சி. ஆர். விஜயகுமாரி

தமிழ்த் திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

விஜயகுமாரி (பிறப்பு: 27 ஏப்ரல் 1936) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையும், இவர் அன்றைய முன்னணி நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரனின் மனைவியும் ஆவார்.

விரைவான உண்மைகள் சி. ஆர். விஜயகுமாரி, பிறப்பு ...
Remove ads

முன் வாழ்கை

விஜயகுமாரி தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ராமசாமி, தங்கலட்சுமி இணையருக்கு இரண்டவது மகளாகப் பிறந்தார்.[3]

திரை வாழ்வு

ஏவிஎம் தயாரிப்பில் 1956 இல் வெளியான குலதெய்வம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஸ்ரீதரின் கல்யாண பரிசு (1959) படத்தில் நடித்து புகழ்பெற்றார். ஜெமினியின் வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958) படத்தில் ஜெமினி கணேசனின் தங்கையாக நடித்தார். அப்படம் இந்தியில் ராஜ்திலக் என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டபோது அதிலும் விஜயகுமாரி நடித்தார். அதன் பிறகு வந்த இந்திப்பட வாய்புகளை மறுத்து தமிழ்ப் படங்களிலேயே கவனம் செலுத்தினார்.

விஜயகுமாரி சிவாஜி கணேசனுடன் அவரது மகளாக பார் மகளே பார் திரைப்படத்திலும், முறைபெண்ணாகவும், காதலியாகவும் குங்குமம் திரைப்படத்திலும், தங்கையாக பச்சை விளக்கு, சாந்தி, சவாலே சமாளி, சித்ரா பௌர்ணமி திரைப்படங்களிலும், மனைவியாக ராஜ ராஜ சோழன் திரைப்படத்திலும், அக்காவாக அன்பைத்தேடி திரைப்படத்திலும் நடித்துள்ளார். 60-களில் முன்னணி இயக்குநர்களான ஸ்ரீதரின் முதல் படமான " கல்யாண பரிசு ", கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் திரைப்படம் சாரதா, ஆரூர்தாஸ் இயக்கிய முதல் திரைப்படம் பெண் என்றால் பெண் ஆகியவற்றில் நடித்துள்ளார். அவர் நடித்த சில திரைப்படங்கள் அவரேற்ற வேடத்தின் பெயர் கொண்டு வெளிவந்தன. காட்டாக, சாரதா, சாந்தி, ஆனந்தி, பவானி ஆகும். ஸ்ரீதரின் இயக்கத்தில் அவர் நடித்த போலீஸ்காரன் மகள் , ஏ. சி. திரிலோகச்சந்தர் இயக்கிய நானும் ஒரு பெண் திரைப்படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது. பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியாக நடித்துள்ளார்.

Remove ads

தனிப்பட்ட வாழ்கை

இவர் திரைப்பட நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரனைத் திருமணம் புரிந்து கொண்டார்.[4] 1961 முதல் 1973 வரை 12 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர்.[5] இருப்பினும் மணவாழ்வில் ஏற்பட்ட பிணக்கின் விளைவாக இருவரும் பிரிந்தனர். இந்த இணையருக்கு 1963 இல் பிறந்த இரவிக்குமார் என்றொரு மகன் உள்ளார்.[6]

நடித்த சில திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads