எம். ஆர். சேதுரத்தினம்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம். ஆர். சேதுரத்தினம் ஐயர் என்றறியப்படும் மனத்தட்டை ராமகிருஷ்ண சேதுரத்தினம் ஐயர் (ஜனவரி 2 1888[1][2] - ?) ஒரு தமிழக அரசியல்வாதி. சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராக மார்ச் 16, 1928 முதல் அக்டோபர் 27, 1930 வரை பணியாற்றியவர்.[3]
வாழ்க்கைக் குறிப்பு
திருச்சியில்[4] பிறந்த சேதுரத்தினம் ஐயர், குளித்தலைப் பள்ளி, தேசிய உயர்நிலைப்பள்ளி திருச்சி, புனித வளனார் பள்ளி திருச்சி ஆகியவற்றில் கல்வி கற்றார்.[2]
அரசியல் வாழ்வு
இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து பிரிந்து போன சுவராஜ் கட்சியில் இணைந்து தன் அரசியல் வாழ்வைத் துவக்கினார். திருச்சி மாவட்டக் குழுவிற்கு (ஜில்லா போர்டு) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1920, 1923 மற்றும் 1926 தேர்தல்களில் திருச்சி பொதுத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
அமைச்சரவையில் இடம்
1928ல் ப. சுப்பராயன் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது அதற்கு உதவினார். சைமன் கமிஷன் சென்னை வந்த போது அரசு அதற்கு வரவேற்பளித்தது. அதனை சுவராஜ் கட்சியினர் எதிர்த்தனர். அரசின் முடிவை எதிர்த்து, சுப்பராயனின் அமைச்சர்கள் ஆற்காடு ரங்கநாத முதலியாரும் ஆரோக்கியசாமி முதலியாரும் பதவி விலகினர். அரசு கவிழாமல் தப்பிக்க சுப்பராயன் நீதிக்கட்சியின் ஆதரவையும் சில் சுவராஜ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் நாடினார். சேதுரத்தினம் ஐயர் சுப்பராயனுக்கு ஆதரவளித்து அவரது அமைச்சரவையில் இடம் பெற்றார். இதனால் சுவராஜ் கட்சியினர் அவரைத் துரோகி என்று பழித்தனர். ஐயர் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads