ஒடெசா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒடேசா மாகாணம் (Odessa Oblast), உக்ரைன் நாட்டின் தென்மேற்கில் கருங்கடலை ஒட்டி அமைந்த மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் ஒடெசா நகரம் ஆகும். இம்மாகாணத்தின் கருங்கடல் கடற்கரையில் 8 துறைமுகங்கள் உள்ளது. இம்மாகாணத்தில் 80,000 ha (200,000 ஏக்கர்கள்) பரப்பளவில் ஒயின் தயாரிக்கப்படும் திராட்ச்சைப் பழத்தோட்டங்களும், ஐந்து பெரிய ஏரிகளும் உள்ள்து.
Remove ads
அமைவிடம்
33,314 சதுர கிலோமீட்டர்கள் (12,863 sq mi) பரப்பளவு கொண்ட புல்வெளிகள் கொண்ட ஒடேசா மாகாணத்தின் தெற்கில் டான்யூப் ஆறு பாய்கிறது. தினிஸ்டர் ஆற்றின் முகத்துவாரம் ஒடேசா மாகாணத்தின் தெற்கில், கடங்கடலை ஒட்டியுள்ளது.
இதன் கிழக்கில் மைக்கோலைவ் மாநிலம், தெற்கில் கருங்கடல் மற்றும் மேற்கில் மால்டோவா நாடும் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2021-ஆம் ஆண்டில் ஒடேசா மாகாணத்தின் மக்கள் தொகை 23,68,107 ஆகும். அதில் 43% மக்கள் ஒடெசா போன்ற நகரங்களில் வாழ்கின்றனர் இம்மாகாண்த்தின் பெரும்பான்மையான மக்கள் உக்ரைனிய மக்கள் ஆவர். மேலும் பல்கேரியர்கள் 6.1% மற்றும் ரோமானியர்கள் 5.0% வாழ்கின்றனர்.[3] ஒடெசா நகரத்தில் யூதர்கள் மற்றும் கிரேக்கர்கள் சிறிதளவு வாழ்கின்றனர். இம்மாகாணத்தில் கிழக்கு மரபுவழி திருச்சபையினர் 84%, சமயமற்றோர் 8%, கிறித்தவர் அல்லாதோர் 6% வாழ்கின்றனர்.
Remove ads
மாகாண நிர்வாகம்
ஒடேசா மாகாணம் 26 மாவட்டங்களும், 7 நகராட்சிகளும், 1,138 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இதனையும் காண்க
- ஒடெசா நகரம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads