எம். ஈ. எச். முகம்மது அலி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முகம்மது எகுத்தார் ஹாஜியார் முகம்மது அலி (Mohamed Ehuttar Hadjiar Mohamed Ali, 27 மார்ச் 1925 31 திசம்பர் 2004) கிழக்கிலங்கை முசுலிம் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

விரைவான உண்மைகள் எம். ஈ. எச். முகம்மது அலிM. E. H. Mohamed Aliநா.உ., இலங்கை நாடாளுமன்றம் மூதூர் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்புy

முகம்மது அலி கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் பிறந்தவர்.[1][2] எம். ஈ. எச். மகரூப் இவரது சகோதரர் ஆவார்.[3]

அரசியலில்

முகம்மது அலி கிண்ணியா கிராம சபைத் தலைவராகப் பணியாற்றினார்.[3] இவர் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்டுக் கட்சியின் சார்பில் மூதூர் தொகுதியில் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கரிடம் 1720 வாக்குகளால் தோல்வியடைந்தார்.[2][4] 1952 தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2][5] 1956, மார்ச் 1960 தேர்தல்களிலும் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6][7] சூலை 1960 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[8]

இலங்கைத் தமிழரசுக் கட்சி 1961 இல் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டங்களில் முகம்மது அலி தீவிரமாகப் பங்குபற்றினார்.[2] தமிழரசுக் கட்சியின் மூதூர் உறுப்பினர் தம்பையா ஏகாம்பரம் 1962 இல் இறந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு 1962 சூன் 28 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் முகம்மது அலி தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[9][10][11] 1965 தேர்தலில் மீண்டும் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][12] 1970 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[2][13]

பின்னர் முகம்மது அலி மாலைத்தீவுகளில் இலங்கையின் தூதுவராகவும், நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.[14] இவர் 2004 திசம்பர் 31 இல் தனது 79-வது அகவையில் காலமானார்.[2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads