எண்ணூர்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

எண்ணூர்map
Remove ads

எண்ணூர் (ஆங்கிலம்: Ennore) இந்திய மாநகரம் சென்னையின் நகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். சென்னையின் வடக்கே கொறத்தலையார் ஆறு, எண்ணூர் சிறுகுடா மற்றும் வங்காள விரிகுடா கடல் என முப்புறமும் நீர் சூழ்ந்த தீபகற்ப நிலப்பகுதியாக விளங்குகிறது. எண்ணூர் சிறுகுடா எண்ணூரையும் எண்ணூர் துறைமுகத்தையும் பிரிக்கிறது. இது அண்ணா நகர், சாசுத்திரி நகர், நேரு நகர், எல்லையம்மன் கோயில் தெரு, சிவன்படை வீதி, கமலம்மா நகர், திலகர் நகர், காந்தி நகர், காவேரி நகர், கிரிப்பா தோட்டம், சீயோன் நகர், எம்.சி.ஆர். நகர் (RS Road), சஞ்சய் காந்தி நகர், காட்டுக்குப்பம், கொட்டங்குப்பம், வள்ளுவர் நகர், காமராசு நகர், செயலலிதா நகர் (புதிய வ.உ.சி. நகர்), சத்தியவாணி முத்து நகர், உலகநாதபுரம், எண்ணூர் குப்பம், முகத்துவாரக் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர் குப்பம், எர்ணாவூர், அன்னை சிவகாமி நகர் (பர்மா நகர்) இந்திராகாந்தி குப்பம், நேத்தாசி நகர், பாரதியார் நகர் வடக்கு பாரதியார் நகர், ராமகிருசுணா நகர் போன்ற ஊர்களை உள்ளடக்கியது. கிழக்கே கடலும், மேற்கே கடலில் கலக்கும் பக்கிங்காம் கால்வாயும் ஓடுகிறது.

Thumb
எண்ணூர் தொடருந்து நிலையம்
விரைவான உண்மைகள்

முருகன் கோயில், மசூதி, உலகாத்தம்மன் ஆலயம், புனித சூசையப்பர் ஆலயம், விநாயகர் கோவில், பொற்காளியம்மன் ஆலயம் குறிப்பிடத்தக்கவை.

அனல் மின் நிலையம், அசோக் லேலாண்ட், பவுண்டிரீ, பாரி, கோத்தாரி என தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன.

Thumb
எண்ணூர் சிறுகுடாவில் சூரிய மறைவு
Remove ads

இவற்றையும் பார்க்கவும்

எண்ணூர் துறைமுக கப்பல் மோதல் விபத்து

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads