ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்

ஐக்கிய அமெரிக்க நாட்டின் அரசுத் தலைவரும் நாட்டுத் தலைவரும் From Wikipedia, the free encyclopedia

ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்
Remove ads

ஐக்கிய அமெரிக்க நாட்டுக் குடியரசுத் தலைவர் ( President of the United States of America, POTUS)[1] என்பவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுத் தலைவரும் அரசுத் தலைவரும் ஆவார். கூட்டரசின் செயலாக்கப் பிரிவின் தலைவராக உள்ளார். ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் முதற் பெரும் படைத்தலைவராகவும் உள்ளார்.

விரைவான உண்மைகள் அமெரிக்க ஐக்கிய நாடு குடியரசுத் தலைவர், உறுப்பினர் ...

ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் உலகில் மிகுந்த செல்வாக்குடைய நபராகக் கருதப்படுகின்றார்.[2][3][4][5] உலகின் மிகுந்த அணுசக்தி ஆயுதங்களைக் கொண்ட மிகுந்த செலவிடப்படும் படைத்துறையின் முதற் பெரும் தலைவராகவும் பெயரளவில் மற்றும் மெய்யான மொ.உ.உ அடிப்படையில் மிகப்பெரும் பொருளியல் நிலையைக் கொண்ட நாட்டின் அதிபராகவும் தற்காலத்தில் உலகில் உள்ள ஒரே வல்லரசின் தலைவர் என்பதாலும் இவ்வாறு கருதப்படுகின்றார். ஐக்கிய அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் குடியரசுத் தலைவரின் அலுவலகத்திற்கு வன்மையாகவும் மென்மையாகவும் மிகுந்த செல்வாக்கு உள்ளது.

ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாம் சட்டவிதியின்படி ஐக்கிய அமெரிக்க நாட்டின் செயலாக்க அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கூட்டரசு சட்டத்தை செயற்படுத்தவும் கூட்டரசு அதிகாரிகள், பேராளர்கள், கட்டுப்பாட்டு ஆணையங்கள் மற்றும் நீதிமன்றங்களின் அதிகாரிகள் ஆகியோரை நியமிக்கவும் மேலவையின் பரிந்துரையின்படியும் ஒப்புமையுடனும் வெளிநாடுகளுடன் இறுதி உடன்பாடுகளை மேற்கொள்ளவும் அதிகாரமுள்ளது. தவிரவும் தண்டனைகளுக்கு மன்னிப்பு வழங்கிடவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் சட்டமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டவும் தள்ளி வைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.[6] தமது கட்சி சார்பில் சட்டமன்ற அலுவலை முடிவு செய்யும் பொறுப்பும் குடியரசுத் தலைவருக்கு உண்டு. ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளை வழிநடத்தும் பொறுப்பும் இவருக்குள்ளது.[7] ஐக்கிய அமெரிக்கா நிறுவப்பட்டதிலிருந்து குடியரசுத் தலைவரின் அதிகாரங்களும் கூட்டரசின் பங்காற்றலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது.[8]

குடியரசுத் தலைவர் நான்காண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் வாக்காளர் குழு மூலமாக மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்; தேசிய அளவில் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இரு கூட்டரசு பதவிகளில் இதுவொன்று, மற்றது ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கானதாகும்.[9] 1951இல் இயற்றப்பட்ட ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் 22ஆவது சட்டத்திருத்தத்தின்படி மூன்றாம் முறை தொடர்ந்து முழுமைக்கால குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் முன்னதாக குடியரசுத் தலைவராகவோ, மற்றொருவர் பதவிக் காலத்தில் இரண்டாண்டுகளுக்கு மேலாக குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்தாலோ ஒருமுறைக்கு மேலாக போட்டியிடுவதை தடை செய்கின்றது. இதுவரை 58 முழு நான்காண்டுப் பதவிக் காலங்களில் 44 நபர்கள் (கிளீவ்லாண்ட் தொடர்ச்சியாகவின்றி இருமுறை தனித்தனியாக இருந்ததை கணக்கிலெடுத்து) 45 பதவிகளில் இருந்துள்ளனர்.[10] சனவரி 20, 2021இல் ஜோ பைடன் 46வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்;இவரே தற்போதைய குடியரசுத் தலைவராக விளங்குகின்றார்.

Remove ads

தகுதிகள்

அரசியலமைப்பின் இரண்டாவது சட்டவிதியின் முதல் பிரிவு, ஐந்தாம் உட்கூறு இப்பதவிக்கானத் தகுதிகளை விவரிக்கின்றது. குடியரசுத் தலைவர்:

  • ஐக்கிய அமெரிக்காவின் இயல் குடிமகனாக இருத்தல் வேண்டும்;[note 1]
  • முப்பத்தைந்து அகவையினராக இருத்தல் வேண்டும்.42 அகவையில் தியொடோர் ரோசவெல்ட் மிகுந்த இளையவராகவும் 78 அகவையில் ஜோ பைடன் மிகுந்த வயதினராகவும் பதவி ஏற்றனர்.
  • ஐக்கிய அமெரிக்காவில் குறைந்தது பதினான்காண்டுகள் நிரந்தரமாக வசித்தவராக இருத்தல் வேண்டும்.
Remove ads

ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்கள்

தற்போது வாழ்ந்துவரும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள்

Remove ads

குறிப்புகள்

  1. அரசியலமைப்பு ஏற்கப்பட்ட காலத்தில் அகவை மற்றும் வசிப்பிடம் குறித்த தகுதிகளை பெற்றிருந்த, வெளிநாட்டில் பிறந்த அமெரிக்கக் குடிமகன்கள் தகுதி பெற்றவராக விலக்களிக்கப்பட்டனர்; இருப்பினும் இந்த விதிவிலக்கு தற்போது வழக்கொழிந்து போனது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads