எப்லா இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எப்லா (Ebla; அரபி: إبلا, modern: تل مرديخ, Tell Mardikh), சிரியாவின் பண்டைய இராச்சியங்களில் ஒன்றாகும். எப்லா இராச்சியம் கிமு 3500 முதல் கிமு 1600 வரை ஆட்சி செலுத்தியது.[1][2] எப்லா பண்பாட்டுத் தொல்லியல் களங்கள், அலெப்போ நகரத்திற்கு தென்மேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில், மார்திக் கிராமத்தின் அருகே பண்டைய எப்லா நகரம் இருந்தது. எல்பா நகரம் கிமு 3,000 முதல் கிமு 1600 ஆண்டின் நடுப்பகுதி வரை முக்கிய மையமாக விளங்கியது. எல்பா தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் படி, எப்லா நாகரீகம், வெண்கலக் காலததில் லெவண்ட், பண்டைய எகிப்து மற்றும் ஊர் நாகரீகத்திற்கு இணையானதாகக் கருதப்படுகிறது. எப்லா நகரம் கிபி 7ம் நூற்றாண்டில் முற்றிலும் அழிவுற்றது.
துவக்க வெண்கலக் காலத்தில், கிமு 3500ல் குறுநில அரசாகத் தோன்றிய எப்லா இராச்சியம், பன்னாட்டு வணிகத்தில் முன்னேறி, கிழக்கு மற்றும் வடக்கு சிரியாப் பகுதிகளை கைப்பற்றி ஆண்டது.
கிமு 23ம் நூற்றாண்டில் முதல் எப்லா இராச்சியம் அழிக்கப்பட்டது. [1] [3]
எப்லா இராச்சியம் இரண்டாம் முறையாக, மூன்றாவது ஊர் வம்சத்தவரால் மீண்டும் நிறுவப்பட்டது. மீண்டும் எப்லா இராச்சியம் அழிக்கப்பட்டபோது, அமோரிட்டு பழங்குடிகளால் மீண்டும் மூன்றாவது முறையாக எப்லா இராச்சியம் நிறுவப்பட்டது. இம்மூன்றாம் எப்லா இராச்சியம், கிமு 1600ல் இட்டைட்டுப் பேரரசால் அழிக்கப்படும் வரை ஆட்சி செய்தது.
Remove ads

Remove ads
இரண்டாம் எப்லைட்டுகளின் இராச்சியம் கிமு 2300 முதல் கிமு 2000 வரை ஆட்சி செலுத்தியது.[5]
இரண்டம் எப்லா இராச்சியம் கிமு 2050 முதல் கிமு 2000க்கு உட்பட்ட காலத்தில், அக்காடியப் பேரரசால் அழிந்ததாக கருதப்படுகிறது.[6][7][8]
Remove ads
மன்னர் மார்டிக் வம்சத்தின் கீழ் மூன்றாவது எப்லா இராச்சியம், கிமு 2000 – 1800 மற்றும் கிமு 1800–1600 வரை ஆட்சி செய்தது.[5] திட்டமிட்ட நகரமாக எப்லா மீண்டும் கட்டப்பட்டது. [10]
இப்பட்டியல் முதல் இராச்சியத்தின் பத்து மன்னர்களையும் [11] மற்றும் மூன்றாம் எப்லா இராச்சித்தின் 33 மன்னர்களையும் குறித்துள்ளது.[note 1][13][12] இரண்டாம் இராச்சிய மன்னர்களின் பெயர்கள் இல்லை.[14][15]
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads