2020 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2020 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் (2020 United States presidential election) 2020 நவம்பர் 3 நடைபெற்றது. இது 59-வது நான்காண்டுகளுக்கு ஒருமுறையான அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தல் ஆகும். இத்தேர்தலில் அமெரிக்க வாக்காளர்கள் மாகாண வரையரை அடிப்படயில் 538 அரசுத்தலைவர் தேர்வாளர் குழுக்களுக்கு வாக்களிப்பர். மக்களால் தேர்தெடுக்கப்படும் தேர்வாளர் குழுக்கள் 2020 திசம்பர் 14 இல் புதிய குடியரசுத் தலைவரையும், துணைத் தலைவரையும் தேர்ந்தெடுப்பர் அல்லது தற்போது பதவியில் இருக்கும் அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப், துணைத்தலைவர் மைக் பென்சு ஆகியோரை மீண்டும் தேர்ந்தெடுப்பர்.[2]
எந்தவொரு தீவிரமான எதிர்ப்பும் இல்லாமல் குடியரசுக் கட்சியின் வேட்புமனுவை டோனால்டு திரம்பு பெற்றார். முன்னாள் துணைத் தலைவர் ஜோ பைடன் தனது நெருங்கிய போட்டியாளரான மேலவை உறுப்பினர் பர்னீ சாண்டர்சுடன் போட்டியிட்டு சனநாயகக் கட்சியின் வேட்புமனுவைப் பெற்றார். 2020 ஆகத்து 11 அன்று, ஜோ பைடன் தன்னுடன் இணைந்து போட்டியிடும் துணைத் தலைவராக செனட்டர் கமலா ஆர்சிசைத் தேர்ந்தெடுத்தார். கமலா ஆர்சிசு துணை வேட்பாளராகப் போட்டியிடும் முதலாவது ஆப்பிரிக்க-அமெரிக்கரும், முதலாவது இந்திய-அமெரிக்கரும், முதலாவது ஆசிய-அமெரிக்கரும், மூன்றாவது பெண் துணை அரசுத்தலைவர் வேட்பாளரும் ஆவார்.[3][4]
இத்தேர்தலில் வெற்றி பெறுபவர் 2021 சனவரி 20 இல் புதிய அரசுத்தலைவராக பதவியேற்பார். அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தல் வரலாற்றில் வயது கூடிய வேட்பாளர்களாக திரம்பும் பைடனும் போட்டியிடுகின்றனர். பைடன் வெற்றி பெற்று பதவியேற்கும் போது அவருக்கு அகவை 78 ஆகவும், அல்லது திரம்பு வெற்றி பெற்றால் அவர் 2021 இல் பதவியேற்கும் போது அகவை 74 ஆக இருக்கும். (இரானல்டு இரேகனுக்கு அவரது பதவி முடிவில் அகவை 77 ஆக இருந்தது).
Remove ads
பைடனின் வெற்றியை ஏற்க திரம்பு மறுத்தல்
தெரிவு வாக்குகளை பைடன் அதிகமாக பெற்ற போதிலும் முறையற்ற முறையில் அதிக வாக்குகளை பெற்றதாக கூறி பைடனின் வெற்றியை டொனால்டு திரம்பு ஏற்க மறுக்கிறார்.
பென்சில்வேனியா, மிக்சிக்கன், விசுகான்சின், யார்ச்சியாவில் பைடன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி டெக்சாசு மாநிலம் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்கமறுத்துவிட்டது. [5] உச்ச நீதிமன்றம் தேர்தல் முறைகேடு பற்றி தொடுத்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்ப்பட்ட போதும் திரம்பு தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் பணி முடிந்துவிடவில்லையென கூறினார். [6]
திரம்பு தேர்தல் அணியினர் பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பென்சில்வேனியா நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவ்வாறு முறைகேடு நடக்கவில்லையென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. [7] நவம்பரில் வந்த பென்சில்வேனியா நீதிமன்ற தீர்ப்பையடுத்து சில குடியரசு கட்சி தலைவர்கள் திரம்பு தேர்தலில் தோற்றதை ஏற்கவேண்டுமேன்றனர். ஆனால் திரம்பு தேர்தல் அணியினர் தோல்வியை ஒத்துக்கொள்ள மறுத்துவிட்டனர். [8]
திரம்பு தேர்தல் அணியினர் மிக்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மிக்சிகன் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவ்வாறு முறைகேடு நடக்கவில்லையென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேர்தலில் முறைகேடு நடந்ததாக திரம்பு தேர்தல் அணியினர் முதலில் நீதிமன்றத்தில் வழக்கு இதுவாகும். [9] விசுக்கான்சின் நீதிமன்றத்தில் மக்களாட்சி கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள இரு கவுண்டிகளில் போடப்பட்ட 200,000இக்கும் மேற்பட்ட வாக்குகளை செல்லாதது என அறிவிக்க கோரிய வழக்கு அடிப்படையற்றது என நீதிமன்றத்தால் கூறப்பட்டு தோற்றது [10]
Remove ads
குறிப்புகள்
- 2016 தேர்தலில் திரம்பின் அதிகாரபூர்வ மாநிலமாக நியூயார்க் இருந்தது. பின்னர் 2019 இல் அவர் தனது இருப்பிடத்தை புளோரிடாவிற்கு மாற்றினார்.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads