கங்கேயதேவன்
11 ஆம் நூற்றாண்டின் மத்திய இந்தியாவை ஆண்ட காலச்சூரி மன்னன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கங்கேயதேவன் (Gangeyadeva) ஆட்சிக்காலம்1015-1041 பொ.ச.) மத்திய இந்தியாவில் திரிபுரியை ஆண்ட திரிபுரி காலச்சூரி வம்சத்தின் ஆட்சியாளனாவான். இவனது இராச்சியம் சேதி நாடு அல்லது தஹாலா பகுதியை (இன்றைய மத்தியப் பிரதேசம்) மையமாகக் கொண்டிருந்தது.
தனது ஆட்சியின் ஆரம்ப காலத்தில், இவன் ஒரு அடிமையாக ஆட்சி செய்ததாக தெரிகிறது. ஒருவேளை பரமார மன்னன் போஜனின் ஆட்சியாக இருக்கலாம். இவன் போஜனுடன் கூட்டணி வைத்து மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிராகப் போரிட்டான். ஆனால் சில ஆரம்ப வெற்றிகளுக்குப் பிறகு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1030களில், இவன் பல அண்டை இராச்சியங்களைத் தாக்கி, இறையாண்மை கொண்ட ஆட்சியாளனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். இவன் வாரணாசியை காலச்சூரி ஆதிக்கத்துடன் இணைத்ததாகத் தெரிகிறது.
Remove ads
நிலப்பிரபுத்துவவாதியாக
கங்கேயதேவன் தனது தந்தை இரண்டாம் கோகல்லனுக்குப் பிறகு பொ.ச. 1015இல் திரிபுரியின் சிம்மாசனத்தில் அமர்ந்தான்.[1] இவனது பொ.ச.1019 தேதியிட்ட முகுந்த்பூர் கல்வெட்டில், இவன் மகர்கா-மகா-மகட்டகா, மகாராசா போன்ற பட்டங்களை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.[1] இந்த பட்டம் "மாகாராசாதிராசா" என்ற ஏகாதிபத்திய பட்டத்தைப் போல உயர்ந்ததல்ல. இது கங்கேயதேவன் மற்றொரு மன்னனுக்கு ஒரு நிலப்பிரபுவாக இருந்ததைக் குறிக்கிறது. [2]
மேலைச் சாளுக்கியர்கள்
கங்கேயதேவன் போஜனின் அடிமையாக இருக்கலாம். கல்யாணியின் மேலைச் சாளுக்கியர்களுக்கு எதிராக போரிட்டான். போஜன், கங்கேயதேவன், இராசேந்திர சோழன் ஆகிய மூவரின் கூட்டணியுடன் தன்னாட்டைக்காக்க சாளுக்கிய மன்னர் இரண்டாம் ஜெயசிம்மன் பல முனைகளில் போராட வேண்டி இருந்தது.[3][4] [5]
குந்தள மன்னன் (அதாவது ஜெயசிம்மன்) கங்கேயதேவனிடமிருந்து தப்பி ஓடும்போது தனது ஈட்டியை கைவிட்டதாக காலச்சூரி கல்வெட்டுகள் பெருமையாக கூறுகின்றன. சாளுக்கிய கல்வெட்டுகளும் தங்கள் எதிரிகளுக்கு எதிராக வெற்றி பெற்வனும் இவனரது கூட்டாளிகளும் ஆரம்பத்தில் சில இராணுவ வெற்றிகளைப் பெற்றனர். ஆனால் இறுதியில் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[1]
Remove ads
ஒரு இறையாண்மை நாடாக
தனது ஆட்சியின் பிற்பகுதியில், இவன் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் இராணுவ வெற்றிகளைப் பெற்றான். கங்கேயதேவன் "பரமபட்டாரக மகாராசாதிராசா பரமேசுவரரன்" என்ற பேரரசுப் பட்டங்களை எடுத்துக்கொண்டதாக இவனது பொ.ச. 1037-38 பியாவான் பாறைக் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. "விக்ரமாதித்தன்" என்ற புகழ்பெற்ற வரலாற்றுப் பட்டத்தையும் இவன் ஏற்றுக்கொண்டான். பாரசீக எழுத்தாளர் அல்-பிருனி இவனை தஹாலா நாட்டின் ஆட்சியாளன் என்று குறிப்பிடுகிறார். மேலும் இவனது தலைநகருக்கு "தியவுரி" (திரிபுரி) என்றும் பெயரிட்டார்.[6]
Remove ads
இறுதி நாட்கள்
கங்கேயதேவன் பியாவனில் ஒரு சிவலிங்கத்தை நிறுவினான். இது இவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவன் என்பதைக் குறிக்கிறது.[7]
கங்கேயதேவன் பிரயாகையில் ( அலகாபாத்) புனித ஆலமரத்தின் கீழ் முக்தி அடைந்ததாகக் காலச்சூரி பதிவுகள் கூறுகின்றன.[8] இவனது நூறு மனைவிகளும் இவனது இறுதிச் சடங்கின்போது உடன்கட்டை ஏறியதாகக் கூறப்படுகிறது.[9] இவனுக்குப் பின் இவனது மகன் இலட்சுமிகர்ணன் (கர்ணன் எனவும் அழைக்கப்படுகிறான்) ஆட்சிக்கு வந்தான்.[6] கர்ணனின் பொ.ச.1042 தேதியிட்ட வாரணாசி கல்வெட்டு, அவனது தந்தையின் முதல் வருடாந்திர சிராத்தச் (இறப்பு ஆண்டு சடங்கு) சந்தர்ப்பத்தில் வெளியிடப்பட்டது. கங்கேயதேவன் 22 சனவரி 1041இல் இறந்தான் என்று கூறுகிறது. [7]
நாணயம்

கங்கேயதேவன் ஒருபுறம் தனது பெயரையும், மறுபுறம் லட்சுமி தேவியின் உருவத்தையும் கொண்ட நாணயங்களை வெளியிட்டான். இந்த வடிவமைப்பு பல வட இந்திய வம்சங்களால் பின்பற்றப்பட்டது.[7]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads