சிகாம்புட் மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிகாம்புட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Segambut; ஆங்கிலம்: Segambut Federal Constituency; சீனம்: 泗岩沫国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P117) ஆகும்.
சிகாம்புட் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து சிகாம்புட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
Remove ads
சிகாம்புட்
சிகாம்புட் புறநகர்ப் பகுதி, மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சி கூட்டமைப்பில் உள்ள ஒரு முக்கிம்; ஒரு புறநகரம்; அத்துடன் கோலாலம்பூர் கூட்டாட்சியின் துணை மாவட்டமும் ஆகும்.
மலேசியாவில் மக்கள் அதிகமாகவும்; நெருக்கமாகவும் வாழும் நகரங்களில் சிகாம்புட் நகரமும் ஒன்றாகும். சிகாம்புட் புறநகர்ப் பகுதி தனி ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
பண்டார் மஞ்சளாரா
1974-ஆம் ஆண்டுக்கு முன்பு சிகாம்புட் நகர்ப்பகுதி பத்துமலை துணை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது கோலாலம்பூர் மாநகரம் சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
சிகாம்புட் புறநகர்ப் பகுதியில் மாண்ட் கியாரா; ஸ்ரீ கியாரா போன்ற உயர்தர மனைவீடுக் கட்டடங்கள் உள்ளன. தாமான் ஸ்ரீ சிகாம்புட்; பண்டார் மஞ்சளாரா போன்ற நடுத்தர மனைவீடுகள் உள்ளன. சிகாம்புட் டாலாம்; கம்போங் சுங்கை பெஞ்சாலா போன்ற கிராமப்புற வீடுகளும் உள்ளன. சிகாம்புட் மக்களவைத் தொகுதியில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.[4][5][6]
Remove ads
சிகாம்புட் மக்களவைத் தொகுதி
Remove ads
சிகாம்புட் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

சிகாம்புட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads