கனேடியத் தமிழர்

From Wikipedia, the free encyclopedia

கனேடியத் தமிழர்
Remove ads

தமிழ் பின்புலத்துடன் கனடாவில் வசிப்பவர்களை கனேடியத் தமிழர் (Canadian Tamils / Tamil Canadians) எனலாம். கனேடியத் தமிழரை குறிக்க கனடிய தமிழர், கனடாத் தமிழர், தமிழ் கனேடியர்கள் என்று வெவ்வேறு சொற்றாடல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு சமூக அடையாளமே, சட்ட அடையாளம் அல்ல. 2011 ஆம் ஆண்டு கனேடிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஏறக்குறைய 218,000 தமிழர்கள் டொராண்டோ, ஒன்டாரியோவில் வசிப்பதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன.[1] பெரும்பாலான தமிழர்கள் டொராண்டோ நகரத்திலேயே வசிக்கின்றார்கள். பிறரும் மொன்றியால், வன்கூவர், கல்கிறி போன்ற பெரும் நகரங்களிலேயே வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் 80களின் பின்பு ஈழப் போராட்டம் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள். சனவரி மாதம் தமிழ்ப் பண்பாட்டு மாதமாக கனடா முழுவதும் கொண்டாடப்படுகிறது.[2][3][4]

Thumb
பாரம்பரிய உடையில் கனேடியத் தமிழ் இளையோர்கள்
கனேடியத் தமிழர்
கனேடியத் தமிழர்
நபர்கள்
பரம்பல்
அரசியல்
பொருளாதாரம்
பண்பாடும் கலைகளும்
கல்வி
தமிழ்க் கல்வி
சமூக வாழ்வு
அமைப்புகள்
வரலாறு
வரலாற்றுக் காலக்கோடு
குடிவரவு
எதிர்ப்புப் போராட்டங்கள்
இலக்கியமும் ஊடகங்களும்
இலக்கியம்
வானொலிகள்
இதழ்கள்
நூல்கள்
திரைப்படத்துறை
தொலைக்காட்சிச் சேவைகள்
நிகழ்வுகள்
தமிழ் மரபுரிமைத் திங்கள்
ரொறன்ரோ தமிழியல் மாநாடு
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்
Remove ads

வரலாறு

பரம்பல்

பெரும்பான்மைத் தமிழர்கள் ஒன்ராறியோ மாகாணத்தில் வாழ்கிறார்கள். அதற்கு அடுத்ததாக கியூபெக்கிலும், பிரிட்டிசு கொலம்பியாவிலும் வாழ்கிறார்கள். தமிழர்கள் பொதுவாக பெரும் நகரங்கள், அல்லது புறநகர்ப் பகுதிகளிலேயே பெரும்பாலும் வசிக்கிறார்கள்.

பேசும் மொழி

ஏறக்குறைய 218,000 தமிழ் மக்களில் 164,000 பேர் வீட்டில் தமிழை முதன்மை மொழியாகவும், 45,000 கூடுதலாகப் பேசுவதாகவும் கனேடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.[1]

அரசியல்

கனடியத் தமிழர்களின் அரசியலில் கனடிய உள்ளூர் அரசியல், பூர்வீகத் தாயகங்கள் தொடர்பான அரசியல் என இரு முக்கிய பகுதிகளாகப் பார்க்கலாம். குறிப்பாக கனடிய ஈழத் தமிழர்களால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிரான அரசியல் நகர்வுகள், எதிர்ப்புப் போராட்டங்கள் இதில் முக்கியம் பெறுகின்றன.

பொருளாதாரம்

பெரும்பாலான கனடியத் தமிழர்கள் உணவகங்கள், தொழிற்சாலைகள், வியாபார அங்காடிகள், சுத்தம் செய்யும் சேவை நிறுவனங்கள் ஆகியவற்றில் தொழிலாளிகளாக வேலைச் செய்கின்றார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் சிறு பொருள் சேவை வியாபார தாபனங்களை தொடங்கி நடத்தி வருகின்றார்கள். பெரும்பானமையானவை தமிழ் சமூகத்துனுள்ளேயே தங்களை சந்தைப்படுத்துகின்றார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் மருத்துவம், நீதித்துறை, பொறியியல் போன்ற உயர் தொழில் திறனும் கல்வியும் வேண்டிய துறைகளில் இயங்கி வருகின்றார்கள்.

Remove ads

கல்வி

குடிவரவுச் சூழ்நிலை, தலைமுறை சார்ந்து கனடியத் தமிழ்ச் சமூக கல்வி நிலைமை நிறைய வேறுபடுகிறது. ஈழப் போராட்டம் காரணமாக இங்கு தமது இளைய பருவத்தில் குடிபெயர்ந்தவர்கள் பலர் பொருளாதாரச் சுமை காரணமாக உயர் கல்வியைப் பெறவில்லை. இங்கு பிறந்த அடுத்த தலைமுறையினரில் பெரும்பான்மையினர் பல்கலைக்கழக அல்லது உயர்-கல்லூரிப் படிப்புக்களை மேற்கொள்கிறார்கள்.

தமிழ்க் கல்வி

கனடாவில் தமிழ்க் கல்வி 1980 களில் இறுதியில் இருந்து நடைபெறுகிறது. இங்கு பல தன்னார்வல, அரச தமிழ் வகுப்புகள், தமிழ் கல்வித் திட்டங்கள் உண்டு. வசதிகள் பல இருந்தும் இங்கு பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் தமிழ்க் கல்வியைப் பெறுவதில்லை. ஒரு கணிப்பின் படி 33,000 தமிழ்ச் சிறார்களில் ஏறக்குறைய 20,000 பிள்ளைகள் தமிழ் படிப்பதில்லை.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads