கனடியத் தமிழர் அரசியல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கனடியத் தமிழர் அரசியல் என்பது கனடா வாழ் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் ஆகும். இதில் கனடிய உள்ளூர் அரசியல், பூர்விகத் தாயகங்கள் தொடர்பான அரசியல் என இரு முக்கிய பகுதிகளைப் பார்க்கலாம். குறிப்பாக கனடிய ஈழத் தமிழர்களால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிரான அரசியல் நகர்வுகள், எதிர்ப்புப் போராட்டங்கள் இதில் முக்கியம் பெறுகின்றன.

கனேடியத் தமிழர்
கனேடியத் தமிழர்
நபர்கள்
பரம்பல்
அரசியல்
பொருளாதாரம்
பண்பாடும் கலைகளும்
கல்வி
தமிழ்க் கல்வி
சமூக வாழ்வு
அமைப்புகள்
வரலாறு
வரலாற்றுக் காலக்கோடு
குடிவரவு
எதிர்ப்புப் போராட்டங்கள்
இலக்கியமும் ஊடகங்களும்
இலக்கியம்
வானொலிகள்
இதழ்கள்
நூல்கள்
திரைப்படத்துறை
தொலைக்காட்சிச் சேவைகள்
நிகழ்வுகள்
தமிழ் மரபுரிமைத் திங்கள்
ரொறன்ரோ தமிழியல் மாநாடு
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்
Remove ads

வரலாறு

தொழில்வாய்ப்புக் கருதி 1960 கள் தொடக்கம் 1980 கள் வரை தமிழ்நாட்டில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் இங்கு குடிவந்த தமிழர்கள் அரசியலில் அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லை.[1] ஆனால் 1980 களுக்குப் பின்பு இங்கு குடிவந்த ஈழத்தமிழர்கள் கூடிய அரசியமயப்பட்டு செயற்பட்டார்கள்.[1] பல்கலைக்கழகம், கல்வித்திணைக்களம், நகராட்சி, மாகாணம், நாடு என அனைத்து நிலைகளிலும் தமிழர்கள் மைய நீரோட்டத் தேர்தல்களில் பங்குபெற்றார்கள்.

Remove ads

சிக்கல்கள்

ஈழப் போராட்டம்

கனடியத் தமிழர்களில் ஈழத்தை பூர்விகமாகக் கொண்டேரின் ஒரு பெரும் அரசியல் அக்கறையாக ஈழப் போராட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. ஈழப் போராட்டத்தின் பல்வேறு தரப்புகளும் தமது செயற்பாடுகளைக் இங்கு மேற்கொண்டுவருகிறார்கள். 2008-2009 இறுதிப் போரின் நடந்த தமிழர் இனவழிப்பை எதிர்த்து பெரும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கனடிய வரலாற்றில் நடந்த மிகப் பெரிய தொடர்ச்சியான எதிர்ப்போட்டங்களில் இவையும் அடங்கும். போரின் இறுதிக்குப் பின்பு கனடிய அரசின் வெளிநாட்டு/குடிவரவு கொள்கைகளில், அனைத்துல அமைப்புகளின் செயற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் வண்ணம் பல்வேறு செயற்பாடுகளில் தமிழர் அரசியல் அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

குடிவரவு

தமிழர்கள் கனடாவிற்கு குடிவரவுது, தமது குடும்ப உறவினர்களை இங்கு அழைப்பது தொடர்பான சட்டங்கள், குடிவந்தவர்களுக்கான சேவைகள் ஒரு முக்கிய அக்கறையாக இருக்கின்றன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads