2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் (2025 ICC Champions Trophy) என்பது ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத்தின் ஒன்பதாவது பதிப்பாகும். இத்தொடரைப் பாக்கித்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் 2025 பெப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடத்தின. 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணணப் போட்டிகளில் பங்கேற்று முதல் எட்டு இடங்களைப் பெற்ற நாடுகள் இத்தொடரில் பங்கேற்றன.

விரைவான உண்மைகள் நாட்கள், நிர்வாகி(கள்) ...

முந்தைய 2017 வெற்றிக்கிண்ணத் தொடரில் வெற்றி பெற்ற பாக்கித்தான் அணி நடப்பு வாகையாளராக இத்தொடரில் விளையாடி,[1][2] குழுநிலை ஆட்டத்தில் தொடரில் இருந்து வெளியேறியது. இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தைத் தோற்கடித்து மூன்றாவது தடவையாக வாகையாளரானது.

Remove ads

பின்னணி

ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத்திற்கான தொடர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டத் தொடராகும். 1998 இல் தொடங்கப்பட்ட இத்தொடர் இரண்டாண்டுகளுக்கு ஒரு தடவை வெளியேற்றநிலை வெற்றிக்கிண்ணம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்தது. 2002 இல் இதன் பெயர் ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் என மாற்றப்பட்டது, 2009 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படுகின்றது. 2017 போட்டிக்குப் பிறகு வாகையாளர் வெற்றிக்கிண்ணத் தொடர் நடத்தப்பட மாட்டாது என ஐசிசி 2016 இல் அறிவித்தது. பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் மூன்று வடிவங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு போட்டியை நடத்த ஐசிசி இலக்கு வைத்தது.[3] ஆனாலும், நவம்பர் 2021 இல், இத்தொடர் போட்டி 2025 இல் நடைபெறும் என்று அறிவித்தது.[4]

Remove ads

நடத்தும் நாடு தெரிவு

2021 நவம்பர் 16 அன்று, 2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத் தொடரை பாக்கித்தான் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.[4] 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி மீதான தாக்குதலுக்குப் பிறகு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு,[5] பாக்கித்தானில் நடத்தப்படும் முதல் உலகளாவிய போட்டி இதுவாகும்.[6] பாக்கித்தான் கடைசியாக 1996 உலகக்கிண்ணப் போட்டிகளை இந்தியாவுடனும் இலங்கையுடனும் இணைந்து நடத்தியது.[7] இந்தியா பாக்கித்தானில் விளையாட மறுத்ததால் ஐக்கிய அரபு அமீரகம் இணை நடத்துநராக அறிவிக்கப்பட்டது. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டுமே அமீரகத்தில் நடைபெற்றன.[8][9]

Remove ads

வடிவம்

தகுதி பெற்ற எட்டு அணிகள் நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்தக் குழுவில் உள்ள மூன்று அணிகளுடன் - மொத்தம் பன்னிரண்டு போட்டிகளாக - குழுநிலையில் விளையாடின, மேலும் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் ஒற்றை வெளியேற்ற நிலைக்கு முன்னேறின. வெளியேற்ற நிலையில் 2 அரையிறுதிப் போட்டிகளும் ஒரு இறுதிப் போட்டியும் விளையாடப்பட்டன. மொத்தம் 15 போட்டிகள் 19 நாட்களில் நடைபெற்றன.[8]

தகுதி

புரவலர்களாக, பாக்கித்தான் தானாகவே போட்டிக்குத் தகுதி பெற்றது. இத்தொடருக்கு முந்தைய 2023 உலகக்கிண்ணத்தில் ஏனைய ஏழு உயர் தர-வரிசை அணிகளும் பாக்கித்தானுடன் இணைந்தன.[10][11]

மேலதிகத் தகவல்கள் தகுதி, நாள் ...
Remove ads

குழு A

மேலதிகத் தகவல்கள் நிலை, அணி ...
மூலம்: இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ[15]
வகைப்பாட்டிற்கான விதிகள்: 1) புள்ளிகள்; 2) வெற்றிகள்; 3) நிகர ஓட்ட விகிதம்; 4) சமநிலையில் உள்ள அணிகளுக்கு இடையிலான ஆட்டங்களின் முடிவுகள்; 5) தொடக்கக் குழு நிலைகள்[16]
(H) நடத்தும் நாடு

போட்டிகள்

19 பெப்ரவரி 2025
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
320/5 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
260 (47.2 நிறைவுகள்)
டொம் லேத்தம் 118* (104)
நசீம் சா 2/63 (10 நிறைவுகள்)
குசுதில் சா 69 (49)
உவில் ஓ'ரோர்க் 3/47 (9 நிறைவுகள்)
நியூசிலாந்து 60 ஓட்டங்களால் வெற்றி
தேசிய விளையாட்டரங்கு, கராச்சி
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), சரஃபுதுல்லா (வங்)
ஆட்ட நாயகன்: டொம் லேத்தம் (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

20 பெப்ரவரி 2025
13:00 (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
228 (49.4 நிறைவுகள்)
 இந்தியா
231/4 (46.3 நிறைவுகள்)
சுப்மன் கில் 101* (129)
ரிசாத் ஒசைன் 2/38 (10 நிறைவுகள்)
இந்தியா 6 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்சுடொக் (தெ.ஆ), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: சுப்மன் கில் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ரவீந்திர ஜடேஜா (இந்) தனது 200-ஆவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[17]
  • முகம்மது சமி (இந்) தனது 200-ஆவது பன்னாட்டு ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார். ஒருநாள் போட்டிகளில் வேகமாக 200 இலக்குகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.[18]
  • ரோகித் சர்மா (இந்) தனது 11,000 ஒருநாள் ஓட்டங்களைக்ப் பெற்றார்.[19]

23 பெப்ரவரி 2025
13:00 (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
241 (49.4 நிறைவுகள்)
 இந்தியா
244/4 (42.3 நிறைவுகள்)
விராட் கோலி 100* (111)
சகீன் அஃப்ரிடி 2/74 (8 நிறைவுகள்)
இந்தியா 6 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணய்ச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஹர்திக் பாண்டியா (இந்) தனது 200-ஆவது பன்னாட்டு இலக்கைக் கைப்பற்றினார்.[20]
  • குல்தீப் யாதவ் (இந்) தனது 300-ஆவது பன்னாட்டு இலக்கைக் கைப்பற்றினார்.[21]

24 பெப்ரவரி 2025
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
236/9 (50 நிறைவுகள்)
 நியூசிலாந்து
240/5 (46.1 நிறைவுகள்)
நஸ்முல் உசைன் சாந்தோ 77 (110)
மைக்கேல் பிரேசுவெல் 4/26 (10 நிறைவுகள்)
நியூசிலாந்து 5 இலக்குகளால் வெற்றி
இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கம், இராவல்பிண்டி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: மைக்கேல் பிரேசுவெல் (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • கிளென் பிலிப்சு (நியூ), இரச்சின் இரவீந்திரா (நியூ) தமது 1,000 ஒருநாள் ஓட்டங்களைக் கடந்தனர்.[22][23]
  • இவ்வாட்ட முடிவை அடுத்து, இந்தியாவும் நியூசிலாந்தும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.[24]

27 பெப்ரவரி 2025
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
  • நாணயச்சுழற்சி இடம்பெறவில்லை.
  • மழை காரணமாகப் போட்டி நடைபெறவில்லை.

2 மார்ச் 2025
13:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
249/9 (50 நிறைவுகள்)
 நியூசிலாந்து
205 (45.3 நிறைவுகள்)
சிரேயாஸ் ஐயர் 79 (98)
மாட் என்றி 5/42 (8 நிறைவுகள்)
Remove ads

குழு B

மேலதிகத் தகவல்கள் நிலை, அணி ...
மூலம்: இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ[15]
வகைப்பாட்டிற்கான விதிகள்: 1) புள்ளிகள்; 2) வெற்றிகள்; 3) நிகர ஓட்ட விகிதம்; 4) சமநிலையில் உள்ள அணிகளுக்கு இடையிலான ஆட்டங்களின் முடிவுகள்; 5) தொடக்கக் குழு நிலைகள்[16]

போட்டிகள்

21 பெப்ரவரி 2025
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
315/6 (50 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
208 (43.3 நிறைவுகள்)
ராயன் ரிக்கெல்டன் 103 (106)
முகம்மது நபி 2/51 (10 நிறைவுகள்)
ரஹ்மத் ஷா 90 (92)
காகிசோ ரபாடா 3/36 (8.3 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 107 ஓட்டங்களால் வெற்றி
தேசிய விளையாட்டரங்கு, கராச்சி
நடுவர்கள்: சரஃபுதுல்லா (வங்), அலெக்ஸ் வார்ப் (இங்)
ஆட்ட நாயகன்: ராயன் ரிக்கெல்டன் (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இது ஆப்கானித்தான் விளயாடும் முதலாவது வாகையாளர் வெற்றிக்கிண்ணப் போட்டியாகும்.
  • ராயன் ரிக்கெல்டன் (தெஆ) தனது முதலாவது ஒருநாள் சதத்தைப் பெற்றார்.[27]

22 பெப்ரவரி 2025
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
351/8 (50 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
356/5 (47.3 நிறைவுகள்)
பென் டக்கெட் 165 (143)
பென் துவார்சியசு 3/66 (10 நிறைவுகள்)
யோசு இங்கிலிசு 120* (86)
அடில் ரசீத் 1/47 (10 நிறைவுகள்)
ஆத்திரேலியா 5 இலக்குகளால் வெற்றி
கடாபி அரங்கம், இலாகூர்
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: யோசு இங்கிலிசு (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஆடம் சம்பா (ஆசி) தனது 300-ஆவது பன்னாட்டு இலக்கைக் கைப்பற்றினார்.[28]
  • யோசு இங்கிலிசு (ஆசி) தனது முதலாவது ஒருநாள் சதத்தைப் பெற்றார்.[29]

25 பெப்ரவரி 2025
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
  • நாணயச்சுழற்சி இடம்பெறவில்லை.
  • மழை காரணமாகப் போட்டி நடைபெறவில்லை

26 பெப்ரவரி 2025
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
325/7 (50 நிறைவுகள்)
 இங்கிலாந்து
317 (49.5 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 8 ஓட்டங்களால் வெற்றி
கடாபி அரங்கம், இலாகூர்
நடுவர்கள்: ரொட் டக்கர் (ஆசி), சோயல் வில்சன் (மே.இ)
ஆட்ட நாயகன்: இப்ராகிம் சத்ரன் (ஆப்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஜோப்ரா ஆர்ச்சர் (இங்) தனது 50-ஆவது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[30]
  • இப்ராகிம் சத்ரன் (ஆப்) தனது 1,500 ஒருநாள் ஓட்டங்களக் கடந்தார்.[31]
  • ஆப்கானித்தான் தமது அதிகூடிய ஐசிசி பன்னாட்டு ஒருநாள் ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தது.[32]
  • அசுமத்துல்லா ஒமர்சாய் (ஆப்) தனது முதலாவது ஒருநாள் ஐவீழ்த்தலைப் பெற்றார்.[33]
  • இவ்வாட்ட முடிவை அடுத்து இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.[34]

28 பெப்ரவரி 2025
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
273 (50 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
109/1 (12.5 நிறைவுகள்)
செதிக்குல்லா அட்டல் 85 (95)
பென் துவார்சியசு 3/47 (9 நிறைவுகள்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
  • அசுமத்துல்லா ஒமர்சாய் (ஆப்) பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 1,000 ஓட்டங்களைக் கடந்தார்.[35]
  • இவ்வட்ட முடிவை அடுத்து ஆத்திரேலியா அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.[36]

1 மார்ச் 2025
14:00 (ப/இ)
ஆட்ட விபரம்
இங்கிலாந்து 
179 (38.2 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
181/3 (29.1 நிறைவுகள்)
ஜோ ரூட் 37 (44)
வியான் முல்டர் 3/25 (7.2 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 7 இலக்குகளால் வெற்றி
தேசிய விளயாட்டரங்கு, கராச்சி
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: மார்கோ ஜான்சன் (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • லுங்கி எங்கிடி (தெஆ) தனது 100-ஆவது பன்னாட்டு ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[37]
  • இவ்வாட முடிவை அடுத்து தென்னாப்பிரிக்கா அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது, ஆப்கானித்தான் தொடரில் இருந்து வெளியேறியது.[38]
Remove ads

ஒற்றை-வெளியேற்ற நிலை

  அரை இறுதிகள் இறுதி
                 
A1   இந்தியா 267/6 (48.1 நிறைவுகள்)  
B2   ஆத்திரேலியா 264 (49.3 நிறைவுகள்)  
    SF1W   இந்தியா 254/6 (49 நிறைவுகள்)
  SF2W   நியூசிலாந்து 251/7 (50 நிறைவுகள்)
B1   தென்னாப்பிரிக்கா 312/9 (50 நிறைவுகள்)
A2   நியூசிலாந்து 362/6 (50 நிறைவுகள்)  

அரை இறுதிகள்

4 மார்ச் 2025
13:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
264 (49.3 நிறைவுகள்)
 இந்தியா
267/6 (48.1 நிறைவுகள்)
விராட் கோலி 84 (98)
நேதன் எல்லிஸ் 2/49 (10 நிறைவுகள்)
இந்தியா 4 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • வாகையாளர் வெற்றிக்கிண்ணப் போட்டிகளில் தொடர்ந்து மூன்றாவது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.[39]

5 மார்ச் 2025
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
362/6 (50 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
312/9 (50 நிறைவுகள்)
நியூசிலாந்து 50 ஓட்டங்களால் வெற்றி
கடாபி அரங்கம், இலாகூர்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: இரச்சின் இரவீந்திரா (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இறுதி

9 மார்ச் 2025
13:00 (ப/இ)
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
251/7 (50 நிறைவுகள்)
 இந்தியா
254/6 (49 நிறைவுகள்)
ரோகித் சர்மா 76 (83)
மைக்கேல் பிரேசுவெல் 2/28 (10 நிறைவுகள்)
இந்தியா 4 இலக்குகளால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ரோகித் சர்மா (இந்) அணித் தலைவராக 2,500 ஒருநாள் ஓட்டங்களை எடுத்தார்.[40]
  • இந்தியா 2002, 2013 இற்குப் பின்னர் மூன்றாவது தடவையாக ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத்தைப் பெற்று சாதனை புரிந்தது.[41]
Remove ads

தரவுகள்

அதிக ஓட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் ஓட்டங்கள், வீரர் ...

அதிக இலக்குகள்

மேலதிகத் தகவல்கள் இலக்குகள், வீரர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads