பந்தாய் டாலாம்
கோலாலம்பூரில் புறநகரப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பந்தாய் டாலாம், (மலாய்: Pantai Dalam; ஆங்கிலம்: Pantai Dalam; சீனம்: 班底达兰'); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ள ஒரு புற நகரம். லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியும் ஆகும். பங்சார் பெருநகரப் பகுதிக்கு தெற்கே அமைந்துள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிக முக்கியமான புறநகரப் பகுதியாக விளங்குகிறது. லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதிக்கு அருகில் உள்ள மக்களவைத் தொகுதிகள் செபுத்தே மக்களவைத் தொகுதி, சிகாம்புட் மக்களவைத் தொகுதி, மற்றும் புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதி ஆகிய தொகுதிகள் ஆகும்.
2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி லெம்பா பந்தாய் மொத்த மக்கள் தொகை 148,094 ஆகும்.
Remove ads
பொது
பந்தாய் டாலாம் என்ற பெயர் கம்போங் பாம் தாய் டாலாம் (Kampung Pam Thai Dalam) என்பதில் இருந்து பெறப்பட்டது. இந்த இடம் ஆரம்பத்தில் பந்தாய் டாலாம் மையத்தில் அமைந்து இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக அறியப்பட்டது.
2020-இல், பந்தாய் டாலாம் மக்கள் தொகை இன வாரியாக[2]
இதர இனத்தவர் (0.79%)
Remove ads
பிரிவுகள்
பங்சார்
லெம்பா பந்தாய் தொகுதியின் (Lembah Pantai Constituency) கீழ் வரும் மிகவும் பிரபலமான பகுதிகளில் பங்சார் தொகுதியும் ஒன்றாகும். இந்தப் பகுதி ஒரு பிரபலமான மேல்நிலை குடியிருப்பு பகுதி; மற்றும் ஒரு பொழுதுபோக்கு பகுதியும் ஆகும்.
பந்தாய் டாலாம்
பந்தாய் டாலாம் பகுதியில் பெரிய குடியிருப்புப் பகுதியை உருவாக்கும் பல சிறிய குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. அவற்றின் பட்டியல்:
- பந்தாய் ஹில்பார்க் - Pantai Hillpark
- கம்போங் பந்தாய் - Kampung Pantai
- பிபிஆர் ஸ்ரீ பந்தாய் - PPR Sri Pantai
- பிபிஆர் பந்தாய் ரியா - PPR Pantai Ria
- பிபிஆர் ஸ்ரீ செம்பாக்கா - PPR Sri Cempaka
- பிபிஆர் கெரிஞ்சி - PPR Kerinchi
- தேசா அமான் 1 & 2 - Desa Aman 1 & 2
- பந்தாய் முர்னி - Pantai Murni
- தாமான் புக்கிட் அங்காசா - Taman Bukit Angkasa
- பந்தாய் பாரு - Pantai Baru
- கம்போங் பாசிர் - Kampung Pasir
- தாமான் பந்தாய் டாலாம் - Taman Pantai Dalam
- தாமான் பந்தாய் இண்டா - Taman Pantai Indah
- பிபிஆர் கம்போங் லீமாவ் - PPR Kampung Limau
- பந்தாய் பனோரமா - Pantai Panorama Condominium
- காப்ரி பிரேசர் - Capri Fraser
- கமலியா அபார்ட்மெண்ட் - Camellia Apartment
- கேஎல் கேட்வே - KL Gateway
- கொண்டோ ராக்யாட் டேசா பந்தாய் - Kondo Rakyat Desa Pantai
- பந்தாய் செண்ட்ரல் பார் - Pantai Sentral Park
பந்தாய் டாலாம் சொகுசு குடியிருப்புகள்
பந்தாய் டாலாம் (Pantai Dalam) நகர்ப்புறத்தில் பெரும்பான்மையோர் மலாய்க்காரர்கள். இவர்களில் இரு தரப்பினர்: வசதியானவர்கள் ஒரு தரப்பினர்; மற்றும் தொழிலாளர் வர்க்கத்தினர் இன்னொரு தரப்பினர். வசதியானவர்கள் உயர் அடுக்குமாடி சொகுசு குடியிருப்புப் பகுதியில் உள்ளனர்.
வசதியானவர்கள், பந்தாய் இல்பார்க்கில் (Pantai Hillpark) உள்ள அண்டலூசியா அடுக்குமாடி வீடுகள் (Andalusia Condominium); கம்போங் பந்தாய் (Kampung Pantai), பந்தாய் ஆல்ட் (Pantai Halt) சொகுசு பங்களாக்களில் வாழ்கின்றனர்.
தொழிலாளர் வர்க்கத்தினர்
தொழிலாளர் வர்க்கத்தினரைப் பொறுத்தவரை, அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் குறைந்த கட்டண அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.
இந்தப் பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள்:
- பல வருடங்களுக்கு முன்னர் குடியிருந்த வீடுகளில் இருந்து மீள்குடியேற்றப்பட்டவர்கள்; மக்கள் வீட்டுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு விற்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலாளர்கள்.
- மலாயா பல்கலைக்கழக மாணவர்கள்.
- போலீஸ் அதிகாரிகள்/பணியாளர்கள்; (தேசா அமான் 1 & 2-இல்).
புதிய பந்தாய் விரைவுச்சாலை
பந்தாய் டாலாம் கிள்ளான் பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளுடன் புதிய பந்தாய் விரைவுச்சாலை (New Pantai Expressway) மற்றும் கோலாலம்பூர் - கிள்ளான் நெடுஞ்சாலை (Kuala Lumpur–Klang Highway) போன்ற சாலைகளின் வழியாக நன்கு இணைக்கப்பட்டு உள்ளது.
லெம்பா பந்தாய் தொகுதியின் மற்ற பகுதிகள்
- தென் பங்சார் (Bangsar South),
- புக்கிட் அமான் (Bukit Aman),
- கேஎல் எக்கோ சிட்டி (KL Eco City),
- மிட் வெளி சிட்டி (Mid Valley City)
- பெர்டானா தாவரவியல் பூங்கா (Perdana Botanical Gardens)
Remove ads
போக்குவரத்து
பொது போக்குவரத்து
கிளானா ஜெயா தடத்தில் உள்ள 4 எல்ஆர்டி (LRT) நிலையங்கள்:
- KJ17 அப்துல்லா உக்கும்,
- KJ18 கெரிஞ்சி
- KJ19 யுனிவர்சிட்டி;
கோலா கிள்ளான் தடத்தில் உள்ள 3 கேடிஎம் (KTM) நிலையங்கள்:
- KD01 அப்துல்லா உக்கும்,
- KD02 அங்காசாபுரி,
- KD03 பந்தாய் டாலாம்
- KD04 பெட்டாலிங்
சிரம்பான் தொடருந்து சேவை 1 கேடிஎம் (KTM) நிலையம்:
- KB01 மிட் வேலி கொமுட்டர் நிலையம்.
காட்சியகம்
- தெற்கு பந்தாய் டாலாம்
- பிபிஆர் பந்தாய் ரியா
- டெலிகோம் கோபுரம்
- பந்தாய் டாலாம் நிலையம்
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads