கங்காரிதாய் இராச்சியம்
கிழக்கு பரத கண்டம் மக்களுக்கு பண்டைய கிரேக்க-ரோமன் எழுத்தாளர்கள் பயன்படுத்திய சொல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கங்காரிதாய் இராச்சியம் (Gangaridai), பண்டைய பரத கண்டத்தின் கிழக்கில், கங்கை ஆற்றின் வடிநிலத்தில் அமைந்தது. கங்காரிதாய் இராச்சியத்தை, பண்டைய கிரேக்க-ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். பண்டைய இந்தியாவின் பதிவுகளில், வங்க நாடு மற்றும் சமதாத இராச்சியம் ஆகியவைகள், கங்காரிதாய் இராச்சியத்தை ஒட்டி அமைந்திருந்தது.

கங்காரிதாய் இராச்சியத்தின் தலைநகரம், தற்கால கோபால்கஞ்ச் என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.[2] வேறு சில அறிஞர்கள் இதன் தலைநகரம் தற்கால மேற்கு வங்காளத்தின் பண்டைய துறைமுக நகரமான சந்திரகேதுகர் எனக் கூறுகின்றனர்.[1]
மெகஸ்தனிஸ் எனும் கிரேக்க ராஜதந்திரி எழுதிய இண்டிகா எனும் வரலாற்றுக் குறிப்பு நூலில், கங்காரிதாய் இராச்சியம் பெரும் தரைப்படையும், தேர்ப்படையும், யானைப்படையும் கொண்டிருந்தன எனக் குறிப்பிட்டுள்ளார். பிந்தைய வரலாற்று அறிஞர்கள், கங்காரிதாய் இராச்சியத்திற்கும், உரோமானிய எகிப்து நாட்டிற்குமிடையே கடல் வழி வணிகம் நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறார்கள்
Remove ads
அமைவிடம்
தாலமியின் (கி பி 90 – 168), குறிப்புகளின் படி, கங்காரிதாய் இராச்சியம், கங்கை ஆற்றின் நீர் ஐந்து முகத்துவாரங்கள் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்குமிடமான தற்கால சிட்டகாங் கடற்கரையை ஒட்டி இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
வேறு வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, கங்காரிதாய் இராச்சியம், தற்கால மேற்கு வங்காளத்தில் கங்கை ஆறு வங்காள விரிகுடாவில் கலக்குமிடத்தில் இருந்ததாக கூறுகின்றனர்.[1]
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads