ஏரியல் சரோன்

From Wikipedia, the free encyclopedia

ஏரியல் சரோன்
Remove ads

ஏரியல் சரோன் (Ariel Sharon, எபிரேயம்: אריאל שרון, அரபி: أرئيل شارون, Ariʼēl Sharōn, பெப்ரவரி 26, 1928 – சனவரி 11, 2014) இசுரேலின் படைத்தலைவரும் அரசியல்வாதியும் ஆவார். தாம் பக்கவாதத்தால் தாக்கப்படும்வரை 2001இலிருந்து 2006 வரை இசுரேலின் 11வது பிரதமராகப் பணியாற்றியவர்.[1]

விரைவான உண்மைகள் ஏரியல் சரோன் אריאל שרון, 11வது இசுரேலின் பிரதமர் ...
Remove ads

இளமை

சரோன் அப்போது பிரித்தானிய ஆளுமையில் இருந்த பாலசுதீனத்தில் கஃபார் மலாலில் பெப்ரவரி 27, 1928இல் பிறந்தார். இசுரேலியப் படைத்துறையில் பல ஆண்டுகள் பணி புரிந்தார். பல சண்டைகளில் பங்கேற்றுள்ள சரோன் 1974இல் படைத்துறைத் தலைவராக (ஜெனரல்) பணி ஓய்வு பெற்றார். பின்னர் அரசியலில் ஈடுபட்டார்.

அரசியல்

1977இல் சரோன் வேளாண்மை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1981இல் பாதுகாப்பு அமைச்சரானார். லெபனானில் நூற்றுக்கணக்கான குடிமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டால் 1983இல் அரசுப்பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இசுரேலிற்கும் பாலசுதீனத்திற்கும் இடையே போர் தொடங்கியதை ஒட்டி 2001இல் இசுரேலியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004இல் கூடிய பாலசுதீனர்கள் வாழும் காசா கரையிலிருந்து இசுரேல் வெளியேறும் என அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

Remove ads

உடல்நலக்கேடும் மரணமும்

திசம்பர் 2005 இல் சரோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சனவரி 4, 2006 அன்று மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பெரும் பக்கவாதத்தால் (மூளையில் குருதிப் பெருக்கு) பாதிக்கப்பட்டார்.

அவர் உயிரிழந்ததாக பல வதந்திகள் பரவின;அவரது மருத்துவர் இவற்றை மறுத்தார். சரோன் புதியதாகத் துவங்கிய கடிமா கட்சியின் மற்றொரு அங்கத்தினரான எகுட் ஓல்மெர்ட் பொறுப்புப் பிரதமராக தேர்தல்கள் நடைபெறும்வரை பதவியேற்றார். பின்னர் நடந்த தேர்தல்களில் வென்று ஓல்மெர்ட் இசுரேலியப் பிரதமரானார்.

சரோன் தமது 85ஆவது அகவையில் இசுரேலின் ரமத் கான் மருத்துவமனையில் இதயச் செயலிழப்பு காரணமாக சனவரி 11, 2014இல் இயற்கை எய்தினார்.[2][3]

மேற்சான்றுகள்

பிற வலைத்தளங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads