கந்தசாமி பத்மநாபா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கந்தசாமி பத்மநாபா (Kandasamy Pathmanabha; 19 நவம்பர் 1951 19 சூன் 1990) என்பவர் ஈழ இயக்கங்களில் ஒன்றான (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைத் தோற்றுவித்தவரும் தலைவரும் ஆவார். இருப்பினும் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்க உறுப்பினர்கள் செயலாளர் நாயகம் க. பத்மநாபா என்றே அழைப்பர். இவருக்கு ரஞ்சன், சேரன், நாபா எனும் மாற்றுப் பெயர்களும் இருந்தன.

விரைவான உண்மைகள் கே. பத்மநாபா, பிறப்பு ...

ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம் லெனின் வழியிலான மார்க்சியம் கொள்கைகளின் அடிப்படையிலேயே ஈழ விடுதலைப் போராட்டத்தை கையில் எடுத்தது. அந்த மார்க்சிய கொள்கையின் படி உறுப்பினர்கள் தம்மை தோழர் என்றே ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. இதன்படி "தோழர் ரஞ்சன், தோழர் நாபா, தோழர் சேரன்" என்றும் உறுப்பினர்களால் அழைக்கப்பட்டார்.

Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

1951ம் ஆண்டு நவம்பர் 19ல் காங்கேசன்துறையில் பிறந்தார். இயக்கங்களிடையே தோன்றிய உள்முரண்பாட்டினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் 1990 யூன் 19ம் திகதி தமிழ்நாடு, சென்னை, கோடம்பாக்கத்தில் சக்காரியா காலனி எனும் இடத்தில் வைத்து கொல்லப்பட்டார். இவர் ஈழ விடுதலைப் போராட்டத்தை மார்க்சிய கொள்கைகளுக்கு அமைவாக முன்னெடுக்கும் கொள்கையைக் கொண்டிருந்த போதும், அதற்கு முரணான வகையில் இந்திய மத்திய அரசின் கொள்கைகளுக்கு இசைவாகவே நடந்தால் மட்டுமே தமது போராட்டத்தை முன்னெடுக்க முடியும் எனும் கொள்கையைக் கொண்டிருந்தார். இந்தியா இலங்கை தமிழர் பிரச்சினையை தமது பிராந்திய நலன் சார்ந்த நோக்குடன் முன்னகர்த்தியப் போது, அதனை புலிகள் ஏற்க மறுத்த போதும், இவர் இந்தியாவுக்கு இசைவாக அதனை ஏற்றார். இவ்வாறான கொள்கை அளவிலான வேறுபாடு பின்னாற்களில் முரண்பாடாக வெடித்தது.

Remove ads

இந்தியாவின் செல்வாக்கு

தமிழீழ விடுதலை இயக்கங்கள் இடையே ஈ. பி. ஆர். எல். எப் இயக்கமும் அதன் செயலாளர் நாயகம் க. பத்மநாபாவும் இந்திய மத்திய அரசின் மிகுந்த செல்வாக்கு பெற்று இருந்தது. பத்மநாபாவை பாதுகாப்பதிலும் இந்திய இராணுவம் முக்கியத்துவம் செலுத்தியது. இந்திய இராணுவம் இலங்கையில் காலூன்றி இருந்தவேளை அதனுடன் இணைந்து இயங்கிய மாற்று இயக்கங்களின் ஒன்றான ஈ. பி. ஆர். எல். எப்பின் அனைத்து வளங்களையும் இந்திய இராணுவமே முன்னின்று செய்தது. இந்தியாவில் இருந்து இலங்கையில் தன் இயக்க முகாம்களுக்கு வந்து போவதற்கான போக்குவரத்துக்கும், இந்திய இராணுவத்தின் உலங்கு வானூர்திகள் செயல்பட்டன. அதேவேளை இந்திய இராணுவத்துடன் இணைந்து புலிகளுக்கு எதிராக செயல்படவும் செய்தார். அவற்றில் "அமைதிக்கான யுத்தம்" எனும் பெயரில் இந்தியா இராணுவத்துடன் இணைந்து, புலிகளுக்கு எதிரான தாக்குதல்களும் உள்ளடங்கும்.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads