எம். ஈ. எச். மகரூப்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முகம்மது எகுத்தார் ஹாஜியார் மகரூப் (Mohamed Ehuttar Hadjiar Maharoof, 5 சனவரி 1939 - 20 சூலை 1997) இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
மகரூப் 1939 சனவரி 5 இல் இலங்கையின் கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தார்.[1][2] இவரது தந்தை கிண்ணியா கிராமசபைத் தலைவராக இருந்தவர். சகோதரர் எம். ஈ. எச். முகம்மது அலி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.[2] மாத்தளை சாகிரா கல்லூரி, கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, கண்டி புனித அந்தோனியார் கல்லூரி, கொழும்பு பெம்புரோக் அகாதமி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[2]
மகரூபின் மகன் இம்ரான் மகரூப் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[3][4]
Remove ads
அரசியலில்
மகரூப் 1965 இல் தந்தை இறந்ததை அடுத்து அரசியலில் இறங்கினார்.[2] கிண்ணியா நகர சபையில் தலைவராக 1966 முதல் 1971 வரை இருந்தார்.[1]
மகரூப் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மூதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5] 1978 இல் மன்னார் மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][6] 1989 தேர்தலில் ஐதேக வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[7] 1990 இல் துறைமுகங்கள், மற்றும் கப்பல் போக்குவரத்து இராசாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[8] 1994 தேர்தலில் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.[9]
Remove ads
படுகொலை
மகரூப் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களுடன் சிறந்த புரிந்துணர்வைக் கொண்டிருந்தார். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சி உருவாக்கத்தையும், முசுலிம்களுக்கு என தென்கிழக்கு மாகாணசபை உருவாக்கத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.[10][11] 1997 சூலை 20 காலையில் மகரூப் பயணம் செய்த வாகனம் இறக்கண்டி செல்லும் வழியில் குச்சவெளி வீதியில் திருகோணமலைக்கும் நிலாவெளிக்கும் இடையில் 6 ஆம் மைல் கட்டையடியில் வைத்து கண்ணிவெடி ஒன்றில் சிக்கியதில் மகரூப் கொல்லப்பட்டார்.[12][13] அவருடன் மேலும் ஐவரும் (ஓட்டுனர், பாதுகாப்பு அதிகாரி, நண்பர், பாடசாலை அதிபர் ஒருவர், சாரதியின் 5 வயது மகன்) கொல்லப்பட்டனர்.[12][13] விடுதலைப் புலிகளே இத்தாக்குதலை மேற்கொண்டதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டது.[14][15]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads