கனோவிட் மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கனோவிட் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Kanowit; ஆங்கிலம்: Kanowit District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சிபு பிரிவில்; ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கனோவிட் நகரம்.[1][2]

இந்த மாவட்டத்தின் முக்கிய இனக்குழுக்கள்: இபான், சீனர், மலாய்க்காரர் மற்றும் மெலனாவ் பூர்வீக மக்கள்.
ராஜாங் ஆறு இந்த மாவட்டத்தின் வழியாகத்தான் செல்கிறது. வரலாற்றுப் பதிவுகளின்படி, 1851-ஆம் ஆண்டு எம்மா கோட்டை (Fort Emma) கட்டப்பட்டதில் இருந்து கனோவிட் மாவட்டத்தின் வரலாறு தொடங்குகிறது.
Remove ads
வரலாறு
வெள்ளை ராஜா ஜேம்சு புரூக், 1846-ஆம் ஆண்டில் கூச்சிங் வந்தார். அப்போது கூச்சிங் பகுதியின் எல்லைப் பகுதிகளை டயாக் கடற்கொள்ளையர்கள் (Dayak Pirates) அடிக்கடி அச்சுறுத்தி வந்தனர்.
அவர்களை அமைதிப் படுத்துவதற்கு, ஜேம்சு புரூக் ராஜாங் ஆற்றின் வழியாகக் கானோவிட் பகுதிக்குச் சென்றார். அவருக்கு அப்போது உதவியாக இருந்தவர் கேப்டன் ரோட்னி முண்டி (Captain Rodney Mundy).
1846 ஜூன் 29-ஆம் தேதி கனோவிட் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அங்குள்ள கனோவிட் மக்களுடன் நல்ல முறையில் நட்பு பாராட்டினர். 1851-ஆம் ஆண்டில், ஜேம்சு புரூக் அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார். அதன் பெயர் எம்மா கோட்டை. அப்போது கானோவிட் நிலப்பகுதி, புரூணை பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.
டயாக் மக்கள்
1853-ஆம் ஆண்டில், ஜேம்சு புரூக், புரூணை சுல்தானகத்திடம் இருந்து ராஜாங் ஆற்றின் நிலப்பகுதிகளைப் பெற்றுக் கொண்டார். ஏற்கனவே கட்டப்பட்ட எம்மா கோட்டை, ராஜாங் ஆற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு டயாக் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு அளித்து வந்தது.
இதைத் தொடர்ந்து, 1870-களில், சிங்கப்பூர் மற்றும் சீனாவின் புஜியான் மாநிலத்தைச் சேர்ந்த ஹொக்கியன் சீனர்கள் (Hokkien Chinese) கனோவிட்டில் குடியேறினார்கள். கனோவிட் மாவட்டம் வளர்ச்சி பெறத் தொடங்கியது.
Remove ads
கனோவிட் காட்சியகம்
- கனோவிட் ஆறும் ராஜாங் ஆறும் கலக்கும் இடம்
- மீன் சிலை நினைவுச் சின்னம்
- கனோவிட் நகரம்
- கனோவிட் மருத்துவமனை
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads