ஏ. ஆர். அந்துலே
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அப்துல் ரகுமான் அந்துலே (9 பெப்ரவரி 1929 – 2 திசம்பர் 2014) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மகாராட்டிர முதலமைச்சராகவும் இந்திய நடுவண் அரசு அமைச்சரவையில் சிறுபான்மையினர் நல அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். பதினான்காவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஊழலுக்காக பம்பாய் உயர் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
அந்துலே காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், ராய்காட் மக்களவைத் தொகுதியில் ஆனந்த் கீத்தேயிடம் தோற்றார்.
Remove ads
பிறப்பு
மகாராட்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தில் அம்பேத் சிற்றூரில் அஃபீசு அப்துல் கஃபூருக்கும் சோராபிக்கும் மகனாக 9 பிப்ரவரி 1929 ல் பிறந்தார்.
கல்வி
இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்த பின்னர் சட்டவியல் படித்தார். மும்பை பல்கலைக்கழகத்திலும்இலண்டனில் உள்ள லிங்கன் இன்னிலும் படித்தார்.
குடும்பம்
நர்கீசு என்ற மனைவியும், ஒரு மகனும் மூன்று மகள்களும் அந்துலேக்கு உள்ளனர்.
சட்ட மன்றத்தில்
மகாராட்டிர சட்டமன்றத்தில் 1962இலிருந்து 1976 வரை பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.[1] இந்தக் காலத்தில் சட்டம், நீதித்துறை துணை அமைச்சராகவும் துறைமுகங்கள், மீன்வளத்துறை அமைச்சராகவும் கட்டிடங்கள், குடியிருப்பு வசதிகள் அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.
- 1985இல் மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
முதலமைச்சர்
- 1980இல் மீண்டும் மகாராட்டிர சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 09 சூன் 1980 முதல் 12 சனவரி 1982 வரை மகாராட்டிர முதலமைச்சராகப் பணியாற்றினார். ஊழல் மற்றும் மிரட்டிப் பணம்பறித்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.[3]
நாடாளுமன்றத்தில்
- 1976 முதல் 1980 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.
- 1989 இல் ஒன்பதாவது மக்களவைக்கும் 1991இல் பத்தாவது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சூன் 1995 முதல் மே 1996 வரை நடுவண் அரசில் நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றிய அந்துலே, பெப்ரவரி 1996 முதல் மே வரை நீர்வளத்துறை கூடுதல் பொறுப்பையும் கவனித்துக் கொண்டார்.
- 1996 இல் பதினோராவது மக்களவைக்கும்,
- 2004 இல் பதினான்காவது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்மோகன் சிங் அரசில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[4]
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads