கம்போங் கெரிஞ்சி

கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள ஒரு புற நகரம். From Wikipedia, the free encyclopedia

கம்போங் கெரிஞ்சிmap
Remove ads

கம்போங் கெரிஞ்சி அல்லது தெற்கு பங்சார் (மலாய்; Kampung Kerinchi அல்லது Bangsar Selatan; ஆங்கிலம்: Kampung Kerinchi அல்லது Bangsar South என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ள ஒரு புற நகரம்.

விரைவான உண்மைகள் கம்போங் கெரிஞ்சி Kampung Kerinchi, நாடு ...

இந்தப் புறநகரம், லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதி ஆகும். பங்சார் பெருநகரப் பகுதிக்கு தெற்கே அமைந்துள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிக முக்கியமான புறநகரப் பகுதியாகவும் விளங்குகிறது.

லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதிக்கு அருகில் உள்ள மக்களவைத் தொகுதிகள் செபுத்தே மக்களவைத் தொகுதி, சிகாம்புட் மக்களவைத் தொகுதி, மற்றும் புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதி ஆகிய தொகுதிகள் ஆகும்.

Remove ads

பொது

இந்தப் புறநகர்ப் பகுதி, மெனாரா டெலிகாம் (Menara Telekom) மற்றும் மிட் வேலி மெகாமாலுக்கு (Mid Valley Megamall) அருகில் அமைந்துள்ளது; அருகிலுள்ள மற்ற குறிப்பிடத்தக்க அடையாளங்கள் அங்காசாபுரி கட்டிடம் மற்றும் மலாயா பல்கலைக்கழகம் ஆகும்.

விஸ்தா அங்கசா (Vista Angkasa) அடுக்குமாடி குடியிருப்புகள், கம்போங் கெரிஞ்சி அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஸ்ரீ அங்காசா (Sri Angkasa) அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை அருகாமையில் இருக்கும் குடியிருப்புத் திட்டங்களாகும்.

மேம்பாட்டுத் திட்டங்கள்

கம்போங் கெரிஞ்சி வீடுமனைத் திட்டத்தில் பல நவீன அலுவலகக் கோபுரங்கள்; நடுத்தர முதல் உயர்நிலை குடியிருப்புகள்; மற்றும் வணிக இடங்களும் உள்ளன.

2007-ஆம் ஆண்டில் கட்டுமானத்திற்கு முன், யுஓஏ குழு (UOA Group) மேம்பாட்டாளர் குழுமத்தினர்; கம்போங் கெரிஞ்சியை மேம்படுத்தல் மற்றும் நிலத்தை இயற்கைச் சூழலுக்கு ஏற்ப செம்மைச் செய்யும் பணிகளை மேற்கொண்டது. அவற்றுள் முக்கிய அணுகல் சாலைகளை அகலப்படுத்துதல்; மற்றும் புதிய பாதசாரி நடைபாதைகள் அகலப்படுத்துதல்; போன்ற முயற்சிகளில் ஈடுபட்டனர்.[1]

புதிய பந்தாய் விரைவுச்சாலை

பந்தாய் டாலாம் கிள்ளான் பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளுடன் புதிய பந்தாய் விரைவுச்சாலை (New Pantai Expressway) மற்றும் கோலாலம்பூர் - கிள்ளான் நெடுஞ்சாலை (Kuala Lumpur–Klang Highway) போன்ற சாலைகளின் வழியாக நன்கு இணைக்கப்பட்டு உள்ளது.

Remove ads

போக்குவரத்து

கம்போங் கெரிஞ்சி குடியிருப்புப் பகுதிகள்; கிளானா ஜெயா வழித்தடத்தின்  KJ18  கெரிஞ்சி எல்ஆர்டி நிலையம் (Kerinchi LRT Station);  KJ19  யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் (Universiti LRT Station); ஆகியவற்றுடன் பாதசாரி பாலம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

காட்சியகம்

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads