எதையும் தாங்கும் இதயம்

பி. நீலகண்டன் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

எதையும் தாங்கும் இதயம்
Remove ads

எதையும் தாங்கும் இதயம் (Ethayum Thangum Ithayam) 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். இராஜேந்திரன், எம். ஆர். ராதா, விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர். திரைக்கதையை சி. என். அண்ணாதுரை எழுதியிருந்தார்.[1]

விரைவான உண்மைகள் எதையும் தாங்கும் இதயம், இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

தனவந்தரான சிங்காரவேலர், ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டிற்கு செல்கிறார். காட்டுவாசியான சிவகாமியைத் திருமணம் செய்து கொள்கிறார். சிவகாமியிடம், தான் திரும்பி வந்து தன்னுடன் அழைத்துச் செல்வதாக உறுதியளிக்க்கிறார். ஆனால் அவர் திரும்பி வரவேயில்லை. சிவகாமி ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள். சிவகாமியின் தாய் அக் குழந்தையை பக்கிரியிடம் ஒப்படைக்கிறாள். பக்கிரி அந்தக் குழந்தைக்கு மாடசாமி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான். இதற்கிடையில் சிங்காரவேலர், ஒரு நபரிடம் சொல்லி சிவகாமியைத் தேடச் சொல்கிறார்.. அந்த நபர் சிவகாமி இறந்துவிட்டதாக சிங்காரவேலரிடம் தெரிவிக்கிறார். அதனால் சிங்காரவேலர் தனது மூத்த சகோதரியின் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். மாடசாமி வளர்ந்தபின், பக்கிரி அவனுடைய வாழ்க்கை கதையைச் சொல்கிறான். மாடசாமி தனது தந்தையைக் கண்டு பழி வாங்க எண்ணுகிறான். அவன் கைத்துப்பாக்கி வைத்திருந்தான். தவறுதலாக ஒரு பெரியவரை தனது தந்தை என எண்ணி தாக்க முற்படும்பொழுது காவலர்களால் பிடிக்கப்படுகிறான். நீதிமன்றத்தில் திருடிய குற்றத்திற்காக ஆஜர் படுத்தப்படுகிறான். சிங்காரவேலர், இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக உள்ளார். வழக்கு விசாரணையில் மாடசாமி தனது மகன் என்பதை சிங்காரவேலர் உணர்கிறார். இப் பிரச்சனைகள் எவ்வாறு முடிவுக்கு வந்தன என்பதுடன் இக் கதை முடிவடைகிறது.[2]

Remove ads

நடிப்பு

பின்வரும் நடிகர்களின் பெயர்கள் இப் படத்தின் பாடல்கள் அடங்கிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை.[2]

துணை நடிகர்கள்

இசை அமைப்பு

டி. ஆர். பாப்பா இசையமைத்திருந்தார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், எம். கே. ஆத்மநாதன், வாலி ஆகியோர் பாடல்கள் இயற்றினர். கே. ஆர். ராமசாமி பாடியுள்ளார். பின்னணிப் பாடகர்களான டி. எம். சௌந்திரராஜன், ஏ. எல். ராகவன். எஸ். வி. பொன்னுசாமி, பி. லீலா, பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலக்‌ஷ்மி, எஸ். ஜானகி மற்றும் சரஸ்வதி ஆகியோரும் இப் படத்தில் பாடல்களைப் பாடியுள்ளனர்.

"கண்ணும் கண்ணும் கலந்து" எனத் தொடங்கும் பாடலை கே. ஆர். ராமசாமி மற்றும் எஸ். ஜானகி பாடியிருந்தனர். இப் பாடல் முதன்முதலில் கிராமபோன் இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இப் பாடலில் வரும் (பிராத்தலு) என்ற சொல்லை தணிக்கை குழு தடை செய்தது. அதனால் இப் பாடல் மறு பதிவு செய்யப்பட்டது. அதை ஏ. எல். ராகவனும், எஸ். ஜானகியும் பாடியுள்ளனர். இந்த மறுபதிவே படத்தில் வெளிவந்தது. கிராமபோன் இசைத்தட்டில் மட்டும் கே. ஆர். ராமசாமியின் குரலும், ஏ. எல் ராகவனின் குரலும் இப் பாடலிற்காக ஒலிக்கின்றன. "உள்ளம் தேடாதே என்று சொல்லுதே" எனத் தொடங்கும் பாடல் இப் படத்திலிருந்து நீக்கப்பட்டது.

பாடல்கள்

இப்படத்தில் பின்வரும் பாடல்கள் இடம்பெற்றன:

மேலதிகத் தகவல்கள் வ.எண்., பாடல் ...
Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads