழிபாட்டுத் தலங்கள்

Thumb
விசயவாடா கனகதுர்கை கோயில்

கலாச்சாரம்

தெலுங்கு ஆந்திரப் பிரதேசத்தின் முதன்மை மொழியும், ஆட்சி மொழியும் ஆகும். கருநாடக இசையில் தெலுங்கு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான உகாதி, ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. குச்சிப்புடி ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டிய வகையாகும்.

ஐதராபாத்தை மையமாகக் கொண்ட தெலுங்கு திரைப்படத் துறை, இந்தியாவில் மூன்றாவது பெரிய திரைப்படத்துறையாகும்.

ஆந்திர உணவு வகைகள் காரம் நிறைந்தவை.

போக்குவரத்து

தொடருந்து

விசயவாடா[12] மற்றும் விசாகப்பட்டினம்[13] தொடருந்து நிலையங்கள் இருப்புப்பாதை மூலம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வானூர்தி நிலையங்கள்

விசாகப்பட்டினம்[14], விசயவாடா[15] மற்றும் திருப்பதி[16] வானூர்தி நிலையங்கள், வானூர்தி மூலம் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் இம்மாநிலத்தை இணைக்கிறது.

விளையாட்டு

மட்டைப்பந்து விளையாட்டு மிகவும் பரவலான விளையாட்டு ஆகும். விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA விளையாட்டரங்கம் ஆந்திரப் பிரதேச கிரிக்கெட் அணிக்கு சொந்தமானது. இந்த இடம் தொடர்ந்து பன்னாட்டு மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்குப் பொருந்தும். ஆந்திராவில் இருந்து குறிப்பிடத்தக்க வீரர்கள், விசயநாகரத்தின் மகராச்சுகுமார், எம். வி. நரசிம்ம ராவ், எம். எசு. கே. பிரசாத், வி.வி.எசு. லட்சுமண், திருமலசீட்டி சுமன், அர்சத் அய்யூப், அம்பதி ராயுடு, வெங்கடாபதி ராசா, அரவிந்த நாயுடு, யலக்க வேணுகோபால் ராவ் ஆகியோராவர். ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதல் பெண் இந்தியரான கர்ணம் மல்லேசுவரி, ஆந்திராவின் திருகாகுளம் மாவட்டத்திலிருந்து வந்தவர். 19 செப்டம்பர் 2000 அன்று, 69 கிலோ பிரிவில் 240 கிலோ எடை கொண்ட வெண்கலப் பதக்கம் வென்றார்.

பௌத்தத் தொல்லியல் களங்கள்

  1. நாகார்சுனகொண்டா
  2. அமராவதி
  3. உண்டவல்லி
  4. போச்சன்ன கொண்டா
  5. கண்டசாலா
  6. சந்திராவரம்
Thumb
நாகார்சுனகொண்டாவில் உள்ள புத்தரின் சிலையுடன் கூடிய தொல்லியல் களம்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads