கடல்சார் உயிரியல்

From Wikipedia, the free encyclopedia

கடல்சார் உயிரியல்
Remove ads

கடல் உயிரியல் (Marine biology) என்பது கடல் மற்றும் கடலில் வாழும் உயிரினங்களைப் பற்றிய அறிவியல் துறையாகும். கடல் உயிரிகள் வகைப்பாடு சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Thumb
பூமியின் உயிரினத் தொகுதியில் (பரப்பளவில்) 71 சதவிகிதம் கடலில் வாழ்கிறது, கடல் வாழ்வுக்கான இடம். கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் ஆழம் மற்றும் 360,000 கி.மீ. தொலைவில் உள்ள கடலோரப்பகுதியுடன் கடலில் மூழ்கியுள்ளன.[1][2]

பூமியில் உள்ள உயிரினத் தொகுதியில் பெரும் பகுதி கடலில் வாழ்கின்றன. இந்த மிகப் பெரிய அளவு இன்னும் முழுமையாக அறியப்படாத பல சிற்றினங்களைக் கொண்டதாக உள்ளது. கடலானது ஒரு சிக்கலான முப்பரிமாண உலகம் ஆகும். இது புவியின் மேற்பரப்பில் சுமார் 71% சதவீதமாக உள்ளது.[3] கடல் உயிரினங்களின் வாழ்விடங்கள் மேற்பரப்பு நீரில் இருந்து 10 ஆயிரம் மீட்டர் அல்லது அதற்கு மேலான கடல் ஆழம் வரை பரவி இருக்கின்றன. முக்கியமான வாழ்விடங்கள் பவளப்பாறைகள், கல்ப் கார்டுகள், கடல் புல்வெளிகள் ஆகும். கடல் குன்றுகள், வெப்பக் துவாரங்கள், அலைக் குளங்கள், சேற்று மணல், பாறைகள் நிறைந்த அடிப்பரப்பு, திறந்த கடல் மண்டலம் (திடப்பொருட்கள் காணப்படாத பார்வை எல்லை முழுவதும் நீரால் சூழப்பட்ட பகுதி) ஆகியவற்றால் சூழப்பட்டதாகும்.

இதில் நுண்ணோக்கி மூலம் காணக்கூடிய   பைட்டோபிளாங்டன் மற்றும் மிகப்பெரிய பாலூட்டிகள் நீலத் திமிங்கிலங்கள் (நீளம் 25- 32 மீட்டர் அல்லது 82 -105 அடிகள்). கடல் சூழலியல் என்பது கடல் உயிரினங்கள் எவ்வாறு கடல் சுற்றுச்சூழலுடன் தொடர்பு கொள்கின்றன என்பதை பற்றி அறிவதாகும்.

கடல் உயிரினங்கள் உணவு பொருள், மருத்துவம், பொன்றவற்றிற்கான மூலப்பொருட்களாக பயன்படும் பல வகையான வளங்களைக் கொண்டது. பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத்துறைக்கும் பயன்படுகிறது. நம் பூமியின் இயல்பை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. ஆக்சிஜன் சுழற்சியில் கணிசமான பங்களிப்பை செய்கின்றன.[4] கடற்கரைகள் சில வகை கடல் உயிரினங்களாலேயே உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.[5]

பல இனங்கள் மனிதர்களுக்கு பொருளாதாரரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. கடல் மற்றும் கடல் சார்ந்த முக்கியமான சுழற்சிகள் பற்றிய ஆய்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இது புவியின் சுவாசம் போன்றது. பெருங்கடலுக்கு கடலுக்கு அடியில் இருக்கும் பெரிய பகுதிகள் இன்னும் அறியப்படாதவையாக உள்ளன.

Remove ads

கடல் சார் வாழ்க்கை

Thumb
நுண்ணுயிர் கோப்போட்

தாவரங்கள் மற்றும் பாசிகள்

மைக்ரோஸ்கோபிக் ஆல்கா மற்றும் தாவரங்கள் உயிரினங்களுக்கு தேவையான வாழ்விடங்களை வழங்குகின்றன. சில நேரங்களில் பெரிய மீன்களின் லார்வாக்களுக்கு மறைவிடங்களாக உள்ளன.

முதுகெலும்பில்லாதவை

Thumb
முட்கள் கிரீடம் நட்சத்திர மீன்கள்

ஜெல்லி மீன் மற்றும் கடல் சாமந்தி ,நிடெரியா, கடல் புழுக்கள், நெமர்டியா , வளையப்புழுக்கள் , சிபுன்குலா ,மெல்லுடலிகள், நட்சத்திர மீன் உள்ளிட்ட முட்தோலி ; மற்றும் கடல் குடுவை போன்ற முதுகெலும்பில்லாத ஒரு மில்லியன் இனங்கள் உள்ளன.

பூஞ்சை

Thumb
பூஞ்சை நோய் கொண்ட முதிர்ந்த சால்மன்

1500 க்கும் மேற்பட்ட பூஞ்சை இனங்கள் கடல் சூழல்களில் இருந்து அறியப்படுகின்றன.[6] இதனை ஒட்டுண்ணிகள். கடல் பாசி, விலங்குகள், பவளப்பாறைகள், புரோட்டோசோன் நீர்க்கட்டிகள், கடல் புற்கள், மரம் மற்றும் கடல்நுரை போன்றவற்றிலும் இவைகளைக் காணலாம் .[7][8] அசாதாரண இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் கடல் பூஞ்சைகளால் தயாரிக்கப்படுகின்றன.[9]

முள்ளந்தண்டுள்ளவை

மீன்

Thumb
கடல்மீது தங்கமீன் நீச்சல்

2016 ஆம் ஆண்டில் மொத்தம் 33,400 மீன் வகைகள் இருந்ததாக அறியபட்டது [10] சுமார் 60% மீன் வகைகள் உப்பு நீரில் வாழ்கிறன.[11]

Thumb
ஊர்வன பச்சை ஆமை
Thumb
பறவைகள். ஒரு ஆல்பாட்ராஸ் கடலைக் கடந்து செல்கிறது. கடலில் உணவு தேடுகிறது .
Thumb
பாலூட்டிகள். கடல் கீரி

பவள திட்டுகள்

Thumb
பவள திட்டுகள் சிக்கலான கடல் சூழல் மண்டலங்களை மிகப்பெரிய உயிரியற் பல்வைமையால் உருவாக்குகின்றன .

உலகிலேயே பளப்பாறைகள் தான் மிக அடர்ந்த, மிகவும் வேறுபட்ட வாழ்விடங்கள் கொண்டதாகும். பவளப்பாறைகள் குளிர்ந்த நீரிலும் உள்ளன. பவளப்பாறைகள், பவளம் மற்றும் பிற கால்சியத்தால் ஆன விலங்குகளால் கட்டமைக்கப்படுகின்றன.

கடல் உயிரியலில் பவள திட்டுகள் மற்றும் எல் நினோ வானிலை நிகழ்வுகளின் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. 1998 ஆம் ஆண்டில், பவள திட்டுகள் மிகவும் கடுமையான அழிவை சந்தித்தன. கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்ந்ததால் இந்த அழிவு ஏற்பட்டுள்ளது.[12][13] சில திட்டுகள் மீட்கப்பட்டுள்ளன, உலகின் 50% -70% பவள திட்டுகள்புவி வெப்பமயமாதலால் ஆபத்தில் உள்ளது. இந்த நிலை மேலும் மோசமடையக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.[14][15][16][17]

Thumb
திறந்த கடல் கண்டத் திட்டுகளுக்கு அப்பாற்பட்ட ஆழ்கடல் பகுதி
Thumb
ஆழமான கடல் chimaera. perturbations முறை மூலம் விலங்குகளை கண்டறியும் திறன் கொண்ட சிறிய துளைகள் கொண்டிருக்கும்.
Remove ads

மேற்கோள்கள்

மேலும் குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads