கனடாவின் முதல் குடிமக்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கனடாவின் முதல் குடிமக்கள் (First Nations (French: Premières Nations 16-ஆம் நூற்றாண்டில் கனடாவில் ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன்னர், பல்லாயிரம் ஆண்டுகளாக கனடாவில் தொடர்ந்து வாழும் கனடியப் பூர்வ குடிமக்களே கனடாவின் முதல் குடிமக்கள் ஆவார். இப்பூர்வ குடிமக்களில் செவ்விந்தியர்கள் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வட ஆசியாவிலிருந்து கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் புலம்பெயர்ந்தனர் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[2] பூர்வ குடிமக்களின் பண்பாட்டைப் பாதுகாத்தல், அரசியல், கல்வி, மொழி போன்றவற்றை வளர்த்தல், இவர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களைத் தடுத்தல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த, 23 டிசம்பர் 1994 அன்று ஐக்கிய நாடுகள் அவை இயற்றிய தீர்மானத்தின் படி, 1995-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், 9-ஆம் நாள் அன்று உலக பூர்வ குடிமக்கள் நாள் (International Day of the World’s Indigenous People) உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, மொழி(கள்) ...

கனடியப் பூர்வ குடிமக்கள் இன்யூட் மற்றும் மெடிஸ் என்று அழைக்கப்படுகின்றனர்.[3] கனடாவின் முதல் குடிமக்கள் ஒன்றாரியோ மற்றும் பிரிட்டிசு கொலம்பியா மாகாணங்களில் அதிகம் வாழ்ந்தனர்.[4] கனடாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி, கனடாவின் முதல் குடிமக்களான கனடியப் பூர்வ குடிமக்களை உடல் மற்றும் மன அளவில் கன்டாவின் முதல் குடிமக்களாகப் போற்றப்படுகின்றனர்.[5][6]

Remove ads

கனடாவின் மெட்டி இன முதல் குடிமக்கள்

மெட்டி மக்கள் ஐரோப்பிய பழங்குடி இனத்தவர்களுக்கு பிறந்தவர்கள்.[7] குறிப்பாக பிரஞ்ச்ப் பழங்குடியினருக்கு பிறந்தவர்கள்.[8] வரலாற்றில் மெட்டி மக்கள் பிரஞ்ச், ஸ்காட்லாந்து நாடுகளில் தோல் வணிக மக்களின் வழித்தோன்றல்கள் ஆவார். மெட்டி மக்கள் மெட்டி பிரஞ்ச் மொழி, கனடிய பிரஞ்ச் மொழி மற்றும் கன்டிய ஆங்கில மொழிகளை இன்றளவும் பேசுகின்றனர்.[9]

கனடா காலனியாதிக்கப் போர்கள்

Thumb
பிரஞ்ச் மற்றும் கன்டாவின் முதல் குடிமக்கள் மாநாடு

1740-ஆம் ஆண்டுகளில் கனடாவின் நிலத்தை சுரண்டுவதை எதிர்த்து கனடியப் பூர்வ குடிமக்கள், பிராஞ்ச் நாட்டு மற்றும் அதன் 6 கூட்டாளி நாட்டுப் படைகளுடன் பல போர்கள் செய்தனர்.[10]

1763-ஆம் ஆண்டில் கனடா பூர்வ குடிகள் நிலங்களை ஒப்பந்தம் மூலம் பிராஞ்ச் நாட்டவர்கள் விலை கொடுத்து வாங்கினர். இருப்பினும் பெரும்பாலான பூர்வ குடிமக்களின் நில உரிமை குறித்து இதுவரை தீர்வு எட்டப்படவில்லை

அடிமை முறை

1770களில் கனடாவின் முதல் குடிமக்களை பிற பூர்வ குடிகள் அடிமைப்படுத்தி, சமயச் சடங்குகளின் போது பலியிட்டனர். [11] .[12]

கனடாவின் பிராஞ்ச் நாட்டவர்கள் அடிமைப்படுத்திய பூர்வ குடி அடிமைகளை, தங்கள் கூட்டாளி நாட்டவர்களிடம் அன்பளிப்பாகப் பெற்றனர்.[13] ஆப்பிரிக்க கருப்பின அடிமைகளை விட கனடாவின் பிராஞ்ச் நாட்டவர்களிடம் கனடா பூர்வ குடிகள் எளிதாக அடிமையாக்கப்பட்டனர்.[14]). கனடாவின் பூர்வ குடிமக்களின் அடிமைப் பெண்களை பிராஞ்ச் நாட்டவர்கள் பாலியல் அடிமைகளாக கொடூரமாக நடத்தினர். 1793-இல் படிப்படியாக பூர்வ குடிகளை அடிமையாக்கும் முறை ஒழிக்கப்பட்டது. மேலும் பிற பகுதிகளிலிருந்து அடிமைகளை கன்டாவிற்கு கொண்டு வரும் முறைக்கு முடிவு கட்டப்பட்டது. ஆனால் ஏற்கனவே கனடாவில் அடிமைகளாக உள்ள குழந்தைகளை மட்டும் 25வது வயதில் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மற்றவர்களை சாகும் வரை அடிமைகளாக வைத்திருந்தனர்.[15] 1833-ஆம் ஆண்டில் கனடாவில் அடிமை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.[16] வரலாற்று அறிஞர் மார்சல் டியுடேல் என்பவர் அடிமைகள் குறித்து வைத்திருந்த 4092 ஆவணங்களின் படி, பிராஞ்ச் மற்றும் ஆங்கிலேயேர்களின் கையில் 2692 கனடா பூர்வ குடிமக்கள் மற்றும் 1400 ஆப்பிரிக்க கருப்பின அடிமைகள் இருந்ததாக கூறுகிறார். பூர்வ குடிமக்களுக்கும், பிராஞ்ச் நாட்டவர்களுக்கும் இடையே 31 திருமணங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அரசியல் அமைப்புகள்

கனடியப் பழங்குடி மக்களுக்கான தன்னாட்சி அமைப்பில் கல்வி வாரியம், சுகாதார வாரியம் மற்றும் நகராட்சி ஆகிய அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.[17]

Thumb

கனடா பூர்வ குடிமக்களின் முதல் மன்றத்தின் நோக்கம், பூர்வ குடிகளின் உரிமைகள் காத்தல், வழிபாட்டு உரிமை, வழிபாடு மற்றும் சடங்கு செய்யும் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் தங்களை கனடாவின் முதல் குடிமக்கள் என்ற உரிமை காத்தல் ஆகும்.

Remove ads

மக்கள் தொகை பரம்பல்

20-ஆம் நூற்றாண்டில் கனடாவின் பூர்வ குடிகள் மக்கள் தொகை 10 மடங்காக உயர்ந்துள்ளது.[18] 1900- 1950 ஆண்டுகளுக்கு இடையில் இவர்களின் மக்கள் தொகை 25% மட்டும் உயர்ந்தது. 1960-ஆம் ஆண்டில் சிசு இறப்பு தொகை குறைந்தபடியால், மக்கள் தொகை 161% அளவிற்கு உயர்ந்தது.

2016-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கனடா வின் முதல் குடிமக்களின் மக்கள் தொகை 16,73,785 ஆகவுள்ளது. இது கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 4.9% ஆகும்.[19] கனடாவின் பூர்வ குடிகள் அல்லாதோர் ஆளும் கனடா அரசு, பூர்வ குடிமக்களை நாட்டின் முதல் குடிமக்களாக ஏற்றுச் செய்துகொண்ட ஒப்பதங்கள் மூலம், கனடியப் பழங்குடி மக்கள் வாழ்வதற்கு நகர் புறங்களிலும், கிராமப் புறங்களில் அரசு தனி குடியிருப்பு பகுதிகள் ஒதுக்கியது.

Remove ads

கனடா உறைவிடப் பள்ளிகள்

கனடா நாட்டின் முதல் குடிமக்களான கனடியப் பழங்குடி மக்களின் குழந்தைகளை அவர்தம் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து, கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளில் தங்க வைத்து உணவு, உடை மற்றும் கல்வி வழங்குவதுடன் மட்டுமின்றி, பழங்குடியின குழந்தைகள் தங்கள் தாய் மொழிகளில் பேசுவதை நிறுத்தவும், ஆங்கிலம் பிரஞ்ச் போன்ற மேற்கத்திய மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் பயிற்சி 1870 aandu muthal வழங்குகிறது. பொதுவாக பழங்குடியின குழந்தைகளிடமிருந்து தாய் மொழி, வழிபாடு, பண்பாடு மற்றும் நாகரித்தை மறக்கடிக்கவும், பழங்குடியின குழந்தைகளிடம் மேற்கத்திய கல்வி, பண்பாடு மற்றும் நாகரிகத்தை திணிப்பதே இந்த உறைவிடப் பள்ளிகளின் நோக்கம் ஆகும்.[20]

கனடியப் பழங்குடி குழந்தைகளுக்கான இந்த உறைவிடப் பள்ளிகள் கனடா அரசின் நிதி உதவியுடன் கத்தோலிக்கம் போன்ற கிறித்துவத் திருச்சபைகளால் 1876-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டது.[21]

இப்பள்ளியின் நோக்கங்களை மீறிய பழங்குடியின குழந்தைகளை, தங்கள் வழிக்கு கொண்டு வர கடுமை தண்டனைகள் வழங்குவதால், பல குழந்தைகள் இறந்து விடுகின்றனர். அவ்வாறு இறந்த குழந்தைகளை பள்ளிக்கு அருகே சவக்குழிகளில் புதைத்து விடுகின்றனர். மேலும் உறைவிடப் பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகளை காண அவர்தம் பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தங்கள் குழந்தைகளின் நிலையைப் பெற்றோர்களால் அறிய முடியவில்லை. எனவே பள்ளிக் குழந்தைகளின் பெறோர் இந்த கட்டாய உறைவிடப் பள்ளி முறையை எதிர்த்தனர்.[22] உறைவிடப் பள்ளிகளுக்கு பதிலாக, குழந்தைகள் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு வரும் வகையில் சாதாரண பகல் நேரப் பள்ளிகளை துவக்குமாறு கோரிக்கை வைத்தனர்.ஆனால் கனடா அரசும், கத்தோலிக்கத் திருச்சபைகளும் இக்கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.:669–674[23]}}[24][25]:42 ஒரு நூற்றாண்டுக்கு மேலாக செயல்பட்ட இந்த உறைவிடப்பள்ளிகளில், 1,50,000 கனடாவின் பூர்வ குடிகளின் குழந்தைகள் தங்கிப் படித்தனர்.:2–3 1930களில் இந்த உறைவிடப்பள்ளிகளில் பூர்வ குடிமக்களின் 30% குழந்தைகள் படித்தனர்.[26] போதிய ஆவணம் இல்லாத நிலையில் இப்பள்ளி வளாகங்களில் இறந்த கனடா பூர்வ குடிகளின் குழந்தைகளின் எண்ணிக்கை 3,200 முதல் 30,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள்து.[27][28] பின்னர் பழங்குடியின மகக்ளின் தொடர் போராட்டத்தால், கனடா அரசு இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட அனுமதி மறுத்தது. எனவே இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டை 1960 முதல் 1988-ஆம் ஆண்டு வரை படிப்படியாக நிறுத்தப்பட்டது.

2021 கனடா பூர்வ குடிகள் உறைவிடப் பள்ளிகளில் பிணக்குழிகள் கண்டுபிடிப்பு

கனடா நாட்டின் பிரிட்டிசு கொலம்பியா, சஸ்காச்சுவான் மற்றும் மானிட்டோபா மாகாணங்களில் கிறித்துவச் சபைகளால் 1863 முதல் 1998-ஆம் ஆண்டு வரை இயங்கிக் கொண்டிருந்த கனடியப் பழங்குடி குழந்தைகளுக்கான உறைவிடப்பள்ளி வளாகங்களின் தரைக்கு அடியில் உள்ள பொருட்களை ஆய்வு செய்யும் திறன் படைத்த ரேடர் கருவிகளைக் கொண்டு மே மற்றும் சூன் 2021 மாதங்களில் ஆய்வு செய்கையில், செவ்விந்தியர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கனடியப் பழங்குடி குழந்தைககளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பண்பாட்டுப் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின குழந்தைகளில் 3 வயது குழந்தைகளும் அடங்கும். கனடாவின் பழங்குடி மக்களை மறைமுகமாக கிறித்துவ மத மாற்றத்திற்காக, பழங்குடி மக்களின் மொழி, பண்பாடு ஆகியவைகளை அழித்து, ஐரோப்பிய பண்பாடு, கிறித்துவச் சமயத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றவும் இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டது. கனடா அரசு உறைவிடப் பள்ளிகளின் வளாகப் புதைகுழிகளில் மரணித்த 2,800 குழந்தைகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது.[29]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads