இட்டைட்டு பேரரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இட்டைட்டு பேரரசு (Hittites) (/ˈhɪtaɪts/) வடமத்திய அனதோலியாவில், தற்கால துருக்கி, சிரியா மற்றும் லெபனான் பகுதிகளை, அட்டுசா எனும் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு, கிமு 1,600 முதல் கிமு 1,178 முடிய இந்திய-ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான இட்டைட்டு மொழி பேசிய இட்டைட்டு மக்கள் ஆட்சி செய்தனர்.


கிமு 14ம் நூற்றாண்டின் நடுவில், இட்டையிட்டுப் பேரரசர் முதலாம் சுப்பிலுலியுமா காலத்தில், அனதோலியா மட்டுமின்றி, வடக்கு லெவண்ட் மற்றும் மேல் மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தில் உச்சத்தில் இருந்தது.
கிமு 15 முதல் 13ம் நூற்றாண்டு வரை, இட்டையிட்டுபேரரசு, அண்மைக் கிழக்குப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, பண்டைய எகிப்து, இடைக்கால அசிரியா பேரரசு மற்றும் மிட்டன்னி (Mitanni) பேரரசுகளுடன் பிணக்குகள் கொண்டிருந்தது.
இறுதியில் அசிரியர்கள் இட்டைட்டுப் பேரரசின் பல பகுதிகளை தங்கள் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர். இட்டைட்டு பேரரசின் எஞ்சிய பகுதிகளை, மேற்கு மத்திய அனதோலியாவின் பிரிகியா இராச்சியம் ஆக்கிரமித்துக் கொண்டது.[2]
கிமு 1180க்குப் பின்னர் வெண்கலக் காலத்தில், இட்டைட்டுப் பேரரசு உருக்குலைந்து, புதிய தன்னாட்சியுடன் கூடிய இட்டைட்டு குறுநில நகர அரசுகளாக சிதறுண்டது. இந்த குறுநில நகர இட்டைட்டு இராச்சியங்கள், கிமு 8ம் நூற்றாண்டில், புதிய அசிரியப் பேரரசால் உள்வாங்கப்படும் வரை ஆட்சி செலுத்தின.
இட்டைட்டு மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான, அனதோலியா மொழிகளில் ஒன்றாகும்.[3]
யூதர்களின் பழைய ஏற்பாடு நூல்களில், இட்டையிட்டுகள் குறித்த செய்திகள் உள்ளது.[4]
Remove ads
இட்டையிட்டு ஆட்சியாளர்கள்
- பம்பா கிமு 22ம் நூற்றாண்டு
- பிதானா
- பியுஸ்தி
- அனிட்டா
- துதாலியா
- சர்ருமா
பழைய இட்டைட்டு மன்னர்கள்
Remove ads
மத்தியகால இட்டைட்டு இராச்சியம்
இட்டைட்டு பேரரசின் மன்னர்கள்

Remove ads
இட்டைட்டு பேரரசின் தொல்பொருட்கள்
இட்டையிட் பேரரசின் தொல்பொருட்கள் துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள அனதோலியா நாகரீகங்களின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
- சிங்கக் கோட்டை நுழைவாயில், அட்டுசா நகரம், இட்டையிட்டுப் பேரரசு
- இட்டையிட்டு மக்களின் 12 பாதாளக் கடவுளர்கள்
- இட்டையிட்டு பேரரசின் நினைவுச் சின்னம்
- கிமு 1258ல் எகிப்து-இட்டையிட்டுகளின் போர் ஒப்பந்தம்
- பிந்தைய இட்டையிட்டுக் கால மனித மற்றும் சிங்கத் தலையுடன் கூடிய சிற்பம்
- கிமு 1235 காலத்திய வெண்கலத் தட்டு
- மன்னர் மூவாதலியின் முத்திரை
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இலக்கியங்களில்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads