கண்டசாலா, கிருஷ்ணா மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

கண்டசாலா, கிருஷ்ணா மாவட்டம்map
Remove ads

கண்டசாலா (Ghantasala), இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின், கிருஷ்ணா மாவட்டத்தில் அமைந்த ஊராகும்.

விரைவான உண்மைகள் கண்டசாலா தங்கசாலா, நாடு ...
Thumb
ஆந்திரப் பிரதேசத்தில் பௌத்த தூபிகள் மற்றும் சிற்பங்கள் அமைந்த ஊர்களில் கண்டசாலா கிராமமும் ஒன்றாகும்.

பௌத்த சமய தூபிகள் மற்றும் சிற்பங்கள் நிறைந்த கண்டசாலா கிராமம் மச்சிலிப்பட்டினத்திலிருந்து மேற்கே 21 கிலோ மீட்டர் தொலைவிலும், கிருஷ்ணா ஆற்றிலிருந்து கிழக்கே 11 கிலோ மீட்டர் தொலைவிலும், விஜயவாடா நகரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

Remove ads

வரலாறு

பிரித்தானிய இந்தியாவின் அதிகாரியான போஸ்வெல் என்பவர் கண்டசாலா ஊரை, பௌத்த சமய வரலாற்றுத் தொல்லியல் களமாக 1870 – 1871ல் அறிவித்தார். அலெக்சாண்டர் ரியா எனும் பிரித்தானிய தொல்லியல் அகழ்வாராய்ச்ச்சியாளர் 1919 – 1920களில் கண்டசாலாவில் அகழ்வாராய்ச்சி செய்த போது, கி பி 2 – 3-ஆம் நூற்றாண்டு காலத்திய 112 சுற்றளவும், 23 அடி உயரமும் கொண்ட பௌத்த தூபியும், சிதிலமடைந்த பௌத்த விகாரைகளும், சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டது.[2][3]

Remove ads

பொருளாதாரம்

கண்டசாலா ஊரின் முதன்மைப் பொருளாதாரம் கைத்தறி நெசவு ஆகும். இங்கு நெய்யப்படும் பருத்தி சேலைகள் இந்தியாவின் பல நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது.[4]

கோயில்

கண்டசாலா கிராமத்தில் ஜலதீஷ்வரர் கோயில் அமைந்துள்ளது.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads