ஒரூஸ்கான் மாகாணம்
ஆப்கானித்தானின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒரூஸ்கான் (Urōzgān (பஷ்தூ: اروزګان; Persian: اروزگان), also spelled as Uruzgan, Oruzgan or Orozgan) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இருப்பினும் இந்த பகுதியானது கலாச்சார ரீதியாக, தெற்கின் காந்தகார் மாகாணத்துடன் இணைந்துள்ளது. மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 3,33,500 ஆகும். மேலும் மாகாண மக்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடி மக்களாவர். தரின்கோட் நகரமானது மாகாணத் தலைநகரமாக செயல்படுகிறது..
2004 ஆம் ஆண்டு இந்த மாகாணத்தின் வடபகுதியைப் பிரித்து, புதிய மாகாணமாக தேக்கண்டி மாகாணமானம் உருவாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில், கிசாப் மாவட்டமானது தேகண்டி மாகாணத்தில் இருந்து மீண்டும் ஒரூஸ்கான் மாகாணத்துடன் இணைக்கப்பட்டு, மாகாணத்தின் ஆறாவது மாவட்டமாக மாறியது.[சான்று தேவை]
Remove ads
நிலவியல்
ஒரூஸ்கான் மாகாணமானது ஆப்கானித்தானின் தெற்கு மாகாணங்களின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்தமாகாணத்தின் தெற்கில் சாபுல் மாகாணம், கந்தகார் மாகாணம் மாகாணங்களும், தென்மேற்கில் ஹெல்மண்டு மாகாணம், வடக்கில் தேக்கண்டி மாகாணம், கிழக்கில் கஜினி மாகாணம் போன்றவை எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த மாகாணமானது 12,640 கி.மீ.² (1,264,000 ஹெக்டேர்) பரப்பளவு கொண்டுள்ளது. மாகாணத்தில் பெரும்பகுதி மலைப்பகுதி அல்லது அரை மலைப்பாங்கான நிலப்பகுதி ஆகும், மீதமுள்ள பகுதி சமவெளியாகும்.[2]
Remove ads
வரலாறு
இப்பகுதி பண்டைய ஆர்க்கோசியாவின் ஒரு பகுதியாக இருந்தது. மீடியாப் பேரரசால் ஆளப்பட்ட இப்பகுதி பின்னர், அகாமனிசியப் பேரரசிடம் வீழ்ந்தது. கி.மு 330இல் அலெச்சாந்தரால் கைபற்றப்பட்டு, அவருக்குப் பின் அவரது தளபதியால் நிறுவப்பட்ட, செலூக்கியப் பேரரசால் ஆளப்பட்டது. இது பின்னர் அசோகரின் தலைமையிலான மௌரியப் பேரரசால் ஆளப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில், அரேபியர்கள் முதலில் படையெடுத்து வந்தபோது, இப்பகுதியானது சுன்பிள்கலாள் ஆளப்பட்டு வந்தது. இது ஒன்பதாம் நூற்றாண்டில் இசுலாமிய சபாரித்து வம்சத்தால் வெற்றி கொள்ளப்பட்டது. இவர்களிடம் இருந்து கஜினிகளாலும், அவர்களுக்குப் பிறகு குராத்களாளும் வெற்றி கொள்ளப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் இப்பகுதி வெற்றி கொள்ளப்பட்டது. பின்னர் இப்பகுதியை இக்கனாட் மரபின், அர்குன் கானாலும், பின்னர் தைமூரிய வம்சம், முகலாயப் பேரரசு, சபாவித்து வம்சம் ஆகியவற்றால் ஆளப்பட்டது.
1709 ஆம் ஆண்டில், சபாவித்துகளை தோற்கடித்து காந்தகாரில் ஹொடாக் வம்சம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. பின்னர், தெற்கு ஆப்கானித்தான் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அக்காலகட்டத்தில் துரானி பஷ்டூன்கள் பெருமளவில் ஹெரட் பகுதியில் குடியேறினர். 1747 ஆம் ஆண்டில், நாதிர் ஷாவின் தளபதியான அகமது ஷா துரானி, ஆப்கானியர்களின் மன்னராக உயர்ந்தார். அதன் பிறகு ஒரூஸ்கான் பிராந்தியம் அவருடைய புதிய துர்ரானி பேரரசின் ஒரு பகுதியாக மாறி, இன்றைய ஆப்கானிஸ்தானின் மாநிலமாக மாறியது.
1980 களில் ஆப்கானிஸ்தானஎ சோவியத் போர் நடந்தபோது, சோவியத் சார்பு படைகளுக்கும் முஜாஹிதீன்களுக்கு இடையிலும் ஒரூஸ்கானில் போர்கள் நடந்தன. முஜாகிதீன் தலைவர்களில் மிக முக்கியமான உள்ளூர் தலைவர் ஜான் முகமது கான் ஆவார். 1994 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஒரூஸ்கான் பகுதி தாலிபான்களால் கைப்பற்றப்பட்டது. 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க தலைமையிலான படைகளால் தாலிபான்கள் கவிழ்க்கப்பட்டனர். இதையடுத்து ஜனாதிபதி ஹமித் கர்சாயின் ஆதரவாளர்கள் ஒரூஸ்கானுக்கு வந்த 2001 அக்டோபரில் இருந்து நவம்பருக்கு இடைநில் ஒரூஸ்கான் மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Remove ads
அரசியல் மற்றும் நிர்வாகம்
மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் முகமது நசீர் கரோடி ஆவார். தரின்கோட் நகரமானது மாகாணத்தின் தலைநகரமாக உள்ளது. மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) கையாள்கிறது. மாகாண காவல்துறைத் தலைவர் வழிநடத்துகிறார் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது.
போக்குவரத்து
2014 மே மாதம் முதல், தரின்கோட் விமானநிலையத்தில் இருந்து கபூலுக்கு நேரடியாக பயணிகள் சேவை வழங்க திட்டமிட்டப்பட்டது.
நலவாழ்வு பராமரிப்பு
இந்த மாகாணத்தில் தூய்மையான குடிநீர் கிடைக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டு 8% என்ற விகிதத்தில் இருந்தது, இது 2011 ஆண்டு 27% என உயர்ந்துள்ளது.[3] திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுக்காடு 2005 ஆண்டில் 6 % என்ற எண்ணிக்கையில் இருந்து 2011 ஆண்டு 14 % என உயர்ந்தது.
கல்வி
மாகாணத்தின் மொத்த கல்வியறிவு விகிதம் (6+ வயதுக்கு மேற்பட்டவர்களில்) 2005 ஆண்டு 5% என்று இருந்தது. 2011 இல் இது 17% என உயர்ந்துள்ளது.
மக்கள்வகைப்பாடு


ஒரூஸ்கான் மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 333,500 ஆகும்.[1] மாகாணத்தில் சுமார் 45,000 குடும்பங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் சராசரியாக ஆறு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஒரூஸ்கானின் மக்கள்தொகையில் பெரும்பகுதியானவர்கள் பாப்புல்சாய், அச்சாக்ஸாய், நர்சாய், பாரக்க்சாய், அலிகோசை. மற்றும் துர்ராணி துணை இனத்தவர் போன்ற பஷ்டூன் பழங்குடி இனத்தவராவர். உள்ளனர்.[4] இரண்டாவது பெரிய இன குழு கசாரா மக்களாவர், இவர்கள் பிரதானமாக தரின்கோட்டில் காணப்படுகிறனர். மேலும் இங்கு குச்சீஸ் (நாடோடிகள்) மக்கள் உள்ளனர். இவர்கள் நாடோடி மக்களாக இருப்பதால் இவர்களின் எண்ணிக்கை நிலையானதல்ல .
கிராமப்புற புனர்வாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய புள்ளியியல் அலுவலகம், தொடர்பு அலுவலகம் 2009 ஆகியவற்றில் மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் உள்ளன.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads