ஈத்தைல் அசிட்டேட்டு

From Wikipedia, the free encyclopedia

ஈத்தைல் அசிட்டேட்டு
Remove ads

எத்தில் அசிட்டேட்டு அல்லது ஈத்தைல் அசிட்டேட்டு (Ethyl acetate) என்பதன் முறையான பெயர் எத்தில் எத்தனோயேட்டு (ethyl ethanoate) ஆகும். இதனை இலத்தீன் எழுத்துகளில் எழுத்தில் சுருக்கி "EtOAc" அல்லது "EA" என்றும் எழுதுவதுண்டு. இந்த கரிமவேதிச் சேர்மத்தின் வேதிவாய்பாடு CH3COOCH2CH3. இது நிறமில்லாத, தனித்தன்மையான நறுமணம் தரும், நீர்மப் பொருள். இதனை ஒட்டும்பசை அல்லது ஒட்டுநீர்மப் பொருள்கள் உருவாக்குவதற்கும், நகச்சாயப் பொருள்களிலும் குடிக்கும் காப்பியில் உள்ள காஃபீன் நீக்கிய காப்பி போன்றவற்றிலும், சிகரட்டுகளிலும் பயன்படுத்துகின்றார்கள். எத்தில் அசிட்டேட்டு என்பது எத்தனால், அசிட்டிக் அமிலம் ஆகியவற்றின் ஒர் எசுத்தர் ஆகும். பெரிய அளவில் உலகில் பல பகுதிகளிலும் இது கரைப்பான் பயன்பாட்டுக்காக உருவாக்கப்படுகின்றது. சப்பான், வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் 1985 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படைப்பின் மொத்த அளவு 400,000 டன்கள்[4] 2004 ஆம் ஆண்டில், உலகம் முழுவதிலும் மொத்தம் 1.3 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[5]

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads