ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் (ICC Champions Trophy) என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அல்லது ஐசிசியால் நடத்தப்படும் ஒருநாள் பன்னாட்டுத் (ஒ.நா.ப) துடுப்பாட்டப் போட்டியாகும். தேர்வுப் போட்டிகளில் விளையாடாத நாடுகளில் விளையாட்டின் வளர்ச்சிக்காக நிதி திரட்டும் ஒரு குறுகிய துடுப்பாட்டப் போட்டியாக நடத்தும் வகையில், ஐசிசி நிறுவனம் வாகையாளர் வெற்றிக்கிண்ண யோசனையை முன்வைத்து, 1998-இல் இத்தொடர் தொடங்கப்பட்டது.[3] துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போன்ற மற்றொரு பெரிய துடுப்பாட்ட நிகழ்வின் அதே ஒருநாள் வடிவமைப்பைக் கொண்ட ஐ.சி.சி நிகழ்வுகளில் ஒன்றாக இது உள்ளது.

விரைவான உண்மைகள் நிர்வாகி(கள்), வடிவம் ...
Remove ads

வரலாறு

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வாகையாளர்கள் ...

இத்தொடர் ஐசிசி வெளியேற்றத் தொடர் (ICC KnockOut Tournament) என்ற பெயரில் 1998 இல் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முறை விளையாடப்பட்டு வருகிறது. இவ்விருதின் பெயர் 2002 இல் ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் என மாற்றப்பட்டது.[4]

தொடக்கத்தில் ஐசிசி-யின் முழு உறுப்பு நாடுகள் மட்டும் கலந்து கொண்ட இத்தொடரில், 2000 முதல் 2004 வரை இணை-உறுப்பு நாடுகளும் பங்கேற்றன. 2009 முதல், இத்தொடரில் தர-வரிசையில் உயர்நிலையில் உள்ள எட்டு நாடுகள் மட்டும் பங்கேற்றன.

Remove ads

வடிவம்

2009 முதல், மொத்தம் எட்டு அணிகள் நான்கு அணிஅக்ள் கொண்ட இரண்டு குழுக்களில் சுழல்-முறை வடிவத்தில் விளையாடின, ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் அரையிறுதியில் விளையாடின. ஒரு போட்டியில் தோல்வியடைவது என்பது போட்டியிலிருந்து வெளியேறுவதாகும். போட்டியின் தற்போதைய வடிவத்தில் மொத்தம் 15 போட்டிகள் விளையாடப்படுகின்றன, போட்டிகள் சுமார் இரண்டரை வாரங்கள் நீடிக்கும்.[5]

தகுதி

2021 முதல், அண்மைய உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத் தொடரில் விளையாடுகின்றன.

முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, நடத்திய நாடு(கள்) ...
Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads