ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் (திரைப்படம்)
Remove ads

ஏஞ்சல்ஸ் & டெமான்ஸ் (Angels & Demons) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க மர்மத் திரைப்படம் ஆகும். அகிவா கோல்ட்ஸ்மேன் மற்றும் டேவிட் கோப் ஆகியோரால் எழுதப்பட்ட இப்படத்தை ரான் ஹவர்டு இயக்கியிருந்தார். அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவுனின் 2000 ஆம் ஆண்டு ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ் என்ற இதே தலைப்பில் வெளியான புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியான தி டா வின்சி கோட் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இதையும் ஹோவர்ட் இயக்கியிருந்தார். இது இராபர்ட் லாங்டன் திரைப்படத் தொடரின் இரண்டாவது பாகமாகும்; ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் புத்தகமானது முதலில் வெளியிடப்பட்டு, தி டா வின்சி கோடு க்கு முன்னர் வந்திருந்தாலும் கூட, இது தி டா வின்சி கோடு என்பதன் தொடர்ச்சியே ஆகும்

விரைவான உண்மைகள் ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ், இயக்கம் ...
Remove ads

படப்பிடிப்பு

படப்பிடிப்பு இத்தாலியின் உரோம் மற்றும் கலிபோர்னியாவின் கல்வர் நகரில் உள்ள சோனி பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் நடந்தது. டாம் ஹாங்க்ஸ் பேராசிரியர் ராபர்ட் லாங்டனாக மீண்டும் நடித்திருந்தார். அதே நேரத்தில் அய்லெட் ஜூரர் ஒரு மர்மமான இல்லுமினாட்டி பயங்கரவாதியிடமிருந்து காணாமல் போன எதிர்ப் பொருள் குப்பியை மீட்டெடுக்கும் தேடலில் லாங்டனுடன் இணைந்து ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் விட்டோரியா வெட்ராவாக நடித்திருந்தார். தயாரிப்பாளர் பிரையன் கிரேசர், இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் அகிவா கோல்ட்ஸ்மேன் ஆகியோர் இப்படத்திலும் மீண்டும் பணியாற்றினர்.

Remove ads

வெளியீடு

ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் மே 4, 2009 அன்று உரோமில் திரையிடப்பட்டது. மேலும் மே 15 அன்று சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் கொலம்பியா பிக்சர்ஸ் பதாகையின் மூலம் வெளியிடப்பட்டது. $150 மில்லியன் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகளவில் $485.9 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்தது. மேலும், 2009 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஒன்பதாவது படமாக அமைந்தது. மேலும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தொடர் வெளியீடு

ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் திரைப்படத்தையடுத்த ராபர்ட் லாங்டன் தொடரின் நான்காவது புத்தகமான 'இன்ஃபெர்னோ என்ற நூலின் திரைப்படத் தழுவலை சோனி பிக்சர்ஸ் தயாரித்தது. அக்டோபர் 14, 2016 அன்று வெளியிடப்பட்டது.[4] இப்படத்துக்காக டேவிட் கோப் திரைக்கதையை எழுத ரான் ஹோவர்ட் இயக்கியிருந்தார். டாம் ஹாங்க்ஸ் ராபர்ட் லாங்டனாக மீண்டும் நடித்திருந்தார்.[5] பெலிசிட்டி ஜோன்ஸ், பென் போஸ்டர், இர்பான் கான் மற்றும் சிட்ஸ் பாபெட் நுட்சன் ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads