கண்டங்கண்டை நீர்க்கோலி

From Wikipedia, the free encyclopedia

கண்டங்கண்டை நீர்க்கோலி
Remove ads

கண்டங்கண்டை நீர்கோலி அல்லது ஆசிய தண்ணீர் பாம்பு (Fowlea piscator) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு வகை ஆகும் இப்பாம்புகள் ஆசியாவில் காணப்படுகினறன.[1][3][4]

விரைவான உண்மைகள் கண்டங்கண்டை நீர்க்கோலி, காப்பு நிலை ...

இந்த பாம்பின் கண்கள் சிறியதாகவும், அதன் நாசியில் இருந்து குறைந்த தூரத்தில் இருக்கும். கண்களைச் சுற்றி கருவளையம் அமைந்திருக்கும். நடுத்தர அளவில் பளபளப்பான மேடான செதில்களைக் கொண்டிருக்கும். இதன் தலை கூர்மையாகவும், கழுத்திலிருந்து வேறுபட்டு தெரியும். உடலின் அடிப்பகுதி வெள்ளையாகக் காணப்படும். இதன் உடல் முழுவதும் சதுரங்க அட்டைப்போனறு புள்ளி அமைப்பு இருக்கும்.

Remove ads

வாழ்விடம்

இந்தப் பாம்புகள் நன்னீர் ஏரிகள், ஆறுகள் போன்ற இடங்களின் அருகில் காணப்படுகின்றன. இதன் உணவு சிறிய மீன் மற்றும் நீர்த் தவளைகள் ஆகும்.

பரவல்

இப்பாம்பினங்கள் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாக்கித்தான், இலங்கை, இந்தியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், மேற்கு மலேசியா, சீனா ( ஜேஜியாங், ஜியாங்சி, புஜியான் மாகாணம், குவாங்டாங், ஹைனன், குவாங்ஸி, யுன்னான் மாகாணங்கள்), தைவான், இந்தோனேசியா (சுமத்ரா, ஜாவா, போர்னியோ, சுலவேசி) போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

பல மொழிகளில் இதன் பெயர்

  • அஸ்சாமி - ঢোঁৰা সাপ
  • பெங்காலி - ঢোঁড়া সাপ
  • ஒரியா- ଧଣ୍ଡ ସାପ
  • குஜராத்தி - dendu saap
  • இந்தி - Dendu saap
  • இந்தோனேசியா - Bandotan
  • கன்னடம் - ನೀರು ಹಾವು
  • மராத்தி - दिवड
  • மலையாளம் - നീർക്കോലി
  • தெலுங்கு - నీరు కట్టు (neeru kattu)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads