சோ. ம. கிருசுணா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

சோ. ம. கிருசுணா
Remove ads

சோமனஅல்லி மல்லையா கிருசுணா (Somanahalli Mallaiah Krishna) ((1மே 1932 – 10 திசம்பர் 2024)) முன்னாள் கருநாடக முதலமைச்சராவார். இவர் இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக பதவிவகித்தவர்.[1] 2004-2008 ஆண்டுகளில் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பதவிவகித்துள்ளார். கடைசியாக பாஜகவில் இருந்தார். எஸ்.எம். கிருஷ்ணாதிசம்பர் 1989 முதல் சனவரி 1993 வரை கர்நாடக சட்டப் பேரவையின் சபாநாயகராகப் பணியாற்றினார். 1971 முதல் 2014 வரை பல்வேறு காலங்களில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். 2023 இல், கிருஷ்ணாவுக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் சோ. ம. கிருசுணா, 27வது வெளியுறவுத் துறை அமைச்சர் (இந்தியா) ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

கிருஷ்ணா எஸ். சி. மல்லையாவின் மகன் ஆவார். இவர் கருநாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் தாலுகாவில் உள்ள சோமனஅள்ளி என்ற கிராமத்தில் வொக்கலிகா குடும்பத்தில் பிறந்தார். மைசூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாசாலாவில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பினை முடித்தார்.[3] மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் இளங்கலைப் படிப்பை முடித்த பின்னர், கிருஷ்ணா, பெங்களூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரி என்று அழைக்கப்பட்ட பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். கிருஷ்ணா அமெரிக்காவில் டல்லாஸ், டெக்சாஸில் உள்ள தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றுள்ளார். இங்கு இவர் முழு நிதியுதவியுடன் கல்வி பயின்ற அறிஞராக இருந்தார். இவர் இந்தியா திரும்பிய உடனேயே, 1962-ல் கர்நாடக சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

Remove ads

வகித்த பதவிகள்

  • 3வது கருநாடக சட்டமன்ற உறுப்பினர், 1962-67, மத்தூரிலிருந்து. ஆனால் 1967-ல் தோல்வியடைந்தார்.
  • பொதுநலவாய நாட்டுக்கான இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர், பாராளுமன்ற மாநாடு, நியூசிலாந்து, 1965
  • 4வது மக்களவை உறுப்பினர், 1968-1971, இடைத்தேர்தலுக்குப் பிறகு மாண்டியாவிலிருந்து சோசலிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்
  • உறுப்பினர், 5வது மக்களவை 1971-1972, மாண்டியாவிலிருந்து காங்கிரசு வேட்பாளர்
  • உறுப்பினர், கர்நாடக சட்ட மேலவை 1972–1977
  • 1972-77 கர்நாடக அரசு வணிகம் & தொழில்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்
  • உறுப்பினர், 7வது மக்களவை 1980-1984, மாண்டியாவிலிருந்து. ஆனால் 1984 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்
  • உறுப்பினர், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய பிரதிநிதிகள், 1982
  • 1983-1984 காலகட்டத்தில் மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்தார்
  • 1984-1985 காலகட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர்
  • உறுப்பினர், 9வது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் 1989–1994
  • சபாநாயகர், கர்நாடக சட்டமன்றம் 1989–93
  • மார்ச் 1990 இல் ஐக்கிய இராச்சியம், வெஸ்ட்மின்ஸ்டரில் நடைபெற்ற பொதுநலவாய நாடாளுமன்றக் கருத்தரங்கிற்குப் பிரதிநிதி
  • கர்நாடகாவின் துணை முதல்வர், 1993-1994
  • ஏப்ரல் 1996-ல் மாநிலங்களவை உறுப்பினர்
  • கர்நாடக முதல்வர் அக்டோபர் 1999 - 2004 (மத்தூர் சட்டமன்ற உறுப்பினர்)[5]
  • கர்நாடக சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்: 2004 (சாம்ராஜ்பேட்டை தொகுதி)
  • ஆளுநர், மகாராட்டிரா: 2004–2008
  • 2008-2014 கருநாடகாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்[6]
  • வெளிவிவகார அமைச்சர், இந்திய அரசாங்கம்: 22 மே 2009 முதல் 26 அக்டோபர் 2012 வரை[7]
Remove ads

இறப்பு

நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்படிருந்த கிருஷ்ணா 2024 திசம்பர் 10 அன்று 92 வயதில் பெங்களூருவில் உள்ள இவரது இல்லத்தில் காலமானார்.[8][9][10]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads