ஓவியர் குடி

ஓவியர்-குடி மக்கள் வாழ்ந்த நாடு ஓய்மானாடு எனப்பட்டது. From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஓவியர் என்போர் சங்க காலத்தில் இப்போதுள்ள திண்டிவனம் பகுதியில் வாழ்ந்த குடிமக்கள். இந்த ஓவியர்-குடி மக்கள் வாழ்ந்த நாடு ஓய்மானாடு எனப்பட்டது. ஓய்மான் நல்லியக்கோடன், ஓய்மான் வில்லியாதன் ஆகிய மன்னர்கள் இந்த நாட்டுப்பகுதியை ஆண்ட ஓவியர்-குடி அரசர்கள்.[1]

'ஓ' என்னும் சொல் மதகடைக்கும் பலகையைக் குறிக்கும்.[2] ஓய்மானாட்டில் ஏரிகள் மிகுதி. மதகடைக்கும் ஓக்கள் மிகுதியாக இருந்த நாடு ஓய்மானாடு எனப்பட்டது. இந்த நாட்டைப் பற்றிக் கூறும் சிறுபாணாற்றுப்படை அடிகள் இதனை 'பொருபுனல் தரூஉம்' என்று குறிப்பிடுவது 'ஓ' < ஓய் என மருவியது என்பதற்கு வலுவூட்டுகிறது.

ஓவியர்குடி மக்கள் வாட்போரில் வல்லவர்கள்.

இவர்களின் முன்னோன் ஒருவன் இலங்கைத் தீவிலிருந்தபோது கரு தரித்து தாய் இங்கு வந்தபின் பிறந்தான் என்று பாடல் தெரிவிக்கிறது. இவன் தலைதூக்கி நிறுவிய ஊர் ‘நன்மாவிலங்கை’. இது இவன் கருவுற்ற ‘தொன்மாவிலங்கை’ நினைவாகச் சூட்டப்பட்டது.

வில்லியாதன் ஆண்ட ஊர் இப்போது ‘வெள்ளிமேடுபேட்டை’ என்னும் பெயருடன் விளங்குகிறது.

  • பல்லவர் வரலாற்றில் வரும் பீலிவளை கதையை இதனோடு ஒப்பிட்டு எண்ணவேண்டியுள்ளது
  • ஓவர் ஓவண்ணர் விஸ்வகர்மா
  • இவர் மேலும் பரிணாம வளர்ச்சியின்
  • கப்பல் பெரிய கோயில்
  • . [3]
Remove ads

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads