கணபதி சக்கரவர்த்தி
இந்திய மாயவித்தையாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கணபதி சக்கரவர்த்தி (Ganapati Chakraborty; 1858 - 20 நவம்பர் 1939) கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு மாய வித்தையாளர். வங்காளத்தில் நவீன மாயவித்தையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். பி. சி. சர்க்கார் மற்றும் கே. லால் ஆகியோரின் வழிகாட்டியாக இருந்தார்.
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
சக்ரவர்த்தி ஹூக்லி மாவட்டத்தின் ஸ்ரீராம்பூர் அருகே உள்ள சத்ரா கிராமத்தில் வங்காள பிராமண ஜமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். [2] சில சொத்து மோதல்கள் காரணமாக, இவரது தந்தை மகேந்திரநாத் சக்ரவர்த்தி தனது மகன் பிறப்பதற்கு முன்பே ஹவுரா மாவட்டத்திலுள்ள சால்கியாவுக்கு குடிபெயர்ந்தார். 1858 இல், கணபதி சால்கியாவில் பிறந்தார். சிறுவயதில் படிப்பில் சிறிதும் ஆர்வம் காட்டாமல் பாடுவதிலும் இசையிலும் ஆர்வம் காட்டினார்.
17 அல்லது 18 வயதில், மாயவித்தை மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட குணப்படுத்தும் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்காக இந்து துறவிகளின் மடங்களில் சேர தனது வீட்டை விட்டு வெளியேறினார். இந்த காலகட்டத்தில், தனது முதல் மந்திர ஆசிரியரான கெஸ்ட்ரபால் பாசக் மற்றும் ஜவகர்லால் தர் போன்ற சில மந்திரவாதிகளுடன் தொடர்பு கொண்டார். [3]
Remove ads
தொழில்

சக்ரவர்த்தி, கிரேட் பெங்கால் சர்க்கஸில் நகைச்சுவை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு தனது வேடிக்கையான தந்திரங்களால் பிரபலமானார். விரைவில் மந்திர தந்திரங்களைக் காட்டத் தொடங்கினார். இவரது இரண்டு செயல்களான "இல்லூஷன் பாக்ஸ்" மற்றும் "இல்யூஷன் ட்ரீ" பார்வையாளர்களை மயக்கியது. 1908 ஆம் ஆண்டு பிரியநாத் போஸின் சர்க்கஸுடன் இவர் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின் போது, இவரது சீட்டு கட்டு வித்தைகளும், தந்திரங்களும் மாய வித்தையும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டன.
இவர் தனது புகழ்பெற்ற தந்திரமான "காங்ஷா காரகர்" என்பதை உருவாக்கினார். [3]

இவர் அமானுசிய சக்திகளைக் கொண்டவர் என்று பார்வையாளர்கள் நம்பினர். பேராசிரியர் போஸின் சர்க்கஸில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இவர் எளிதில் கோபம் கொள்பவரகவும், கட்டுக்கடங்காத பேச்சும் கொண்டவர். இந்த இயல்பு காரணமாக, இவரது சகாக்கள் இவருக்கு துர்வாச முனி என்ற பட்டத்தை வழங்கினர். [4]
பின்னர், சக்ரவர்த்தி பேராசிரியர் போஸின் சர்க்கஸை விட்டு வெளியேறி, முன்னாள் கலைஞர்களைக் கொண்டு தனது சொந்த சர்க்கஸை உருவாக்கினார். இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பெரும் புகழையும் பணத்தையும் சம்பாதித்தார். [3]
Remove ads
பிற்கால வாழ்வு
சக்ரவர்த்தி தனது பிற்கால வாழ்க்கையில் கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள பராநகரில் ஒரு வீட்டையும் ஒரு கோயிலையும் கட்டினார். தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் ஆன்மீக நாட்டத்தில் கழித்தார். வங்காள மொழியில் 'யாதுபித்யா' என்ற புத்தகத்தில் எழுதினார். தனது சொத்தை ஸ்ரீ பூபேந்திர நாத் ராய் சௌத்ரிக்கு வழங்க முடிவு செய்தார்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads